மித்தெனிய  ஏற்றுமதி விவசாய  பயிர் தோட்டம்.

தொடர்பு கொள்ளலுக்கான விபரங்கள்

ஏற்றுமதி  விவசாய பயிர் தோட்டம் , ஹங்கம வீதி,  மித்தெனிய  82270.
தொலைபேசி  இல : 0472248126
மின்னஞ்சல் : deamiddeniya@gmail.com

கண்ணோட்டம்

மித்தெனிய ஏ.விவசாய பயிர் தோட்டம் ஹம்பந்தோட்டை மாவட்டத்தில் கடுவான பிரதேச செயலகப் பிரிவில் அயைப் பெற்றுள்ளது. கறுவா, மிளகு, சிட்ரனெல்லா,  லெமன் கிராஸ், மற்றும் பாக்கு போன்ற  எற்றுமதி விவசாய பயிர்கள் உலர்வலய செயன்முறை பயிற்சி தோட்டத்தில் பராமரிப்பு செய்யப்படுகின்றது. ஏற்றுமதி விவசாய திணைக்களத்தின் மத்திய நாற்று மேடை மேலே குறிப்பிடப்பட்டுள்ள பயிர்களின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு இன வகைகளின் இன விருத்திக்கான தோட்டத்தையும் பராமரிக்கின்றது. ஆராய்ச்சி மற்றும் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக கள பரிசோதனைகளுக்கான நிலத்தையும் இந்த தோட்டம் வழங்குகின்றது. மேலும் இது மிளகு செய்கையின் மத்திய பதனிடல் நிலையமாகவும் செயற்படுகின்றது.

மொத்த நிலப்பரப்பு  25 ஏக்கர்களாகும்.

நில ஒழுங்கமைப்பு

கிராமினே சேகரிப்பு – இலங்கை மற்றும் ஜவா சிட்ரனெல்லா தெரிவுகள் லெமன் கிரஸ் செடிகள் தெரிவுகள் மற்றும் பயிர் செய்கை செயன் முறைகள் போன்றவற்றிக்கு மொத்தமாக 25 ஏக்கர் நிலம் காணப்படுகின்றன.

கறுவாச் செய்கை – பலோல்பிடிய தேசிய கறுவா ஆராய்ச்சி நிலையத்தில் மேற்கொண்டுள்ள ஆய்வுகள் முன்னெடுத்துச் செல்லப்டுவதுடன் கறுவாச் செய்கையின் செயன்முறை மற்றும் ஆய்வு தொகுதிகள் காணப்படுகின்றன.

மிளகுச் செய்கை – மாத்தளை மத்திய ஆய்வு நிலையத்தில் மேற்கொள்ளப்படுகின்ற ஆய்வுகள்  முன்னெடுக்கப்பட்டு செல்வதுடன் மிளகு செய்கையில்  மாதிரித் தோட்டம் மிளகு வகை சேகரிப்பு மற்றும் ஆய்வுத் தொகுதிகள்.  – பாக்கு செய்கை பிரதேசம் மொத்தமாக 0.5 ஏக்கர்களாகும்.

நாற்றுமேடை மற்றும் தாய் மரத் தோட்டங்கள் – பிரதானமாக கறுவா, மிளகு பாக்கு, என்பன  இந்த நாற்று மேடையில்  இனப் பெறுக்கம் செய்யப்படுகின்றன. மேம்படுத்தப்பட்ட இனங்களை போலவே பாரம்பரிய இனங்களும் மாவட்டத்தில் நிலவும் கேள்வியை பூர்த்தி செய்யும் வகையில் இனப் பெறுக்கம் செய்யப்படுகின்றன. இனவிருத்தி பொருட்கள் தாய் மரதோட்டத்தில் நன்கு பராமரிக்கப்படுவதில் இருந்து வழங்கப்படுகின்றன. பாதுகாக்கப்ட்ட கானக பிரதேசம் மற்றும் வாசனைத் திரவிய தோட்டங்கள் சுமார் 4.5 ஏக்கர்களாகும்.

நிலையத்தினால் வழங்கப்படுகின்ற சேவைகள்

  • பதிய இனவகைகள் உட்பட கறுவா, மிளகு மற்றும் பாக்கு என்பவற்றின் நடுகைப் பொருட்களை வழங்குதல்
  • கறுவா மிளகு சிற்றனல்லா மற்றும் லெமன் கிரஸ் பயிர் செய்கையின் போது தொழில்நுட்ப அறிவுறுத்தல்கள் மற்றும் செயன்முறைகள் என்பவற்றை வழங்குதல் ; மண் பாதுகாப்பு முறை ; சேதன உர உற்பத்தி மற்றும் நாற்று மேடைகள் மற்றும்  தாய் மரத் தோட்டங்களின் பராமரிப்பு. 
  • ஆய்வு மற்றும் பரிசோதனைகளின் கள பரிசோதனைகளை நடாத்துதல்.
  • பண்ணையாளர்களுக்கான மிளகு பதனிடல் வசதிகளை வழங்குதல்.
  • உயர் கல்வி மாணவர்களுக்கான தாவர பயிற்சிகளை வழங்குதல்.