குறைந்த உற்பத்தி ஏற்றுமதி விவசாய பயிர் நிலங்களில் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்கான உதவியைப் பெறுதல்

யாருக்கு விண்ணப்பிக்க முடியும்  :

கறுவா, மிளகு, கோப்பி, கொக்கோ, ஏலம், கிராம்பு, சாதிக்காய் ஆகியவற்றை வளர்க்கும் விவசாயிகள் அல்லது தோட்டங்கள் மற்றும் குறைந்த உற்பத்தி நிலங்கள் மற்றும் அவர்களது காணிகளில் 25% க்கும் மேற்பட்ட பயிர் இடைவெளியினைக் கொண்டுள்ளவர்கள்

திட்டத்தின் கீழ் ஏற்றுமதி விவசாய திணைக்களத்தினால் வழங்கப்படும் உதவி :

  • தேவைப்படும் நடுகைப் பொருட்களின் எண்ணிக்கையிலும்,  நிலத்தில் உள்ள வெற்றிடங்களின் அடிப்படையிலும், 50% கட்டணத்தில்.
  • தொழில்நுட்ப ஆலோசனைகள்

தகுதி வரம்பு :

  • ஆகக் குறைந்தபட்ச தகுதி வாய்ந்த நிலப்பரப்பு – (1/4 ஏசி.)
  • நிலத்தின் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும். நிலத்தின் திட்டத்திற்கு 2 ஹெக்டேருக்கு மேல்  நிலங்கள் இருப்பது அவசியம் ஆகும்.

விண்ணப்ப நடைமுறை:

  • அருகிலுள்ள கமநல சேவை நிலையத்தில் விரிவாக்கல் உத்தியோகத்தரிடம் புதன் கிழமைகளில் காலை 8.30 – மாலை 4.15 மணி வரை விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கலாம்.
  • உதவி பணிப்பாளர் பணிமனையில் எந்த ஒரு அலுவலக நாளிலும் காலை 8.30 – மாலை 4.15 மணி வரை சமர்ப்பிக்க முடியும்.

விண்ணப்பங்களை இங்கிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சேவைகளைப் பெறுவதற்கு செலுத்த வேண்டிய கட்டணம்:

விண்ணப்பிக்கும் நேரத்தில் ரூபா 10.00 பெறுமதியான முத்திரை

சேவையை எவ்வாறு வழங்குவது:

அப்பகுதியின் விரிவாக்க அலுவலர் விண்ணப்பதாரர்களின் நிலத்தை தனிப்பட்ட முறையில் பரிசோதிப்பார், மேலும் தகுதிகள் பூர்த்தி செய்யப்பட்டால் அவர் திட்டத்தில் நிலம் பதிவு செய்யப்படும். பரிந்துரைக்கப்பட்ட செயன்முறைகள் முடிவுற்றதன் பின்னர் இலவசமாக கன்றுகள் மற்றும் நிதி வெகுமதிகள் வழங்கப்படும். மேலும், உரத்தின் தேவை இருந்தால், வழங்கப்பட்ட நிதி வசதிகளை இந்த நோக்கத்திற்காக பயன்படுத்தலாம்.

சேவையை வழங்க எடுக்கப்பட்ட நேரம்:

விண்ணப்பத்த்தன் பிறகு 2-6 மாதங்களில்

பொறுப்பான அதிகாரிகள்:

மாவட்ட உதவிப் பணிப்பாளர்

பகுதியின் விரிவாக்க உத்தியோகத்தர்

தொடர்பு கொள்ள வேண்டிய தகவல்கள்:

பகுதியின் விரிவாக்க உத்தியோகத்தர்

மாவட்ட உதவிப் பணிப்பாளர்

பிரதிப் பணிப்பாளர் பணிப்பளார் நாயகம்

உற்பத்தித்திறன் மேம்பாட்டு திட்டத்திற்கான விண்ணப்பம்

மைக்ரோ பாசன அமைப்புகளுக்கான விண்ணப்பம்

பூச்சி கட்டுப்பாடு அலகுகளுக்கான விண்ணப்பம்