ஏற்றுமதி விவசாய பயிர்களுக்கான அறுவடைக்கு பின்னரான வசதிகள் மற்றும் உபகரணங்களுக்கான உதவி திட்டங்களைப் பெறுதல்.
யாருக்கு விண்ணப்பிக்க முடியும் :
ஏற்றுமதி விவசாய பயிர்களின் பண்ணை ஒழுங்கமைப்புக்கள், தோட்டங்கள் அல்லது பெரிய அளவிலான ஏற்றுமதி விவசாய பயிர் வளர்ப்பாளர்கள் ஆகியோரது ஏற்றுமதி விவசாய பயிர்களின் தரத்தை மேம்படுத்துவதற்காக அறுவடைக்குப் பின்னரான ஆலோசனை சேவை அலகு (PHASU) 1998 இல் ஸ்தாபிக்கப்பட்டது. அது அறிக்கை ஆண்டிலும் அதன் செயல்பாடுகளைத் தொடர்ந்தது. முதலீட்டு உதவித் திட்டம் பல்வேறு நிலைகளில் செயற்படும் பங்குதாரர்களுக்கு ஏற்றவாறு ஏப்ரல் 2015 இல் திருத்தப்பட்டது. இந்த உதவித் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக சர்வதேச சந்தைகளில் போட்டித் தன்மையுள்ளதாக இருக்கும் பொருளின் தரத்தை பராமரித்தல், தயாரிப்பு பல்வகைப்படுத்தல் மற்றும் பெறுமதி சேர்த்தல் மற்றும் ஏற்றுமதி விவசாய பயிர் உற்பத்திகளின் சந்தைப்படுத்தல் வசதிகள் என்பவற்றை குறிப்பிடலாம்.
அறுவடைக்கு பின்னரான நடவடிக்கைகளுக்கான உதவித் திட்டத்திற்கான இணைப்பை பின் தொடரவும்
சேவைகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி:
ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்
- புதன் கிழமைகளில் காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை அருகிலுள்ள கமநல சேவை நிலையங்களை அடிப்படையாகக் கொண்ட விரிவாக்கல் உத்தியோகத்தருக்கு.
- அலுவலக நாட்களில் காலை 8.30 – மாலை 4.15 மணி வரை உதவிப் பணிப்பாளர் பணி மனைக்கு
சேவைகளை வழங்குவது எப்படி :
விண்ணப்பத்தைப் பதிவு செய்த பிறகு, ஏற்றுமதி விவசாய திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் குழு அந்த இடத்திற்கு விஜயம் செய்வர் அத்துடன் விண்ணப்பதாரர் தகுதிகளை பூர்த்தி செய்துள்ளனரா இல்லையா என்பதை தீர்மானிப்பார்கள். பரிசோதனையில் கருதப்படும் அளவுகோல்கள் கட்டிடத் தளம், தளத்தின் உரிமையைப் பற்றிய பதிவுகள், நிதி வலிமை அறிக்கைகள் மற்றும் FO/ விண்ணப்பதாரரின் பௌதீக இயலுமை பற்றிய பதிவுகள் மற்றும் திட்ட முன்மொழிவின் சாத்தியக்கூறு என்பனவாகும். வெற்றிகரமாக இருந்தால், விண்ணப்பம் திட்டத்தில் பதிவு செய்யப்படும்.
அதன் பின்னர் கட்டுமானத்தை அரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்படும். அத்துடன் எப்போது, எங்கு வேண்டுமானாலும் தொழில்நுட்ப ஆதரவு வழங்கப்படும். இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்கும் மற்றும் நிறுவுவதற்கும் தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்படும். நிலையத்தின் நிர்மானப்பணிகள் முடிவுற்றதும் பணம் செலுத்தப்படும்.
சேவைகளை வழங்க எடுக்கப்படுகின்ற நேரம்:
விண்ணப்பித்ததன் பின்னர் 6 மாதம் தொடக்கம் ஒரு வருடம்
பொறுப்பான அதிகாரிகள் மற்றும் தொடர்புகளுக்கு :
மாவட்ட உதவிப் பணிப்பாளர்
அருகிலுள்ள கமநல சேவை நிலையத்தில் அமைந்துள்ள பகுதியின் விரிவாக்கல் உத்தியோகத்தர் பிரதிப் பணிப்பாளர் – தொழில்நுட்ப III