வெற்றிலை

Piper betle L.
குடும்பம் : Piperacea

வரலாறு

வெற்றிலை இலங்கை முழுதும் பரவலாக பசுமையானதாகவும் முயற்சியான்மையாளர்களினாலும் வளர்க்கப்படுகின்றது. இதன் வர்த்தக உற்பத்தி இலையாகும். இது பெறும்பாலும் பாக்குடன் சுண்ணாம்பு, புகையிலை மற்றும் சில ஏனைய உள்ளீடுகள் என்பவற்றுடன் சேர்த்து மென்று சாப்பிடுவதற்காக பயன்படுத்தப்படுகின்றது. கி.மு 340 இற்கு முன்னரில் இருந்தே இலங்கையில் வெற்றிலை சாப்பிடும் பழக்கம் இருக்கின்றது. அத்துடன் அக்காலப்பகுதியில் இருந்தே வெற்றிலையானது சமூகத்தில் மதிப்புக்குரியவர்களினால் மதிப்புக்குரிய ஒரு பொருளாக பயன்படுத்தப்பட்டு வந்தது. வெற்றிலையின் பிறப்பிடமாக மலேசியா அல்லது கிழக்காசியா பிராந்தியத்தில் சூழவுள்ள பகுதியாகும் என நம்பப்படுகின்றது. அத்துடன் கிழக்காசியா பிராந்தியத்தின் சூழவுள்ள பகுதியாகும். என நம்பப்படுகின்றது. அத்துடன் சீனா மற்றும் அராபிய வர்த்த்தகர்களினால்  இலங்கை மற்றும் ஏனைய தெற்காசிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றது. என சொல்லப்படுகின்றது. எவ்வாறாயினும் 10 இற்கும் மேற்பட்ட வன தொடர்பு வெற்றிலை இலைகளில் காணப்படுகின்றன.

இன்று வெற்றிலை உள்நாட்டு நுகர்வுக்காகவும் ஏற்றுமதிக்காகவும் வளர்க்கப்படுகின்றது. வெற்றிலையை பிரதானமாக வளர்க்கும் நாடுகளாக இலங்கை, இந்தியா, தாய்லாந்து, பங்காளதேஷ் ஆகிய நாடுகளை குறிப்பிடலாம். பாகிஸ்தான் இலங்கையின் வெற்றிலையை பிரதானமாக இறக்குமதி செய்யும் நாடாகும்.  

உற்பத்தி மற்றும் பயன்கள்

இத் தாவரத்தின் இலைகள உச்ச பொருளாதார மற்றும் உயர் மருத்துவ பெறுமதியை கொண்டதாகும். ஆனால் அது பண்டைய காலம் தொட்டே மெல்லும் நோக்கத்திற்காகவும் ஏனைய நிகழ்வுகளுடன் சடங்கு நிகழ்வுகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. வெற்றிலையை வாயில் அடைத்து வைத்து மெல்லும் உட்கூறுகளானது நாட்டிற்கு நாடு வெவ்வேறு உட்கூறுகளுடன் வேறுபட்டு காணப்படுகின்றது. வெற்றிலையில் இருந்து பல பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் வெற்றிலை கலந்த நுளம்பு விரட்டும் சுருள்கள் மற்றும் கிறீம்கள், பற்பசை, வாய் கொப்பளிக்கும் திரவம், செம்போ, முகத்திற்கான கிறீம்கள், உடனடி வெற்றிலை வாய் பயன்பாடு மற்றும் தூள்கள் ஆகியவை அடங்கும். 

பிரதானமாக வளர்க்கப்படும் பிரதேசங்கள்

பொதுவாக வெற்றிலை நாடு முழுவதும் வளர்க்கப்படுகின்றது. ஆனால் ஏற்றுமதி தரமான வெற்றிலையின் வர்த்தக உற்பத்தியானது தடித்த இலைகளுடன் கடும் பச்சை நிறத்தினாலான பெரிய இலைகளுடன் அன வெற்றிலை “களு புலத்” என அறியப்படுகின்றது. வெற்றிலையானது குருணாகலை, கம்பலை, கேகாலை, களுத்துரை மற்றும் கொழும்பு போன்ற சில மாவட்டங்களில் குறிப்பிடப்படுகின்ற அளவில் மேற்கொள்ளப்படுகின்றன.

இன வகைகள்

இலங்கையில் காணப்படுகின்ற வெற்றிலை வகைகளாக “மெனாறு”, “ரடதளு”, “கல்தளு”, மற்றும் “மெடிபால” என்பவற்றை குறிப்பிடலாம். இவற்றிற்கு மத்தியில் “மெனாறு”  மற்றும் “ரத்தளு” என்பன வர்த்தக ரீதியில் பயிர் செய்யப்படுகின்றன. மேற்கூறப்பட்ட வெற்றிலை இன வகைகளை பயன்படுத்தி மற்றும் ஏனைய கிடைக்கத்தக்க இனங்கள் இரண்டு உயர் உற்பத்தி இனங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இரண்டு இன வகைகளாக “நாரம்வலி” மற்றும் “நாரம்பதி” என்பவற்றை குறிப்பிடலாம். இந்த இரண்டு  இன வகைகளினதும் குறிப்பிடத்தக்க பண்புகள் பின்வருமாறு

  • நாரம்மலி–

இலையின் பண்புகள்  –     நீளம்   : 25cm

                                                அகலம்   : 19cm

                                                நிறை      : 8g

                                                நிறம்   : கடும் பச்சை

ஒரு அறுவடையின் போது ஒரு கொடியில் இலை உற்பத்தி : 50 – 60

ஏற்றுமதி தரத்தைக் கொண்ட இலைகளின் வீதம்   : 80

வருடத்திற்கு 100 தண்டுகளில் ஏற்றுமதி தரத்தைக் கொண்ட இலைகள்  : 1,200,000

  • நாரம்ரதி  –  

இலையின் பண்புகள்  –     நீளம்  : 26cm

                                                அகலம்  : 17cm

                                                நிறை     : 8g

                                                நிறம்      : இளம் பச்சை

ஒரு அறுவடையின் போது ஒரு கொடியில் இலை உற்பத்தி  : 60-65

ஏற்றுமதி தரத்தைக் கொண்ட இலைகளின் வீதம்                 : 75

வருடத்திற்கு 100 தண்டுகளில் ஏற்றுமதி தரத்தைக் கொண்ட இலைகள்  : 1,050,000

மண் மற்றும் காலநிலை தேவைப்பாடு

மண்

இலங்கயை பொருத்த வரையில் ஈரமான மற்றும் உலர்ந்த கால நிலை வலயத்தில் நன்கு வடிகட்டிய வளமான மண்ணில் வெற்றிலை வெற்றிகரமாக வளர்க்க முடியும் குருணாகலை, மற்றும் கம்பஹா மாவட்டங்களில் விஷேடமாக குறுமண் மற்றும் களி ஈரக்களி மண் வெற்றிலை செய்கைக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கின்றது. நீர்தேங்கி நிற்கும் நிலம் உப்பு கலந்த அல்லது கார மண் வெற்றிலை செய்கைக்கு உகந்ததல்ல

காலநிலை

நன்கு பரவலாக்கப்பட்ட வருடாந்த மழை வீழ்ச்சியானது வெற்றிலை கொடியின் வளர்ச்சியை உறுதிப்படுத்துகின்றது. வெற்றிலை சூரிய ஒளியை நேசிக்கும் தாவரமாகும். ஆனால் உலர் வலயத்தை விடவும் ஈரவலயத்திலும், இடைவெப்ப வலயத்திலும் உள்ள வெற்றிலை கொடிகளில் சிறந்த தரமான இலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. வெற்றிலை சிறப்பாக பயிர் செய்ய வேண்டுமாயின் பொருத்தமான நிழல் மட்டம் மற்றும் நீர்பாசனம் என்பன முக்கியமாகும்.

பயிர் ஸ்தாபகம்.

நடுகைப் பொருள்

வெற்றிலை பொதுவாக தண்டு வெட்டுத் துண்டை பயன்படுத்தி இனவிருத்தி செய்யப்படுகின்றது. வெட்டுத் துண்டங்கள் நன்கு ஆரோக்கியமானதாக இருத்தல் வேண்டும். வெட்டுத் துண்டங்கள் நேரடியாகவே களத்தில் நடப்படலாம். அல்லது  மேல் மண், மாட்டுச்சானி, தும்புத் தூள், மணல் மண் ஆகியவற்றை சம அளவில் கலந்தி நிரப்பிய பொலிதீன் உறையில் ஸ்தாபிக்கப்பட்ட வேர்த் வெட்டுத் துண்டங் களை நடலாம்.

கள நடுகை

வெற்றிலை பொதுவாக மூடிய படுக்கையில் நடப்படுகின்றது. இந்த களம் நன்கு வடிகட்டியதாகவும், தட்டையாகவும், சூரிய ஒளி படக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும். இந்த தளம் ஆகக் குறைந்தது இரண்டு வருடத்திலாவது பற்றீரியா இலை வெளிறல் நோயினால் பாதிக்கப்படாது இருத்தல் வேண்டும். நில தயாரிப்பின் பின்னர் நாற்று மேடை பொதுவாக 1.2mx7.5m அளவினதாக இருத்தல் வேண்டும். நாற்று மேடையின் அளவு கிடைக்கப் பெறுகின்ற இடைவெளிக்கு அமைய வேறுபடுகின்றன. முகாமை செயன்முறை மற்றும் நோய் பரவுகை என்பவற்றை கட்டுப்படுத்துதல் அனுமதிக்கத்தக்கது. நாற்று மேடைக்கு இடையிலான இடைவெளி இருத்தல் வேண்டும். நாற்று மேடையில் வைக்கோலை எரித்தல் அல்லது அதன் மிது சாம்பல் இடுவதன் முலம் நாற்று மேடையில் கிருமியினை அழிக்க முடியும். நாற்று மேடைகளின் கொத்தனியை சூழ 30 செ.மீ அகலமும் 60 செ.மீ. ஆழமும் கொண்ட வடிகால்கள் கட்டப்படுதல் வேண்டும். மேல் ஏறுவதற்காக வெற்றிலைக்கு ஒரு செயற்கை முறை அல்லது இறந்த ஆதரவினை வழங்கப்படுதல் வேண்டும். ஆதரவுகள் கதியல்கள் எனவும் அழைக்கலாம். அது 45cmx 45cm இடைவெளிகளில் அமைத்தல் வேண்டும். ஒரு கதியலுக்கு அருகே இரண்டு துண்டங்கள்  நடப்படும். நடுகை மேற்கொள்வதற்கு முன்னர் வெட்டுத் துண்டங்கள் சுமார் 2 நிமிடங்களுக்கு பங்கசு கலவையில் அமிழ்த்தி வைத்திருத்தல் வேண்டும். நாற்றுமேடை வெற்றிலைக்கு பதிலாக தனி மரங்கள ஸ்தாபிக்கவும் முடியும். வெட்டுத் துண்டங்கள 30cmx30cm குழியில் நடப்படலாம். மேல் மண்ணில் சாணிக் கலவையை நிரப்பி கம்புத் துண்டங்கள் 2-4 செ.மி. சுற்றளவினைக் கொண்டதாக துணை ஆதாரங்கள் ஸ்தாபித்தல் வேண்டும். செடிகளுக்கு இடையிலான இடை வெளி 1.8×1.8cm ஆகும். கிளிரிசீடியா உயிர் ஆதாரங்கள் அல்லது நீடித்த மரக்கற்றை ஆதாரங்கள் பயன்படுத்தலாம். நாற்று மேடையை 4-6 கிழமைகளுக்கு தென்னை மட்டை அல்லது ஏனைய நிழல் பொருட்களினால் முடி விடுதல் வேண்டும். நாற்று மேடையில் நாளாந்தம் ஒரு  முறை அல்லது இரண்டு முறை நீர்ப்பாய்ச்சல் வேண்டும். 20-45 நாட்களினுள் வெட்டுத் துண்டங்களிள் இருந்து அரும்புகள் வளர ஆரம்பிக்கப்படும். அத்துடன் அதன் பின்னர் அங்குள்ள நிழல்களை படிப்படியாக அகற்றுதல் வேண்டும்.

பயிர் முகாமை

உர பிரயோகம்

ஒவ்வொறு 3-4 வாரங்களுக்கு ஒரு முறை வெற்றிலை பறிக்கப்படும். அதன் மூலம் களத்தில் இருந்து அதிகளவு போசனை அகற்றப்படுகின்றன. ஆகவே இரசாயன உர பிரயோகம் உயர் உற்பத்திக்கு மற்றும் சிறந்த வளர்ச்சிக்கும் மிக முக்கியமாகும்.

பரிந்துறை செய்யப்பட்டுள்ள உரம்

யூரியா                                                          :  195g

ரிப்பல் சுப்பர் பொசுபெற்று TSP         :    65g

மியூரயேட ஒப்.பொட்டாஸ்                   :  100g

கேசரைட்                                                     :   60g

   
மேற்சொல்லப்பட்ட கலவையில் 420 கிராம் ஒவ்வொறு மூன்று வார இடைவெளியிலும் 100 வெற்றிலைக் கொடிக்கு பிரயோகிக்க வேண்டும்.

சேதன பசளை

சுமார் ஒரு மாதத்திற்கு பின்னர் நாற்று மேடைகளுக்கு ஆரம்பத்தில் மாட்டுச் சானி அல்லது கூட்டுப் பசளை பிரயோகிக்க வேண்டும். புதிதாக நடுகை மேற்கொள்ளப்பட்ட துண்டங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு மண்ணுடன் நன்கு கலக்கப்படுதல் வேண்டும். வெற்றிலை செய்கையின் போது ஆட்டெறு அல்லது கோழி எரு நன்கு பயன்படுத்த முடியும். சிதைந்த கிளிரிசீடியா இலைகளின் பயன்பாடு சிறந்த வளர்ச்சியையும் உயர் உற்பத்தியையும் தரவல்லதாக உள்ளது.

கத்தரித்தல் மற்றும் பயிற்சி

அது பொதுவாக உயிர் ஆதரவு அல்லது சிறந்த ஆதரவு இரண்டில் ஒன்றினை பொதுவாக பயிற்றுவிக்கின்றது

  • வெற்றிலைக் கொடியின்  1 மீ. உயரத்தில் வெட்டுவது அதிகமான பக்கவாட்டு கிளைகளை கத்தரிப்பது விரும்பத்தக்கது அத்துடன் உற்பத்தி அதிகரிக்கும்.
  • வெற்றிலை கொடிகள் 1.2 மீ. வளர்ச்சி அடைந்ததன் பின்னர் குறுக்கு நெடுக்காக கறாதி நிறுவுதல் 

பயிர் பாதுகாப்பு

நோய்கள்
பற்றீரியா இலை வெளிறல்

இலை வெளிறல் நோய் பற்றீரியாவின் காரணமாக ஏற்படுகின்றன. அந்த பற்றீரியா

Xanthomonas campestris betlicola என அழைக்கப்படும். மழைக் காலங்களில் இந்நோய் தொற்று நோயாக மாறுகின்றது. இந்நோயின் முதல் அறிகுறு பண்பியல் இலைகளின் கீழ் பகுதியில் ஈரமான எண்ணெய் திட்டுக்கள் காணப்படுகின்றன. படிப்படியாக அவை இலையில் பரந்து அவை கபில நிறமாக அல்லது கருப்பு நிறத்திற்கு மாற்றம் அடையும் இந்தநோய் நிலமை தீவிரமடைகின்ற போது இந்த திட்டுக்கள் தண்டுகளுக்கு பரவலடையும் இதன் பெறுபேரால் அதனை சூழவுள்ள கொடிகளுக்கு பரவும். கடுமையாக நோய்க்கு  உள்ளாக்கப்பட்ட தாவரங்கள் கட்டுப்பாட்டு முறைமையில் ஏதும் இன்னும் கண்டு பிடிக்க வில்லை நோயுள்ள தாவரங்களையும் அதன் சூழவுள்ள தாவரங்களையும் அந்த இடத்திலேயே எரித்து விடல் வேண்டும். பரவுவதை தடுப்பதற்காக பங்கசுகொல்லி ஒன்றின் பிரயோகிக்கலாம். கொடியில் காணப்படும் முதிர்ந்த எல்லா இலைகளும் அகற்றப்படுதல் வேண்டும். அத்துடன் பங்கஸ் கொல்லியை வெற்றிலை கொடியின் மீது ஒரு முறை அல்லது இரு முறை தெளிக்கலாம். இரசாயன உரப் பிரயோகம் பாதிக்கப்பட்ட வெற்றிலை தொகுதிகளுக்கு நீர் பிரயோகித்தளை குறைப்பதாகவும் இந்த நோய் பரவுவதை தடுக்கலாம். நோய் தொற்றாத நடுகை பொருட்கள் பயன்படுத்துதல் விவசாய கினறுகளை பயன்படுத்துதல் அல்லது  இரு முறை தெளிக்கலாம். இரசாயண உர பிரயோகம் பாதிக்கப்பட்ட வெற்றிலை தொகுதிகளுக்கு நீர் பிரயோகத்தினை குறைப்பதாலும் இந்த நோய் பரவுவதை தடுக்கலாம். நோய் தொற்றாத நடுகை பொருட்களை பயன்படுத்துதல் விவசாய கினரை பயன்படுத்துதல் அல்லது நீர் பாசனத்தை தனிமைப்படுத்தப்பட்ட நீர் மூலங்கள் மற்றும் கடுமையான சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிப்பது ஆகியவை மாசுபடுவதை தவிர்ப்பதற்காக முக்கிய வழி முறைகளாகும்.

மர அடி அழுகல் நோய்

மர அடி அழுகல் நோய் Phytopthora, Coletotricum and Rzoctoniya பங்கசுவால் ஏற்படுகின்றது. களிமண், மண்ணில் இந் நோய் தொற்று நோயாக மாறும் இதன் முதல் அறிகுறி யாது எனில் வெற்றிலைக் கொடி வாடி விடுதல் ஆகும். வெற்றிலை கொடியை வேரோடு பிடுங்கும் போது கருப்பு நிற உலர்ந்த வேர்களை காண முடியும் படிப்படியாக அவை அருகில் உள்ள வெற்றிலைக் கொடிகளுக்கும் பரவி விடும்.

வெற்றிலை நாற்று மேடைக்கு நீர் பாய்ச்சியதன் பின்னர் கொடியின் அடித்தளத்திற்கு பங்கஸ் கொல்லி ஒன்றினை பிரயோகிக்கலாம். இரண்டாவதாக வெற்றிலை கொடி முதலாவது மற்றும் இரண்டாவது முறையில் மூடுவதற்காக வெற்றிலை கொடியின் அடித்தளத்திற்கு 1:1 எனும் வீதத்தில் மாட்டுச் சாணி மற்றும் மேல் மண் பிரயோகிக்க வேண்டும். இது அடித்தள முனைகளின் இளம் வேர்களின் வளர்ச்சியை மேம்படுத்துகின்றது.

  • வெற்றிலை இலைகளின் பழுப்பு நிற புள்ளிகள்

Phytopthora, Coletotricum and Sercusphora. என்று அழைக்கப்படும் பங்கசினால் வெற்றிலை இலைகளின் பழுப்பு நிற புள்ளிநோய் எற்படுகின்றன. நோய் தோன்றுவதை புறக்கணிக்கும் போது நோய் தீவிரமாகவும் இருக்கும். முதலாவது சிறப்பு அறிகுறி யாது எனில் மஞ்சள் நிற விளிம்புகளுடன் பழுப்பு நிற திட்டுக்கள் உருவாகியமை ஆகும். நோய் தாக்கம் கொண்டுள்ள இலைகளை அகற்றுகின்ற போது நோய் பரவுவது முகாமை செய்து கொல்ல முடியும். நோய் தீவிரமாக காணப்படுமாக இருப்பின் பங்கசு கொல்லியை பரிந்துரை செய்யலாம். வெற்றிலை செடியின் சகல முதிர்ந்த இலைகளும் அகற்றப்படுதல் வேண்டும். அத்துடன் ஒரு பங்கசு கொல்லியை வெற்றிலை செடிக்கு ஒரு முறை அல்லது இரு முறை தெளித்தல் வேண்டும்

நூற்புழு தாக்குதல்

வெற்றிலை கொடி தொகுதியில் அவ்வப்போதான இறப்புக்கள் சில வெற்றிலைச் செயகையின் போது அவதானிக்கலாம். இத்கைய நிமைக்கு பிரதான காரணம் நூற்புழுக்களின் தாக்கமாகும் நூற்புழுக்களின்வெர் முறையை தாக்குகின்றன. அத்துடன் பகுதி அழிவுக்கு காரணமாக அமைகின்றன. அனால் பங்கசின் இரண்டாவது தாக்கம் மற்றும் பற்றீரியாவின் காரணமாக வேர் அழுகல் மற்றும் வேர் முறமையின் தளம்பல் காரணமாக அடிக்கடி இறப்புக்கு காரணமாகின்றன. இது அடிக்கடி தோன்றுவதில்லை  

பூச்சிகள்  

பொருளாதார ரீதியாக முக்கியமான பூச்சு பிரச்சினைகள் எதுவும்தெரிவிக்கப்படவில்லை ஆனால் பூச்சிகள் உறிஞ்சுதல் மற்றும்வெற்றிலை இலைகளுக்கு சிவப்பு நிற பூச்சு தாக்கம் என்பன பொதுவாகவெற்றிலைசெய்கையின்போது காணப்படுகின்றன. கலாமதிரி ஹனியா

“கலாமதிரி” ஹனியா

பாதிக்கும் பூச்சிகள்Dispinctus politus. ஆகும். சிறந்த வளர்ப்புசெயன்முறை பூச்சு தாக்கங்களை கட்டுப்படுத்துவதற்கு துணையாக உள்ளது.

இரண்டு புள்ளிகள் கொண்ட சிவப்பு, சிலந்தி பூச்சு தாக்கம் 

பாதிக்கும் பூச்சு   Tetranychus urticae. ஆகும். பாதிப்பு அறிகுறிகள் இலைகள் விளிம்புகள் சுருட்டும். அத்துடன் இலைகள் சுருளுகின்ற போது பாதிக்க்க் கூடிய சிறிய பகுதிகள் டையும் பாதிப்பு கடுமையாக இருக்குமாயின் வெற்றிலை கொடிகள் சகல முதிர்ந்த இலைகளையும் அகற்றியதன் பின்னர் சிறு பூச்சி கொல்லியை பிகோகிப்பதை சிபாரிசுசெய்யப்படுகின்றது.    

அறுவடை மற்றும் அறுவடைக்கு பின்னரான செயன்முளை

வெற்றிலை கொடி 1.2-1.8m நீளமாக வளர்கின்ற போது அறுவடை ஆரம்பிக்கின்றது. ஆரம்பத்தில் முதிர்ச்சியடைந்த இலைகள் (கந்தகொல) பிரதான தண்டுகளின் கீழ் பகுதிகள் 2-3 முறை அகற்றப்படுகின்றன அதன் பிறகு வெற்றிலை இலைகள் பிரதான தண்டு மற்றும் பக்கவாட்டு தண்டுகளில் இருந்து அறுவடை செய்யப்படுகின்றன. ஏற்றுமதி சந்தைக்கான வெற்றிலை மூன்று வார இடைவெளியில் இருந்து அறுவடை செய்யப்படுகின்றன. அத்துடன் உள்நாட்டு சந்தைக்கு இரண்டு வார இடைவெளியில் அறுவடை செய்யப்படுகின்றது. அத்துடன் உள்நாட்டு சந்தைக்கு இரண்டு வார இடைவெளியில் அறுவடை செய்யப்படுகின்றது அறுவடை செய்யப்பட்ட இனங்கள் சந்தைக்கு எடுத்துச் செல்வதற்கு முன்னர் ஏற்றுமதி சந்தைக்கான கட்டுக்கள் தொகுக்கப்படுகின்றன. ஒவ்வொறு கட்டுகளிலும் 40 இலைகள் காணப்படுகின்றன. அதற்கென விஷேடமாக தயாரிக்கப்பட்ட பிரம்பு கூடையில் பொதி செய்யப்படுகின்றன.

மருத்துவ மற்றும் இரசாயன பண்புகள்

வெற்றிலை இலையின் முக்கியமான உட்கூறு விரைவில் ஆவியாகக் கூடிய எண்ணெய் ஆகும் இலங்கையில் வெற்றிலை எண்ணெயில் அடையாலம் காணப்பட்ட சில முக்கியசமானங்கள்  β-phellandrene, 4-terpinol, eugenol, chavibitol acetate, safrole மற்றும் allylpyrocatechol diacetate என்பனவாகும்.

நிலையான தரவிபரக்குறிப்பு

வெற்றிலையில் குற்றிப்பிடப்பட்ட தர அளவுருக்கள் எதுவும் இல்லை. ஆனால் ஏற்றுமதி தர வெற்றிக்கு பின்வரும் அளவுகோல்கள் கருதப்படுகின்றன.

இலையின் அளவு – குறைந்தது 20 செ.மீ நீளம் மற்றும் 15 செ.மீ அகலம்

நிறம் – நன்கு முதிர்ந்த கடும் பச்சை நிற இலைகள்

உயர் எரிவு

இலைகளின் புத்துணர்ச்சி இலையின் தண்டு 2.5-3 செ.மீ இருக்க வேண்டும்

மறுமொழி இடவும்