குரக்காய்

Garcinia quaesita
குடும்பம் : Clusiaceae

அறிமுகம்

காசினியா  குயிசீடா Garcinia quaesita என்பதை சிங்களத்தில குரக்காய் என்றும் தமிழில் கொடுக்கை புளி எனவும் அறிமுகப்படுத்தப்படும் இது குளுசியேசியா Clusiaceae குடும்பத்தை சேர்ந்தது இது இலங்கையின் உள்ளூர் வெப்ப மண்டல மழைக் காடுகளில் இயற்கையாக காணப்படும் ஒரு நடுத்தர பசுமையான நிழல் நேசிக்கும் ஒப்பீட்டளவில் மெதுவாக வளர்கன்ற ஒரு மரமாகும். இந்த மரமானது சிறிய அளவு முதல் நடுத்தர அளவு வரை கிடை மட்டமாகவோ அல்லது தொங்கிய கிளைகளுடனோ காணப்படலாம். இலங்கையில் குரக்காய் சமையலின் போதும் மற்றும் மருத்துவ தேவைப்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. எடையை குறைப்பதற்கும் மற்றும் பசியை கட்டுப்படுத்துவதற்கும் உணவு நிரப்பியாக காணப்படுவதன் காரணமாக உலகில் பிரபல்யம் வாய்ந்த வாசனைத் திரவியம் ஒன்றாக தற்போது பிரபல்யம் அடைந்து வருகின்றது. குரக்காய் எனும் மரம் பழமரமாக பயிரிடப்பட வில்லை ஆனால் ஈரவலய மற்றும் இடைவெப்பவலய வீட்டுத் தோட்டங்களில் பணப் பயிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காலநிலை மற்றும் மண்   

இலங்கையில் ஈரவலய மற்றும் இடைவெப்ப வலய நிலங்களில் மிகவும் பரந்த அளவில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆழமான நன்கு வடிகட்டிய சற்று அமிலத் தன்மை கொண்ட ஈரழிப்பான  களி மண் குரக்காய் செய்கைக்கு மிகவும் உகந்தது. குரக்காய் செய்கைக்கு நன்கு பரவலான மழை வீழ்ச்சியும் தேவை. அவ்வாறே பூக்க ஆரம்பிக்கையில் போது குறுகிய கால வரட்சியான காலம்     (15 – 20 நாட்கள் )  முக்கியமாக உள்ளது. நாற்று மேடையின் போதும் கள ஸ்தாபகத்தின் போதும் அதாவது முதல் 2-3 வருடங்களுக்கு நிழல் தேவையாகின்றது.

இனப்பெறுக்கம்

குரக்காய் பொதுவாக விதைகளில் இருந்தே இனப்பெறுக்கம் செய்யப்படுகின்றது. விதை மூலம் இனப்பெறுக்கமானது இலகுவானதும் மலிவானதும் மற்றும் வசதியான முறையாகவும் காணப்படுகின்றது. ஆனால் முளைதிறன் விகிதம் குறைவாகவும் பருவகால பூத்தல் நடவடிக்கை  குறைதல் மற்றும நீண்ட இளம் கால பருவம் என்பன விதை மூல இனப்பெறுக்க முறையில் காணப்படும் சில பிரச்சினைகளாகும். ஆகவே தாவர இனப்பெறுக்க முறை முலம் மற்றும் தெரிவு செய்யப்பட்ட தாய் தாவரத்தில் இருந்து உண்மையான நடுகை பொருட்கள் சிறந்த தரமான உற்பத்திகளை பெறலாம். குரக்காய்க்கு பிரயோகிக்கக்கூடிய வெற்றிகரமான இனப்பெறுக்க முறையாக பிளவு ஒட்டல் முறை காணப்படுகின்றது.

கள ஸ்தாபகம்

மேலதிக நீர்ப்பாசன முறையை குறைத்துக் கொள்வதன் முகமாக கள நடுகை மழை நாட்களில் மேற்கொள்ளப்படுகின்றன. குரக்காய் நேரடி சூரிய ஒளியில் உணர் திறனை கொண்டிருப்பதால் ஆகக் குறைந்தது 5 வருடங்களுக்காயினும் காற்றுகளுக்கு நிழல் தேவைப்படுகின்றது.

அறுவடை விதையிடல் மூலம் இனப்பெறுக்க தாவரம் பழம் தருவதற்காக 7-9 வருடங்கள் வரை எடுக்கும். அதே வேலை பதிய முறை இனப்பெறுக்கம் மூலம் பெறப்பட்ட தாவரங்கள் 4-5 வருடங்கள் எடுக்கின்றன. பழுத்த பழங்களை பரிப்பதால் அறுவடை மேற்கொள்ளப்படுகின்றது. பழங்கள் பாதிப்டைவதாக உள்ளதால் கவனமாகக் கையாளுதல் வேண்டும் பழுதடைவதாயின் அதன் உற்பத்தி தரம் குறைவடையலாம். அறுவடை செய்ததன் பின்னர் விதைகள் அகற்றப்படுகின்றன. அத்துடன் புறத்தோலை  வேறுபடுத்துவதற்காகவும், பின்னர் அது கடும் கருப்பு நிரத்தை அடையும் வரை சூரிய ஒளியில் நன்கு உலர்த்தவும்.

மறுமொழி இடவும்