லெமன் கிராஸ்
Cymbopogon citratus/Cymbopogon flexuosus
குடும்பம் : Graminae
வரலாறு
17 ஆம் நூற்றாண்டுகளில் பிலிப்பைன்ஸ் நாட்டின் லெமன் கிராஸ் எண்ணெய் கண்டறியப்பட்டன. பண் டைய கால நூல்களில் இருந்து அறிய முடிகின்றது. இது 1799 ஆம் ஆண்டுகளிலேயே ஜெமெய்க்கா நாட்டிற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. அத்துடன் 1917 ஆம் ஆண்டுகளிலேயே ஹெய்ட்டி மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் அறிமுகமாகியது. இலங்கைக்கு லெமன் கிராஸ் யாரால் எப்போது அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. என்பது தொடர்பில் தெரியவில்லை. 1905 ஆம் ஆண்டில் கிடைக்கப் பெறும் தேசிய மருத்துவ அறிக்கைகளுக்கு அமைய திரு.ஜே.எப்.ஜோவிட் என்றழைக்கப்படுகின்ற இலங்கை ஆய்வாளர் அவரது ஆய்வு நடவடிக்கைளின் பொருட்டு தென் இந்தியாவில் இருந்து “கொச்சின்சேர” சிம்போகன் சிட்ரனெல்லா எனும் செடியை பல தடவைகள் கொண்டு வந்து உள்ளனர். அத்துடன் ஆய்வுகளை மேற்கொள்வதன் பொருட்டு அதன் பண்டாரவலை பண்ணையில் நடுகை மேற்கொண்டுள்ளனர். லெமன் கிராஸ் பல தடவைகள் அதிக அளவில் அறுவடை செய்யப்பட்டு பல நூற்றாண்டுகளுக்கு முன்னிருந்தே இலங்கையில் இருந்து வெளியே எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. ஆனால் தற்போது அது சிறிய அளவிலேயே அறுவடை மேற்கொள்ளப்படுகின்றது.
உற்பத்தி மற்றும் பயன்கள்
லெமன் கிராஸ் எண்ணெயில் பிரித்தெடுப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றது. அது உலகில் காணப்படுகின்ற 10 வகையான உயர்ரக எண்ணையை தரவல்ல பயிர்களின் மத்தியில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. உலக ஏற்றுமதி சந்தையில் இந்தியா முதல் இடத்தை வகிப்பதுடன் லெமன் கிராஸ் பிரதானமாக வாசனைக் கைத்தொழிலில் பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன் மருத்துவ கைத்தொழிலிலும் பயன்படுத்தப்படுகின்றது. அது மாத்திரமன்றி அது சலவைப் பொருள் என்பவற்றிலும் பயன்படுத்தப்படுகின்றது. மேலும் சில நாடுகளில் லெமன் கிராஸ் எண்ணெய் ஐஸ்கிறீம் கேக், குடிபாணங்கள், திண்பண்டங்கள், புடின் மற்றும் சுவிங்கம் போன்றன தயாரிப்பிலும் வாசனையூட்டும் முகவராகவும் பயன்படுத்தப்படுகின்றது. இந்தியாவில் உலர்ந்த லெமன் கிராஸ் ஏனைய உள்ளீடுகளுடன் கலக்கப்படுகின்றன. அத்துடன் அது எழுதுகின்ற மற்றும் அச்சிடல் பத்திரிகைகளிலும் பயன்படுத்தப்படுகின்றது.
பிரதானமாக வளர்க்கப்படும் பிரதேசங்கள்
இலங்கையை பொருத்த வரையில் லெமன் கிராஸ் பதுளை மற்றும் ஹம்பந்தோட்டை பிரதேசங்களில் வளர்க்கப்படுவதாக அறிக்கைகள் கிடைக்கப் பெற்றுள்ளன. ஆனால் உண்மையான விஸ்தீரன அளவு கண்டறியப்படவில்லை. கிடைக்கப் பெறுகின்ற தகவலுக்கு அமைய இலங்கையின் லெமன் கிராஸ் மேறகொள்ளப்படுகின்ற மதிப்பிடப்பட்ட மொத்த நிலப்பரப்பின் விஸ்தீரனம் 25 ஹெக்டேயரை விடவும் குறைவாகும்.
இன வகைகள்
மேற்கிந்திய லெமன் கிராஸ் (சிம்போகன் சிட்ரடஸ்) மற்றும் கிழக்கிந்திய லெமன் கிராஸ் அல்லது கொச்சின் லெமன் கிராஸ் (சிம்கோபாபோகன்) என்பன பொதுவாக வளர்க்கப்படுகின்ற இனங்களாகும்.
சிம்போபோகன் சிட்ரஸ்
இது பொதுவாக சேர என்று அழைக்கப்படும். இது பெறும்பாலும் அதிகளவில் இறைச்சி சமைக்கையில் கறிவாப்பிலையை பயன்படுத்தப்படுகின்றது. இச் செடியானது நீண்ட ஒடுக்கமான இலைகளுடன் சிறிய அடர்ந்ததாக காணப்படும் சேர எண்ணெய் பிரித்தெடுப்பிற்காகவும் பயன்படுத்தப்படும் அதே வேலை உற்பத்தியும் செய்யப்படுகின்றது. அதேப் போல் எண்ணையின் தரம் லெமன் கிராஸ் உடன் ஒப்பிடுகையில் குறைவாகும். இதன் போலித் தண்டு வெள்ளை நிறமாக காணப்படும் அத்துடன் கட்டமைப்பு குமிழைப் போன்று தாவரத்தின் அடிப்பகுதி அமையப் பெற்றுள்ளது.
சைம்போபோகன் நெகிழ்வு
லெமன் கிராஸ் எண்ணெய் வடித்தலுக்கு பயன்படுத்துவதுடன் அது ஒரு வர்த்தக பயிராகும். இந்த பயிர் இந்தியாவுக்கு சுதேசமானதாகும். சீ. பிளக்சியசிஸ் இரண்டு இன வகைகள் தாவரத்தின் நிறங்களில் அடிப்படையில் அறிக்கை செய்யப்படுகின்றன. சீ. பிளக்சியசிஸ் போலித் தணடு சுமன புல்லு சிவப்பு நிறத்தில் காணப்படுகின்றன. லெமன் கிராஸ் எண்ணெயின் அளவு இந்தியன லெமன் கிராஸின் சிவப்பு நிற வகையின் இருந்து பெறப்படுகின்றது. மற்றய வகையானது சீ. பிளக்சியசிஸ் வடிவமைப்பு அல்பசியஸ் ஆகும். அது பச்சை வௌளை அல்லது இளம் சிவப்பு பொலி தண்டைக் கொண்டுள்ளது. வெள்ளை லெமன் கிராஸ் இன் தரமானது சிவப்பு வகை இனத்தினது தாழ்வானது ஆகும்.
மண் மற்றும் கால நிலைத் தேவைப்பாடுகள்
மண் :
நன்கு வடிகட்டப்பட்ட மணல் மண் மிகவும் பொருத்தமாகும். அத்துடன் கடினமான களி மண் வளர்ச்சிக்கு உகந்த்தன்று இலங்கையில் பெறும்பாலும் காணப்படுகின்ற குறைந்தளவு மண் வகை லெமன் கிராஸிற்கு பொருத்தமாகும். ஆனால் உயர் மட்கிய உடனான மண்ணில் இருந்து உயர் உற்பத்திகளை பெற்றுக் கொள்ள முடியும் எவ்வாறாயினும் லெமன் கிராஸ் பதன நிலங்களில் தேயிலை நிலங்களின் எல்லைப் பகுதி கடுமையான அரிப்புக்கு உள்ளான நிலம் வேறு எந்தவிதமான பயிர்களும் மேற்கொள்ள முடியாத நிலங்களில் கூட லெமன் கிராஸ் நன்கு செய்கை பண்ணலாம்.
காலநிலை :
இலங்கையை பொருத்த வரையில் இப்பயிரானது சகல காலநிலை வலயங்களிலும் வெற்றிகரமாக நன்கு மேற்கொள்ள முடியும். நன்கு சூரிய வெப்பம் கொண்ட வெப்ப வலயம் இதற்கு மிகவும் பொருத்தமாகும்.
உயரம் – 100-1200 MSL இற்குமேல்
வெப்ப நிலை – 25ºC – 30ºC
மழை வீழ்ச்சி – கடுமையான வரட்சியை தாக்கு பிடிக்க வல்லது. அதேப் போல் கடுமையான காற்று மற்றும் காட்டுத்தீ என்பனவும் தாங்கக் கூடியது ஒரு சில அங்குலங்களுடன் ஆன பரந்த மழை வீழ்ச்சி இதற்கு போதுமானதாகும். அதிக மழை வீழ்ச்சியானது எண்ணெய் உற்பத்திகளை குறைக்கின்றது. லெமன் கிராஸ் அதிக நிழலின் கீழ் குளிரான காலநிலை மற்றும் அதிகம் வளம் கொண்ட மண்ணில் வளர்க்கின்ற போது எண்ணெயின் அளவு தரமும் குறைவடைகின்றது.
பயிர் ஸ்தாபகம்
நடுகைப்பொருள் : விதை மற்றும் உறிஞ்சி ஆகிய இரண்டும் நடுகைப் பொருளாக பயன்படுத்தப்படுகின்றது. லெமன் கிராஸ் பூ அதிகளவிலான விதைகளை உற்பத்தி செய்கின்றது. பூக்கள் முதிர்வடைந்த்ததன் பின்னர் அறுவடை மேற்கொள்ள முடியும். அத்துடன் 2-3 நாட்கள் உலரச் செய்ததன் பின்னர் விதைகளை இலகுவாக அகற்றிக் கொள்ள முடியும். விதைகளை களத்தில் நேரடியாகவே நடுவதற்கு முடியும். நேரடியாகவே விதைக்கலாம். ஹெக்டேயர் ஒன்றிற்கு சுமார் 25 கி.கிராம். விதை தேவைப்படுகின்றது. நாற்றுக்களை பெற்றுக் கொள்வதன் மூலமாக விதைகளை நாற்று மேடையில் நடுவதற்கு முடியும். அதன் பின்னர் இந்த நாற்றுக்களை களத்தில் நடலாம். நாற்று மேடையின் நடுவதற்காக ஹெக்டேயருக்கு 3-4 கி.கிராம் மாதிரமே விதை தேவைப்படுகின்றது. விதைகளை கூடிய வரையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் அறுவடையின் பின்னர் இவை வேகமாக குறைவடையலாம். இனப்பெருக்கத்திற்கான பொதுவான செயன்முறை உறிஞ்சிகள் பயன்படுத்துவதாகும். தாய் பற்றைகளில் இருந்து உறிஞ்சுகள் வேறுபடுத்தப்படுகின்றது. அத்துடன் அவை களங்களில் நடப்படுகின்றன. சுமார் 24000 – 30000 உறிஞ்சுகள் ஒரு ஹெக்டேயருக்கு தேவைப்டுகின்றது. அதன் நடுகை இடை வெ ளியானது 60cmx60cm அல்லது 60cmx45cm ஆகும்.
பயிர் முகாமை
உரப் பிரயோகம்
பொதுவாக பண்ணையாளர்கள் செயற்கை முறையிலான உரம் பிரயோகிப்பதில்லை. அவ்வாறு அவர்கள் பிரயோகிப்பார்களேயாயின் அதிகமான அறுவடையை பெறலாம்.
பரிந் துரைக்கப்பட்ட உரம்
சிபாரிசு செய்யப்பட்ட கலவை – 750 கி.கி. /ஹெ.
கலவையின் உள்ளடக்கம் | நறையின் பகுதி | கலவையில் போசனை |
யூரியா (46%N) | 1.5 | 17%N |
பாறை பொசுபேற்று ( 28 % P2O5) | 1.5 | 11% P2O5 |
மியுரியேற்று ஒப்பொசுபேற்று (60% K2O) | 1 | 14% K2O |
மரத்தின் வயது | மாகா போகம் (கலவை கி.கி/ஹெ) | யால போகம் (கலவை கி.கி/ஹெ) |
1 ஆம் வருடம் (கி.கி) | 190 | 190 |
2 ஆம் வருடம் (கி.கி) | 375 | 375 |
களை கட்டுப்பாடு
முதலாம் வருடத்தில் 2-3 தடவைகள் களை அகற்றுதல் வேண்டும். ஆனால் அதனகத்துப் பின்னர் வரும் வருடங்களில் களை அகற்றுவதற்காக தேவைப்படாது வயல் நிலத்தை தன்மையை பொருத்து அமையும்.
மண் பாதுகாப்பு
மண்ணரிப்புக்கு உள்ளான சேறும் சகதியுமான நிலங்கள் லெமன் கிராஸ்சிற்கு மிகவும் பொருத்தமாகும். எவ்வாறாயினும் அதிக சரிவான நிலங்களில் நடுகை மேற்கொள்வதற்கு முன்னர் பொருத்தமான மண்ணரிப்பு பாதுகாப்புடன் முறையாக பிரயோகிக்க வேண்டும்.
பயிர் பாதுகாப்பு
இலங்கையின் லெமன் கிராஸை பொருத்த வரையில் குறிப்பிடத்தக்க வகையில் எத்தகைய பீடை நோய் தாக்கமும் எற்பட வில்லை.
அறுவடை மற்றும் அறுவடைக்கு பின்னரான செயற்பாடு
அறுவடை
முதலாவது அறுவடையை நடுகை மேற்கொண்டு 3-6 மாதங்களில் பெற்றுக் கொள்ள முடியும். அதனைத் தொடர்ந்து அறுவடை ஒவ்வொறு 3 மாதத்திற்கும் ஒரு முறையும் மேற்கொள்ளலாம். முதலாவது வருடத்தில் அறுவடை குறைவாக காணப்படும். உச்ச அறுவடையை 3-4 வருடங்களுக்கு பெற்றுக் கொள்ள முடியும். அறுவடை வெயில் காலங்களில் மேற்கொள்ள வேண்டும். புற்கள் நில மட்டத்தில் இருந்து 10 செ.மீ. உயரத்தில் மேற்கொள்ள வேண்டும். அறுவடை செய்யப்பட்ட புற்கள் வயல் நிலங்களில் பரப்பி விடுதல் வேண்டும். அதன் பின்னர் அனை இரண்டு நாட்களுக்கு காலந்தாழ்த்தி வைக்க வேண்டும். பதப்படுத்துவதற்கு முன்னர் அவற்றின் கூட்டுக்களை தயார் செய்து கொள்ள வேண்டும். ஹெக்டேயருக்கு தூய உற்பத்தி 3-10 மெற்றிக் தொன் ஆகும்.
பதனிடல்
எண்ணெய் பெற்றுக் கொள்வதற்காக நீர் சுத்திகரிப்பு முறை பயன்படுத்தப்படுகின்றது.
தர நிலை விபரக்குறிப்பு
லெமன் கிராஸ் எண்ணெயின் தரம் சிட்ரஸ் உள்ளடக்கத்தில் இருந்தும் அத்துடன் அற்க்ககோலின் கரை திறனில் இருந்தும் பெறப்படுகின்றது.
லெமன் கிராஸ் எண்ணைய் (Cymbopogon flexuosus)
சிட்ரல் உள்ளடக்கம் – 75% னை விடவும் உயர்வாக காணப்படுதல் வேண்டும்.
எதைல் அற்க்ககோல் 70% கரையத்தக்கது.
சேர எண்ணெய் (Cymbopogon citrates)
சிட்ரல் உள்ளடக்கம் குறைவாகும் 70% அட்க்கோலில் கரையாது.