சாதிக்காய்
Myristica fragrans
குடும்பம்: Myristicaceae
வரலாறு
சாதிக்காய் என்றும் நீடித்த ஒரு பசுமையான பயிர் அத்துடன் இது கிழக்கு இந்தோனேசியாவின் மொல்லுகாசாவை பூர்வீகமாகக் கொண்டது. ரோமானிய பாதிரியர்கள் சாதிக்காவை ஒரு வகை வாசனைப் புகையாகவும் பயன்படுத்தி வந்துள்ளார்கள் என்பதற்கான சில ஆதராங்களும் உள்ளன. இது இடைக்கால உணவு வகையில் விலை மதிப்புள்ள மற்றும் மிகவும் விலை உயர்ந்த வாசனைத் திரவியமாகவும் பயன்பட்டு வந்ததாக அறியப்படுகின்றது. அது மாத்திரமன்றி இது சுவையூட்டியாகவும் மருத்துவ பொருளாகவும் பாதுகாப்பு முகவராகவும் பயன்படுத்தப்பட்டு வந்ததாக அறிய முடிகின்றது. அத்துடன் அன்றைய காலப்பகுதியில் ஐரோப்பிய சந்தையில் அது விலையுயர்ந்து காணப்படுகின்றது. 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப பகுதியில் சாதிக்காய் இலங்கைக்கு அறிமுகம் செய்து வைக்கப்படுகின்றது. ஆனால் பட்டுச் சாலையில் பயனித்த வர்த்தகர்களினால் இதற்கு முன்னரே இந்த பயிரைக் கொண்டு வந்ததற்கான சான்றுகள் காணப்படுகின்றன.
உற்பத்திகள் மற்றும் பயன்கள்
சாதிக்காய் மற்றும் சாதிபத்திரி ஆகிய இரண்டும் பிரதான உற்பத்தியாகும். சாதிக்காய் மற்றும் சாதிபத்திரி ஆகிய இரண்டில் இருந்தும் எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகின்றன. சாதிக்காய் மற்றும் சாதிபத்திரி ஆகியவற்றின் தூள் கறி மசாலா பொடியில் பயன்படுத்தப்படுகின்றன. சமையலின் போது கறிகளுக்கு சுவையூட்டுவதற்காகவும் ஏனைய உணவு உற்பத்திகளின் போதும் இனிப்பு பண்டங்கள் மற்றும் சாதிப்பத்திரி ஆகிய இரண்டும் பயன்படுத்தப்படுகின்றன. மென் பாணங்கள் மற்றும் பாணங்கள் தயாரிக்கையில் இவை பயன்படுத்தப்படுகின்றன. ஆயுர்வேத மற்றும் சீன மருத்துவத்தின் ஒரு உள்ளீடாக சாதிக்காய் பயன்படுத்தப்படுகின்றது (சாதிபத்திரி மற்றும் வெளிப்புற பழம் தொடர்பில் இங்கு குறிப்பிடப்பட வில்லை)
பிரதானமாக செய்கை மேற்கொள்ளப்படும் பிரதேசங்கள்
பொதுவாக சாதிக்காய் குளிர் பிரதேசங்களிலேயே பயிர் செய்யப்படுகின்றன. அவ்வகையில் இலங்கையில் மத்திய மலை நாட்டின் பிரதேசங்களில் சாதிக்காய் செய்கை மேற்கொள்ளப்படுகின்றன. இலங்கையில் சாதிக்காய் மேற்கொள்ளப்படுகின்ற மொத்த நிலப்பரப்பு 2788 ஹெக்டேயர்களாகும். இது கண்டி மாவட்டத்தின் 80% அகும். ஏனைய பிரதான வளர்ப்பு பிரதேசங்களாக கேகாலை மற்றும் மாத்தளை மாவட்டங்களை குறிப்பிடலாம்.
இன வகைகள்
இலங்கையில் விஷேடமாக எந்த ஒரு இனமும் இனங்காணப்பட வில்லை உயர் உற்பத்தி தரவல்ல தாய் மரங்கள் தெரிவு செய்தல் (வருடத்திற்கு மரம் ஒன்றில் இருந்து 1000 இற்கும் மேல்) வழக்கமாக தாங்கும் பழக்கம் முழுமையான ஈரமான விதையின் நிறை 30 கிராம் ஆகும். சாதிக்காய் விதையின் அளவு ( ஒரு பழத்தின் ஈரமான நிறை 10 கிராம் ஆகும்) அத்துடன் சாதி பத்திரிகையின் பாரம் (பழம் ஒன்றில் 1 கிராம் ஈர நிறையாகும்) இங்கு பதிய முறை மற்றும் ஒட்டல் முறை ஆகிய இரண்டும் மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுகின்றன. அவை பெண் மரங்கள் தாங்கும் பழங்களை உற்பத்தி செய்ய முடியும்.
மண் மற்றும் கால நிலை தேவைப்பாடுகள்
மண்
அழமான நன்கு வடிகட்டிய ஈரமான களி மண் மற்றும் அதிக சேதனம் கொண்ட மணல் ஈரக்களி மண் என்பன மிகவும் உகந்ததாகும். அதிகம் நீர் கொண்டுள்ள மண் அல்லது நீர் தேங்கி நிற்கின்ற மண் பொருத்தமற்றது.
காலநிலை
மழைவீழ்ச்சி – 1,500-2500mm பரவலான மழை வீழ்ச்சி போதுமானதாகும்.
வெப்ப நிலை – சராசரி வெப்ப நிலை 20-30 C அக இருக்க வேண்டும்.
உயரம் –1500m மேல்
வளர்ச்சியின் முதல் மூன்று வருடத்திற்கும் நிழல் முக்கியமாகும். அதன் பின்னர் சூரிய ஒளி படச் செய்வது சிறப்பாகும். எவ்வாறாயினும் குளிரான, ஈரப்பதமான, நுன்காலநிலை, மரத்தின் ஸ்தாபக மற்றும் பழ அமைப்பு என்பவற்றிற்கு அதிகம் விரும்பப் படுகின்றன. வலுவான காற்று தீங்கு விளைவிக்கும். பள்ளத்தாக்குகளிலும் சரிவுகளிலும் சாதிக்காய் நன்கு வளரும்.
பயிர் ஸ்தாபகம்
8/2/2018 சாதிக்காய்
http:https://www.dea.gov.lk/www.exportagridept.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=136&Itemid=159&lang=en 2/3
நடுகைப் பொருட்கள்
நடுகைப் பொருளாக விதை பயன்படுத்தப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட தாய் தாவரங்களில் இருந்து முதிர்ச்சியடைந்த கடும் கபில நிற முழு அளவிலான விதைகள் நடுகைப் பொருளாக பயன்படுத்தப்படுகின்றன. விதைகள் அதன் வீரியத் தன்மையை 8-10 நாட்களில் இழப்பதால் இயன்றளவு விரைவாக நாற்று மேடையில் அதனை நடுதல் வேண்டும். மேல் மண், சாணி மற்றும் மண் ஆகியவற்றின் சம அளவில் கலந்து நிரப்ப்ப்பட்ட பொலிதீன் உறைகளில் கன்றுகளை நடுதல் வேண்டும். சுமார் 10 கிராம் பாறை பொசுபேற்றினையும் சேர்த்துக் கொள்ளவும் கன்றுகளை சுமார் 6-8 மாதங்களுக்கு நிழலின் கீழ் வைத்திருக்கவும் அப்போது கடினமாகுவதுடன் களத்தின் அதனை மீள் நடவும். பெரிய அளவிலான கன்றுகள் தேவைப்படுமிடத்து 6-8 மாத வயதினைக் கொண்ட கன்றுகள் பெரிய பொலிதின் உறைகளில் அதே அளவிலான கலவையினால் நிரப்பி மேலும் 9-12 மாதங்களுக்கு வைக்கவும். பெரிய மரங்களை களத்தில் நன்கு ஸ்தாபிக்கவும். நாற்று மேடையில் உள்ள கன்றுகளின் ஆரோக்கியம் வளர்ச்சிக்காக உரக் கரைசல் (100 லீற்றர் தண்ணீரில் யூரியா 1 கி.கிராம், 0.75kg TSP, 0.5kg MOP) நன்கு தெளிக்க வேண்டும். ஒரு மாதத்திற்கு ஒரு முறை மேல்சொல்லப்பட்ட கலவையில் இருந்து 250 மி.லீ. ஒரு மாதத்திற்கு மதிக்கவும்.
கள நடுகை
இடைவெளி – 20’x20’ (250 கன்று/ஹெக்)
பருவ மழை ஆரம்பித்தவுடனேயே நடுகை மேற்கொள்ள வேண்டும். நடுகை குழியின் அளவு 21/2’x21/2’ ஆகும். அத்துடன் அவற்றினை மேல்மண், மாட்டுச் சாணி கலவையினைக் கொண்டு நிரப்புதல் வேண்டும். கன்றின் கழுத்துப்பட்ட்டை வரை மண்ணின் மட்டம் இருத்தல் வேண்டும். அல்லது நடுகையின் போது குழியில் வேரினை மடிக்கவும். மரத்தை சுற்றி உள்ள மண் நடுகைக்கு பின்னர் போதிய அளவு தழைகூளம் இடல்வேண்டும்.
நேரடியாக சூரிய ஒளியில் இருந்து மரத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் அதற்காக தற்காலிக நிழல் வழங்குதல் வேண்டும். நடுகைக்கு 6-8 மாதங்களுக்கு முன்னரே தற்காலிக நிழல் மறக்கறி நடுகை செய்து இருப்பது சிறந்தது.
பயிர் முகாமை
ஆண் மரங்களை அகற்றுதல்
சாதிக்காய் மரங்களில் ஆண் மற்றும் பெண் என வெவ்வேறாக காணப்படுகின்றன. வெளித் தோற்றத்தை பார்த்து அதன் பாலினத்தை கண்டறிய முடியாது மரத்தின் பாலினத்தை இனங்கான்பதற்கு சராசரி விவசாயிகளுக்கு உள்ள ஒரே வழி பூத்ததன் பின்னராகும். பொதுவாக 50% ஆன கன்றுகள் ஆண் மரங்களாகும். பழத்தை உருவாக்குவதில்லை. ஆனால் அவை மகரந்த சேர்க்கைக்கு மிகவும் தேவையாகும். ஆகவே, பூத்ததன் பின்னர் ஆண் மரங்கள் அகற்றப்படுகின்றன. ஆண் பெண் விகிதம் 1: 10 அகும். வெற்றிடங்கள் புதிய மரங்களை ஸ்தாபிப்பதற்கும் நிரப்பலாம்.
உர பிரயோகம்
பரிந்துறைக்கப்பட்ட கலவை – (ஹெக்டேயறுக்கு 250 கன்றுகள் அடர்த்தி) 10 வருடங்கள் மற்றும் பின்னர் ஹெக்டேயருக்கு 625 கி.கிராம்.
கலவையின் உட்கூறுகள் | நிறையின் பகுதி | கலவையில் உள்ள போசனை |
யூரியா (46% N) | 2 | 13%N |
பாறை பொசுபேற்று ( 28% P2O5) | 2 | 8% P2O5 |
மியுரயேற்றுப்பொட்டாசு (K2O) | 3 | 25% K2O |
கேசரைட்டு (24% MgO) | 1/3 | 1% MgO |
உர பிரயோக விகிதம்
தாவரத்தின் வயது | பெறும்போகம் (கலவை கி.கி/ ஹெ) | யாலபோகம் (கலவை கி.கி/ ஹெ) |
1 | 120 | 120 |
2 | 250 | 250 |
3 | 375 | 375 |
4 | 500 | 500 |
5 | 625 | 625 |
6 | 750 | 750 |
7 | 875 | 875 |
8 | 1000 | 1000 |
9 | 1125 | 1125 |
10 yr. onwards | 1250 | 1250 |
மேல்தளம் மற்றும் களை அகற்றல்
கன்றின் அடித்தளத்தை மேல் தளத்தில் வைப்பது முக்கியமாகும். குறிப்பாக சாய்வான நிலப்பரப்பில் 0.5 மீ. விட்டத்தில் வைத்தல் வேண்டும். அதன் பின்னர் மரம் வளர்வதற்கு ஏற்ப அகலமாகும். மேல் தளத்தில் உட்சாய்வு வெட்டப்பட்ட மண்ணில் மண்ணரிப்பை குறைக்க துனை நிற்கும்.
களைகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அடிக்கடி வெட்டுவதை சிபாரிசு செய்யப்படுகின்றது வெட்டப்படும் பொருட்களை தழைக்கூளமாக மரங்களின் அடியில் பிரயோகிக்கவும். மண்ணரிப்பு பாதுகாப்புக்காகவும் களைகளை கட்டுப்படுத்துவதற்காக மூடு பயிர்களை வளர்க்கலாம். உதாரணம் Stylosanthus.
8/2/2018 சாதிக்காய்
http:https://www.dea.gov.lk/www.exportagridept.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=136&Itemid=159&lang=en 3/3
பயிர் பாதுகாப்பு
நோய் மற்றும் பீடை
சாதிக்காயில் இலை விழும்நோய்
சாதிக்காயின் இலை விழும்நோய் சமீபத்தில் பொருளாதார ரீதியாக முக்கியமான நோயாக அடையாளம் காணப்படுகின்றது. குறிப்பாக கண்டி மற்றும் மாத்ளை மாவட்டங்களில் ஆகும். பங்கசுவினால் ஏற்படுகின்ற ஒரு நோயாகும். ஆரம்ப கட்டத்தில் கருப்பு அல்லது பழுப்பு நிற முற் தலைகளை இலையில் காணலாம். பக்கவாட்டு நிலையில் அனைத்து இலைகளும் விழுந்து விடும். நோயை கட்டுப்படுத்துவதற்காக சுகாதாரம் மிக முக்கியமாகும். தண்ணீர் 10 லீற்றரில் மேன்கோசெப் 80% இனை கரைத்து இரு வாரத்திற்கு ஒரு முறை விதானங்கள் மீது தெளித்தல் வேண்டும்.
அறுவடை மற்றும் அறுவடைக்கு பின்னரான செயன்முறை
நன்கு முகாமை செய்யப்பட்டு இருந்தால் 7 ஆவது வருடத்தில் சாதிக்காய் காய்ப்பதற்கு அரம்பிக்கும். அத்துடன் அந்த நேரத்தில் அறுவடை அதிகரிக்கும். சாதிக்காய் உற்பத்தி திறனை அடைந்து கொள்வதற்கான வயது நிச்சயமற்றது. ஏனெனில் இது 100 வருடத்திற்கும் மேல் சிறந்த விளைச்சலை தரும். எவ்வாறாயினும் 20 வருடங்களின் பின்னர் அறுவடையின் இடைவெளி (ஓய்வு) காணப்படுகின்றது.
சாதிக்காயின் உற்பத்தி மரத்திற்கு மரம் வேறுபடும் அதாவது ஒரு மரத்தில் இருந்தான உற்பத்தி 8000- 10000 விதைகளை உற்பத்தி செய்கின்றது. வருடத்திற்கு மரம் ஒன்றில் இருந்து சராசரி உற்பத்தி 1500 ஆகும். அத்துடன் வருடத்திற்கு மரம் ஒன்றிற்கு உலர் சாதி பத்திரி 1-1.5 கி.கிராம் ஆகும். பழங்களை பிரித்தவுடன் அல்லது பிளவுபடும் போது அவை மரங்களில் இருந்து கையினால் எடுக்கப்படுகின்றன. பழங்கள் மெதுவாக கையினால் திறக்கப்படும். அத்துடன் ஒரு சிறிய கூர்மையான கத்தியினால் சாதிக்காயை வெட்டி சாதிக்காயின் உள்ளே உள்ள பத்திரியை அகற்ற வேண்டும். அவ்வாறு வெட்டினால் கத்தி விதையில் அடிப்பகுதியின் வைத்தே வெட்டுதல் வேண்டும். விதைகள் நன்கு சல சல என உலரும் வரை உலர்த்துதல் வேண்டும். உலர்த்திய சாதிக்காயை அவ்வாறே விற்பனை செய்யலாம். அல்லது பருப்பினை மட்டும் விற்பனை செய்யலாம்.
சாதிபத்திரியை கையினால் தட்டையாக்க வேண்டும் அத்துடன் பிரகாசமான ஆரஞ் மஞ்சள் மணம் கொண்ட உற்பத்தி நிலையை அடையும் வரை மெதுவான நடுத்தர சூரிய ஒளியில் உலர்த்துதல் வேண்டும்.
நிலையான தர விபரக் குறிப்பு
சாதிபத்திரி
- தரம் I விஷேடம்
- தரம் 1:
ஓடு நன்கு உலர்ந்த சாதிபத்திரியை கொண்டுள்ளது. இது சாதாரண மொத்த சாதிபத்திரியின் நான்கின் ஒரு பகுதிக்கும் குறைவான 5% இற்கும் அதிகமான துண்டுகளைக் கொண்டுள்ளது.
- தரம் ll:
ஒடு நன்கு உலர்ந்த சாதிபத்திரி துண்டுகளைக் கொண்டு அமைந்திருக்கும் பூஞ்சணங்கள் மற்றும் பூச்சிகள் : ஒடுகள் எந்த தரத்தினை கொண்டதாக இருந்தாலும் சரி அவை 3% இனை விடவும் அதிகரித்தலாகாது. புறம்பான விடயங்கள் : ஒடுகள் எந்த தரத்தினை கொண்டதாக இருந்தாலும் சரி அவை 1% இனை விடவும் அதிகரித்தலாகாது.