கோப்பி
Coffea arabica, Coffea robusta
குடும்பம் : Rubiaceae
கோப்பி மரங்கள் அவற்றினது ஆற்றலை பாதுகாத்துக் கொண்டதாகவும் அறுவடை செய்வதற்கு இயலுமாகின்ற வகையிலும் மரங்கள் கட்டையாக வெட்டப்படுகின்றன. அனால் கோப்பி மரங்கள் 30 அடி ( 9 மீற்றர்) உயரத்திற்கும் மேல் வளரக்கூடியது. ஒவ்வொறு மரமும் பச்சை நிறத்தினால் மூடப்பட்டு இருக்கும். ஏனைய ஒவ்வொறு சோடிக்கும் எதிராக மெழுகு இலைகள் வளர்க்கப்படுகின்றன. கோப்பிப் பழங்கள் கிளைகளின் ஊடாகவே வளர்கின்றன. ஏனெனில் அது தொடரான சழற்சியில் வளர்கின்றது. ஒரு மரத்தில் ஒரே நேரத்தில் பூக்கள், பச்சை பழங்கள் மற்றும் பழுத்த பழங்கள் ஒரே நேரத்தில் பார்ப்பது வழக்கமன்று முதலாவது பூத்ததன் பின்னர் ஒரு பழம் முதிர்ச்சி அடைவதற்காக சுமார் 1 வருடம் எடுக்கின்றது. அத்துடன் முழுமையான பழ உற்பத்தியை அடைவதற்கு 5 வருடம் வளர்ச்சி அடைதல் வேண்டும் கோப்பி மரங்கள் சுமார் 100 வருடங்கள் வாழக்கூடியதாக உள்ளது. 7 முதல் 20 வருட காலத்திற்கு இடையே பொதுவாக அதிகளவிலான உற்பத்தியை பெற்றுத் தருகின்றன. முறையான பராமரிப்பை மேற்கொள்கையில் அவற்றினது உற்பத்தி வெளியீட்டினை மேலதிக வருடங்களுக்கு அதிகரிக்கலாம். அத்துடன் அவை இன வகையிலும் தங்கி உள்ளது. கோப்பி மரம் ஒன்றின் சராசரி உற்பத்தி வருடத்திற்கு பழுத்த கோப்பி 10 இறாத்தல்களாகவும் பச்சை கோப்பி 2 இறாத்தல்களும் ஆகும். வர்த்தக நோக்கில் மேற்கொள்ளப்படுகின்ற சகல இன கோப்பியும் உலகின் ஒரு பிரதேசத்தின் இருந்து கோப்பி வலயம் என அழைக்கப்படுகின்றன. இலேசான வெப்பநிலை, அடிக்கடி மழை மற்றும் நிழல் தரும் வெயிலுடன் வளமான மண்ணில் கோப்பி சிறப்பாக வளரும்.
வரலாறு
1503 ஆம் ஆண்டில் அராபியர்களினால் கோப்பி இலங்கைக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது ஆரம்ப காலத்தில் இலங்கை வருடத்திற்கு ஏறத்தாள 50000 டொன் கோப்பியை ஏற்றுமதி செய்து வந்தது. ஆனால் கோப்பி துரு என்றழைக்கப்பட்ட கடுமையான நோய் காரணமாக 1870 ஆம் ஆண்டு கோப்பிச் செய்கை முழுமையாக அழிக்கப்பட்டது. பின்னர் கோப்பி செய்கை இறப்பர் மற்றும் தென்னம் செய்கையின் கீழ் இடைப் பயிராக மேற்கொள்ளப்பட்டது. ஆகவே, வருடாந்தம் கிட்டத்தட்ட 600 டொன் கோப்பி இறக்குமதி செய்யப்பட்டு இருக்கின்றன. துரு சகிப்புத் தன்மைக் கொண்ட அராபிகா இனவகைகளும் கலப்பின கோப்பி வகைகளும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் கோப்பிச்செய்கை பிரபலம் அடைந்தன.
பிரதானமாக வளரும் பிரதேசங்கள்
அராபிகா இன வகை கோப்பி 800 மீற்றருக்கும் மேல் உயரமுள்ள ஈரமான மற்றும் இடை வெப்பவலய காலநிலையை பெரிதும் விரும்புகின்றது. அவ்வகையில் அதிகம் பயிர்ச் செய்யப்படும் பிரதேசங்களாக நுவரெலியா, கண்டி, மாத்ளை, மற்றும் பதுளை மாவட்டங்களை குறிப்பிடலாம். ருபஸ்ட்டா இன வகை கோப்பிகள் 800 மீற்ரை விடவும் குறைவான உயரத்தில் வளரக்கூடியது. அகவே, ருபஸ்ட்டா பிரதானமாக கேகாலை, குருணாகலை, கண்டி மற்றும் மாத்தளை பிரதேசங்களில் செய்கைப்பன்னப்படுகின்றது. கோப்பி செய்கையில் மொத்த விஸ்திரணம் சுமார் 60580 ஹெக்டேயராகும்.
இன வகைகள்
கோப்பி ருபியாசியா Rubiaceae குடும்பத்தை சேர்ந்தது. அதில் சுமார் 60 இனங்கள் காணப்படுகின்றன. அவற்றின் மத்தியில் அராபிகா மற்றும் ருபஸ்ட்டரா என்பன பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தன. லைபரிகா Liberica கோப்பி இலங்கையில் வர்த்தக ரீதியாக வளர்க்கப்ப்படுவதில்லை.
- அராபிகா கோப்பி – (Coffea Arabica)
அராபிகா கோப்பியின் தோற்றம் இதியோப்பியாவாகும். 800 மீற்றரை விடவும் அதிகமான உயரத்தினைக் கொண்ட குளிர் காலநிலையில் கோப்பிச் செய்கை மேற்கொள்வது பெரிதும் சாத்தியமாகும். மரங்கள் சிறிதாக பேணுகின்ற போது அவற்றினை பராமரிக்க மிகவும் இலாபமாகும். 5 கி.கி.பச்சை கோப்பியில் இருந்து 1 கி.கி பதப்படுத்தப்பட்ட கோப்பியை உற்பத்தி செய்யலாம். அராபிகா கோப்பி சுய மகரந்தச் சேர்க்கையை கொண்டது. ஆகவே விதை இனப்பெறுக்கத்தை மேற்கொள்ள முடியும். அராபிகா கோப்பி உயர் தரமான சுவையூட்டியாகவும் நறுமனம் தருவதாகவும் காணப்படுவதன் காரணமாக சந்தையின் அதன் விலை அதிகமாக உள்ளது. உச்ச உற்பத்தியை தரவல்ல கோப்பி இனங்களாக . HTD, S09, கடிமோர், லக்பெரகும், லக்சவிரு, மற்றும் லக் கோமாலி என்பவற்றை குறிப்பிடலாம். அதே வேலை கோப்பி நோய்களுக்கு ஆளாகின்றன.
- ருபஸ்டா (Coffea canephora)
இது ஆபிரிக்காவை பிறப்பிடமாகக் கொண்டுள்ளது. இக்கோப்பியினை ஈரவலய மற்றும் இடைவெப்ப வலயத்தில் 800 மீற்றர் உயரத்திற்கும் மேல் பயிர்ச் செய்கையை மேறகொள்ளலாம். பச்சை கோப்பி 4.5 கி.கிராம் முதல் 5 கி.கிராம் கொண்டு பதப்படுத்திய கோப்பி 1 கி.கிராமை பெற்றுக் கொள்ள முடியும் புதிதாக வெளியிடப்பட்ட இன வகைகள் IMY, S274, GCR, CCI, லங்கா சந்திர, லங்கா பிம்சார மற்றும் லங்கா இசுரு என்பனவாகும்.
- லைபிரிகா Liberica coffee
இந்த வகையான கோப்பிகள் பெரிய மரங்களாக காணப்படுகின்றன. இது வர்த்தக மட்டத்தில் வளர்க்கப்படுவதில்லை. இது கசப்பு சுவையுடையது. எவ்வாறாயினும் மலேசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இந்தக் கோப்பிக்கு இன்னும் அதிக கேள்வி காணப்படுகின்றது.
மண் காலநிலை தேவைப்பாடுகள்
மண் :
மண்ணின் pH பெறுமானம் 5 – 6.5 இற்கும் இடையில் காணப்படுதல் வேண்டும். மண்ணில் அதிக அமிலத்தன்மை காணப்படுமாயின் டொலமைற் பிரயோகிப்பதனை சிபாரிசு செய்யப்படுகின்றது. நன்கு வடிகட்டிய லெடாசொலிக் மண் அராபிகா கோப்பிக்கு மிகவும் பொருத்தமானதாகும். ருபஸ்டா கோப்பி மண்ணின் அதிக மாற்றத்திலும் மேற்கொள்ள முடியும்.
உயரம் :
அராபிகா கோப்பி செய்கைக் 800 மீ. உயரம் போதுமானதாகும். ஆனால் அதே வேலை ருபாஸ்ட்டா கோப்பிக்கு 800 மீ. விடவும் அதிகமான உயரம் தேவைப்படுகின்றது. கடிமோர் ஒரு கலப்பினமாகும். இதனை உயர் நிலம் மற்றும் தாழ் நிலங்களிலும் மேற்கொள்ளலாம்.
வெப்பநிலை மற்றும் மழைவீழ்ச்சி :
அராபிகா | ருபஸ்டா | |
சராசரி வருடாந்த மழை வீழ்ச்சி | 1500-2750mm | 1750 mm மற்றும் மேல் |
சராசரி வருடாந்த வெப்பநிலை | 18-24 C | 27-29 C |
காற்று:
அடிக்கடி பெருங்காற்று வீசுவது கோப்பிக்கு பொருத்தமில்லை அதிக காற்று வீசும் பிரதேசங்களில் கோப்பிச் செய்கை மேற்கொள்வதாயின் காற்றுத் தடைகளை மூடுதல் வேண்டும்.
பயிர் ஸ்தாபகம்
வெட்டல் முறையினால் தாவர இனவிருத்தி மற்றும் விதை மூலம் இனவிருத்தி மேற்கொள்ளலாம். ஆனால் விதை இனப்பெறுக்கம் மேற்கொள்ளப்படுவதாக இருத்தல் முதிர்ந்த பழுத்த பழங்கள் பீடைநோய் தாக்கத்திற்கு உள்ளாகாத தாய் மரத்தில் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். கவனமாக மேற்தோலை அகற்றுதல் வேண்டும். விதையை சுற்றியுள்ள சதையை மரத் தூளினால் தேய்த்து அகற்றுதல் வேண்டும். விதைகளுக்கு இடையிலான இடைவெளி 0.5செ.மீ. ஆகவும் விதை வரிசைகளுக்கு இடையிலான இடைவெளி 2.5செ.மீ. ஆகவும் ஈர மண் படுக்கைகள் மீது விதையை நடுதல் வேண்டும். 5 செ.மீ. அளவு தடிப்பிற்கு வைக்கோல் படுக்கையினால் விதைகளை மூடி விடுதல் வேண்டும். விதை முளைப்பதற்கு சுமார் 45 நாட்கள் எடுக்கும் விதையிடல் பொத்தான் நிலைக்கு வருகின்ற போது மேல் மண், மண், தும்புத் தூள் மற்றும் கூட்டெறு என்பவற்றை சம அளவில் நிரப்பிய 12.5cm X 20cm அளவிலான பொலிதீன் உறைகளுக்கு மாற்றம் செய்தல் வேண்டும்.
கள நடுகை
இடைவெளி : அராபிகா 1.8m X 1.8m (3000 கன்று/ஹெ)
ருபஸ்ட்டா 2.5m X 2.5m இரட்டை தண்டின் ஒற்றைத் தண்டு (1600 கன்று/ஹெ)
3m X 3m பெறுக்கத் தண்டு (1150 கன்று/ஹெ)
நடுகை குழி : வளமான மண்ணில் 45X45X45cm ஆக இருத்தல் வேண்டும். வளமற்ற மண்ணாயின் அது 60X60X60 cm அக இருத்தல் வேண்டும். குழிகளில் கள நடுகை மேற்கொள்வதற்கு முன்னர் 25 கி.கி. மாட்டுச் சானி அல்லது 100 கிராம் பாறை பொசுபேற்றுடன் கலந்த கூட்டெறுவால் நிரப்புதல் வேண்டும். கள நடுகைக்கு பின்னர் உலர்வதில் நின்றும் கன்றுகளை பாதுகாப்பதற்காக தழைக்கூளம் இடுவது முக்கியமானதாகும்.
பயிர் முகமை
கன்றுகளை சூழ களை அகற்றுவது முக்கியமாகும். கலபகோனியா அல்லது ஸ்டைலோசாந்தஸ். உடன் ஆன மேற்பரப்பு மூடுகையை சிபாரிசு செய்யப்படுகின்றது.
நிழல்
கோப்பி நிழலுடன் அல்லது நிழல் இன்றி வளர்க்க முடியும். மண்ணின் ஈரப்பதன், மழைவீழ்ச்சி அமைப்பு மற்றும் கோப்பியின் இனவகைகள் என்பவற்றில் நிழல் மட்டம் தங்கி உள்ளது. 12 X12m அல்லது 14X14m இடை வெளியுடன் கிளிரிசிடியா, எரித்ரினா, அல்பேசியா என்பன நிழல் மரங்களாக பயன்படுத்த முடியும். நிழல் மரங்களின் ஸ்தாபனமானது 6-12 மாதங்களுக்கு முன்னரே மேற்கொள்ளப்பட்டு இருத்தல் வேண்டும். வாழைச் செய்கையானது கோப்பிக்கான தற்காலிக நிழல் வழங்குவதற்காக ஒரு சிறந்த மாற்று வழி ஒன்றாகும்.
கத்திரித்தல்
ருபாஸ்டா கோப்பியின் பொருத்த மட்டில் ஒரு மாதத்திற்கு தளிர் தண்டு அல்லது பெறுக்க தண்டு இருப்பதனை விடவும் இரண்டு தண்டுகளை பராமரிப்பது என்பது சிறப்பாகும் கோப்பி மரம் 2 மீற்றர் உயரத்தினை விடவும் குறைவாக பராமரித்தல் வேண்டும். சகல கோப்பிச் செய்கைக்குமாக காலர் கத்தரிப்பு பரிந்ரை செய்யப்படுகின்றது. மரத்திற்கு அது திடீர் அழுத்தமாக இருக்குமாயின் 450 கோணத்தில் நில மட்டத்தில் இருந்து 15-20 செ.மீ. இற்கும் மேலாக கத்தரித்தல் மேற்கொள்ள வேண்டும். வெட்டும் மேற்பரப்பின் மீது பங்கசு கொல்லி அல்லது லெக்கர் பயன்படுத்த வேண்டும்.
கலப்புப் பயிர்
மிளகு, கிராம்பு, சாதிக்காய், தென்னை மற்றும் தேயிலை என்பவற்றிற்கு இடையே கலப்புப் பயிராக கோப்பி பயிரிட முடியும்.
உரப் பிரயோகம்
ருபஸ்டா
யாழ மற்றும் மஹா போகத்திற்கு முன்னர் | யாழ மற்றும் மஹா போகத்திற்கு பின்னர் | |
1 ஆம் வருடம் | 63g | 63g |
2 ஆம் வருடம் | 250g | – |
3 ஆம் வருடம் | 350g | – |
அராபிகா
யாழ மற்றும் மஹாபோகத்திற்கு முன்னர் | யாழ மற்றும் மஹாபோகத்திற்கு பின்னர் | |
1 ஆம் வருடம் | 50g | 50g |
2 ஆம் வருடம் | 150g | – |
3 ஆம் வருடம் | 200g | – |
மேற் கூறப்பட்டுள்ள உறத்தின் அளவை தேயிலை உரத்தில் இருந்து அல்லது பின்வரும் உரக்கலவையில் இருந்துபெற்றுக்கொள்ள முடியும்.
வீதம் | போசனை | |
யூரியா (46% N) | 4 | 14% N |
பறை பொசுபேற்று 28% P2O5) | 5 | 11% P2O5 |
MOP (60% K2O) | 3 | 14% K2O |
கேரைட் 24 % MgO | 1 | 2% MgO |
நோய்கள்
நாற்று மேடையில் உள்ள கன்றுகளை நூற்புழுக்கள் மற்றும் நத்தைகளினால் பாதிக்கப்படுகின்றன. அதற்கும் மேலாக தனமைப்படுத்தப்படுகின்றது. இப்பிரச்சனைக்கு வடிகாலமைப்பே தீர்வாகும்.
- ஆரம்ப நாட்களில் கோப்பித் துரு கடுமையான நோயாக காணப்பட்டது. ஆனால் தற்போது துருநோயை இல்லா தொழிப்பதற்கு வழிவகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 05% போடோ Bodo கலவை பிரயோகம் பரிந்துரைக்கப்படுகின்றது. அராபிகா கோப்பி மிகவும் எளிதில் பாதிப்டைகின்றது.
- சூட்டி அச்சுகள் : இலைகள் மீது வளரும் கருப்பு நிற பங்கசு ஒளிச் சேர்க்கையை குறைக்கின்றது. இலைகள் உதிரக்கூடும் 1% மா பிரயோகம் பரிந்துரை செய்யப்படுகின்றது.
- எந்திரக்னோஸ் : பழங்களிலும் இலைகளிலும் மண்ணிரமான புள்ளிகள் காணப்படும். படிப்படியாக இறக்க நேரிடலாம். 1% போடோ Bodo கலவை பிரயோகம் பரிந்துறை செய்யப்படுகின்றது. நிழலை குறைத்து கொள்வதும் சிறப்பானதாகும்.
பீடைகள்
கோப்பி பழத் துளை : கோப்பிப் பழங்களை சேதப்படுத்துகின்றது. சேதத்தை கட்டுப்படுத்துவதற்கு களச் சுகாதாரம் முக்கியமானதாகும். மங்கிய பழங்களை களத்தில் இருந்து நீக்கி விடுதல் வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட அறுவடைகள் தளர்க்கப்படல் வேண்டும்.
அவற்றிற்கும் மேலாக கோப்பி மரங்களை சைலேபோரஸ் மோர்ஸ்டாட்டி, அனோமலா எஸ்பி மற்றும் செதில்கள் கோப்பி மரங்களை சேதப்படுத்துகின்றன.
அறுடைக்கு பின்னரான செயன்முறை
கோப்பியில் தெரிவு செய்யப்பட்ட அறுவடை முறைகளை மேற்கொள்ளவும் இரண்டு வகையான பதப்படுத்தல் முறைகள காணப்படுகின்றன. அவையாவன ஈர மற்றும் உலர் முறைகளாகும்.
உலர் முறை :
முழுமையான பழுத்த பழங்கள் அறுவடை செய்யப்படுகின்றன. சேதமடைந்த பழங்கள் அகற்றப்பட்டு சூரிய ஒளியில் உலர்த்தப்படுகின்றன. உலர்ந்த பின் தோல் அகற்றப்படும் இதனை செரிகோப்பி என்றழைப்பர்
ஈரமான முறை :
பழுத்த பழங்கள் அறுவடை செய்யப்படுகின்றன. அத்துடன் அறுவடை செய்யப்பட்டு 10 மணி நேரத்திற்குள் பழ இயந்திரத்தை பயன்படுத்தி வெளி படல தோல் அகற்றப்படும். 24 மணி நேரம் முதல் 48 மணி நேரம் வரை பாயினால் மூடி விதைகளை நொதிக்க விடுதல் வேண்டும். பின்னர் அவற்றினை நன்கு கழுவி சூரிய ஒளியில் உலர்த்துதல் வேண்டும். இந்தக் கோப்பியை காகிதத் தோல் காபி Parchment coffee என்றழைப்பர் இது செரி கோப்பியை விடவும் சிறந்தது.