ஏலக்காய்

Elettaria cardamom
குடும்பம் – Zingiberaceae

வரலாறு

ஏலக்காய், “மசாலா ராணி” என்று அழைக்கப்படுகிறது, இது ஒரு போலி தண்டு மற்றும் அடர்த்தியான ஒழுங்கற்ற வடிவ வேர்த் தண்டுக் கிழங்குகளைக் கொண்ட ஒரு நிலையான பூண்டுத் தாவரமாகும். ஏலக்காய் தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெறும் காடுகளாக வளர்கின்றது. ஏலக்காய் என்பது ஒரு சுவையூட்டியாகவும் மற்றும் மருத்துவ பயிராகவும் விளங்குகின்றது என்று பல வரலாற்று நூல்கள் சுட்டிக்காட்டுகின்றன. கி.பி. 2 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையே எழுதப்பட்ட மருத்துவ தொகுப்பு நூலான சாரகா சன்ஹிட்ட என்ற நூலில் எலக்காய் மருத்துவ பொருட்கள் உற்பத்தியின் போது ஒரு மூலப் பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றதாக எடுத்துக் கூறுகின்றது.  கி.மு. 4 ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் எலக்காய் பற்றிய குறிப்புக்கள் சமஸ்கிரத நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வகையில் ஏலம் கௌடிலாயாஸ் என்றழைக்கப்படுகின்றது. அர்த்த சாஷ்திரத்தில் அரசியல் கட்டுரையிலும் மற்றும் தைத்திரியா, சம்ஹிதா என்பதிலும் சமய விழாக்களில் பிரசாதத்திற்காகவும் பயன்படுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளன. 11 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் ஏலம் பற்றி மொனாசெய்லசா அல்லது ஸ்பிலென்டா எனும் நுலில் ஐசுவை வெற்றிலை வாய் அல்லது ஐசுவை வாசனைக் கொண்ட வெற்றிலை வாயிற்கான உற்கூறுகள் பொருட்பட்டியலில் இது உள்ளடக்கப்பட்டு இருந்தது. கி.பி.சுமார் 1500 ஆம் ஆண்டுகளில் மண்டு சுல்தானின் நீதி மன்றத்தில் இருந்த சமையல் குறிப்பிலும் இது உள்ளடக்கப்பட்டு இருந்தது. ஏலம் அராபிய வர்த்தகங்களில் சர்வதேச வர்த்தக பொருளாக அறுமுகம் செய்து வைத்தனர். அத்துடன் போர்த்துகேயர் பயணி பார்போசாவின் கூற்றுப்படி 1524 ஆம் அண்டுகளில் ஏலக்காயின் சர்வதேச வர்த்தகம் நன்கு வளர்ச்சி கண்டு இருந்தது.

தென் இந்தியாவில் (Watt, 1872) இரண்டு வகையான அமைப்பில் எலக்காய் பயன்படுத்தப்படுகின்றது என்று Linschoten அவரது Journal of Indian Travels (1596) இல் குறிப்பிட்டு இருந்தார்.

உற்பத்தி மற்றும் பயன்பாடு

உலர்ந்த பழம் அல்லது ஏலம் என்பது ஒரு வர்த்தக பண்டமாகும். ஏலக்காயை ழுமையான ஏலம், ஏல விதை மற்றும் கீழ் மட்ட வடிவம் என்றவாறு காணலாம். எண்ணெய் மற்றும் ஒலியோரசின் பிரித்தெடுப்பதற்காகவும் இது பயன்படுத்தப்படுகின்றது. கறி அல்லது இறைச்சி கறி சமைத்தல், இணிப்பு பண்டங்கள் தயாரித்தல் மிட்டாய் வகை, வெதுப்பக உற்பத்திகள் போன்ற உணவுக் கைத்தொழில்களிலும் சுவையூட்டும் ஒரு முகவராக பயன்படுத்தப்படுகின்றது. கோப்பி மற்றும் தேயிலை போன்ற பாணங்கள் மற்றும் குளிர் பாணங்களுக்கும் எலக்காய் எண்ணெய் பயன்படுத்தப்படுகின்றன.  

இது ஆயுர்வேத மருத்துவம் மற்றும் சீன மருத்துவத்திலும் ஒரு சக்தி வாய்ந்த நறுமனமாகவும், தூண்டுதல் காரணியாகவும், இறைப்பை குடல் வலி நீக்கியாகவும், வயிற்று வலிக்காகவும் மற்றும் சிறுநீர் பிரிப்புகளுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.

முக்கியமாக வளரும் பகுதிகள்

இலங்கையின் மத்திய மலை நாட்டில் 600 மீற்றர் உயரம் கொண்ட பகுதியில் இதனைக் காணலாம். இலங்கையின் ஈரவலயத்தில் விவசாய புவியியல் பிரதேசத்திலும் மலை நாட்டில் இடைவெப்ப வலயத்திலும் ஏல உற்பத்தியை காணலாம். எலம் பிரதானமாக வளர்க்கப்படும் மாவட்டங்களாக கண்டி மாத்ளை கேகாலை நுவரெலியா இரத்தினபுரி மற்றும் காலியில் ஒரு பகுதியிலும் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படுகின்றன.

இன வகைகள்

ஏலக்காயில் மூன்று வகையான இனங்கள் இலங்கையில் காணப்படுகின்றன. அவை மஞ்ஞரிகளின் வடிவத்தில் அடிப்டையிலேயே வளர்க்கப்படுகின்றன.

  • மலபார் – மஞ்சரிகள் குப்புற விழச் செய்தல்.
  • மைசூர்-மஞ்சரிகள் செங்குத்தாக குப்புற விழச் செய்தல்.
  • வஜுக்கா- மஞ்சரி சாய்ந்துள்ளது.
மலபார் மைசூர் வஜுக்கா
நடுகை உயரம் 600-900m 900-1350m 800-1300m
பழம் தரும் கிளைகள் (panicles) குப்புற விழச்செய் நிமிர்ந்த அரைவாசி நிமிர்ந்த
கேப்ஸ்யூல் வட்டம் நீளமான நீளமான
மேற்பரப்பின் கீழ் இலை மென்மை சொரசொரப்பான சொரசொரப்பான
உயரம் 2.5 -3.0m 3.5- 4.5m 3.5-4.5m

மண் மற்றும் காலநிலை தேவைபாடுகள்

மண்

நன்கு வடிகட்டப்பட்ட ஆழமான செம்மண் மற்றும் குப்பை தழைக்கூளம் கொண்ட பொருட்கள் (75%) உயர் சேதன பொருட்களுடன் கூடிய மண் விரும்பத்தக்கது. நீர் தேங்குகின்ற அல்லது மண்ணரித்துச் செல்லப்பட்ட மண் பொருத்தமானதன்று மண்ணின்  pH 4.5 முதல் 6.0 வரை ஆகும்.

காலநிலை
உயரம் 600 மீற்றரை விட  அதிகமாக இருக்க வேண்டும். மலை நாட்டில் மற்றும் மத்திய நாட்டின் ஈர வலயத்தில் மலைப் பாங்கான பிரதேசம் பெரிதும் விரும்பத்தக்கது.

மழை வீழ்ச்சி

நன்கு பரவலான மழைவீழ்ச்சி வருடாந்தம் 1500 – 2500mm கிடைக்க வேண்டும். சுமார் 60% நிழல் ஏலக்காய் செய்கைக்கு காணப்பட வேண்டும் என்பது முக்கிய காரணியாகும். ஆகவே இது பொதுவாக இயற்கை காணகத்தின் சூழப்பட்ட பிரதேசங்களில் வளர்க்கப்படுகின்றது.

வெப்ப நிலை – இதற்கு மிகவும் பொருத்தமான வெப்ப நிலை 10-25 0C காணப்படுவது அவசியமாகும்.

பயிர் ஸ்தாபகம்

நடுகைப் பொருட்கள்

ஏலக்காய் பொதுவாக கன்றுகள் அல்லது விதைகளின் ஊடாக இனப்பெறுக்கம் செய்யலாம். கன்றுகள் மிகவும் சிறந்தது. அத்துடன் அவற்றினை பொதுவாக பயன்படுத்தலாம். ஏறத்தாள 8 – 10 செ.மீற்றர் நீளம் கொண்ட வேர்த் தண்டு கிழங்கு கொண்ட 6-10 செ.மீ.  நீளம் கொண்ட கன்றுகளை இதற்காக பயன்படுத்தப்படுகின்றன. பங்கசு நோய்களில் இருந்து பாதுகாப்பதற்காக நடுகைக்கு முன்னர் செப்பு அடிப்படையாகக் கொண்டு பங்கசு கொல்லியினால் அவற்றினை நன்கு அமிழ்த்துதல் வேண்டும்.

களநடுகை

இடைவெளி 

  1. சம தரைகள்  – 2.0x 2.5m
  2. நீர் குட்டை நிறைந்த நிலம்  – 1.25 x 2.5m (வரிசைகளுக்கு இடையே )

நடுவதற்கான புள்ளிகள் – 2000/ஹெ

நடுகை குழிகளின் அளவு 60 cm x 60cm x 45 cm ஆகும். குழிகள் யாவும் கொம்போஸ்ட் மற்றும் மேல் மண் கலவயைக் கொண்டு குழிகளை நன்கு நிரப்புதல் வேண்டும். ஒவ்வொறு குழிக்கும் பாறை பொசுபேற்று 100 கிராம் சேர்த்தல் வேண்டும். வேர்த் தண்டுகள் நில மட்டத்தில் இருந்து 5cm கீழ் நடுதல் வேண்டும்.

பயிர் முகாமை

உர பிரயோகம்

பரிந்துரைக்கப்பட்ட கலவை  – ஹெக்டேயருக்கு 2000 தாவர அடர்த்தியில் வருடத்திற்கு ஹெக்டேயருக்கு 715 கி.கிராம்

கலவையின் உட்கூறுகள் எடை பாகங்கள் கலவையில் ஊட்டச்சத்து
யூரியா (46%N) 4 16%N
 பாறை பொசுபேற்று RP ( 28 % P2O5) 4 10% P2O5
மியுரயேற் ஒப்பொற்றாசு MP (60% K2O) 2 11% K2O
கேசரைட் (24%MgO) 1 2%MgO
மரத்தின் வயது   பெறும்போகம்  (கலவை/கி.கிஹெ) யாலபோகம் (கலவை/கி.கிஹெ)
1 ஆம் வருடம் கி.கிராம் 100 100
2 ஆம் வருடம் கி.கிராம் 200 200
3 ஆம் வருடம் மற்றும் அதற்கு மேல் கி.கிராம் 350 350

மண் ஈரப்பதன் பாதுகாப்பு

குறிப்பாக சரிவுகளில், பொருத்தமான மேல்தள முறைகள் மூலம் மண் அரிப்பைத் தடுக்க கவனம் செலுத்தப்பட வேண்டும்.

நீர்ப்பாசன

வறட்சியான காலப்பகுதியின் போது மேலதிக நீர்ப்பாசனம் வழங்கப்படுவதானது குறிப்பிடத்தக்க அளவில் உற்பத்திகளை அதிகரிக்க முடியும்.

களை அகற்றல்

செதுக்கல் முறையிலான களை அகற்றல் முறை பரிந்தரை செய்ய்ப்படுகின்றன. அவற்றினது உற்பத்தி சுழற்சியை முடித்துக் கொண்டுள்ள போலித் தண்டுகள் 50 செ.மீ. இற்கும் மேல் வெட்டி விடுதல் வேண்டும். அத்துடன் வளைந்து காணப்படும் தண்டுகளை நசுக்குதல் வேண்டும்.

நிழல் ஒழுங்கமைப்பு

பெறும்போகத்திற்கான மழை ஆரம்பிப்பதற்கு முன்னரே அதிகப்படியான சூரிய ஒளியை வழங்குவதன் மூலம் அதிகப்படியான வளர்ச்சியை குறைப்பதன் மூலம் நிழலை கட்டுப்படுத்துவது பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

பயிர் பாதுகாப்பு

1. பூச்சுகள்

அரும்பு தண்டு துளை

http:https://www.dea.gov.lk/www.exportagridept.gov.lk/web/images/stories/cardamom4.png
http:https://www.dea.gov.lk/www.exportagridept.gov.lk/web/images/stories/cardamom5.png

இலை உறைகளில் போடப்படுகின்ற முட்டைகளில் இருந்து வெளிவந்த லாவாக்கல் போலி தண்டுகளின் உட்புற பாகங்களை சாப்பிடுகின்றன. இதன் விளைவால் அதன் சுழல் பகுதி வறண்டு போகின்றன. இறந்த இதய அறிகுறி என்று இதனை அழைப்பர். வெறுமையாக காணப்படுகின்ற கப்சியூல்ஸ் காரணமாக முதிர்ச்சி அடையாத பழங்கள் கூட தாக்கத்திற்கு உள்ளாகின்றன. லாவாக்களின் மல செயற்பாடுகள் தண்டுத் துளையின் ஊடாக வெளிவருவதனை அவதானிக்கக் கூடியதாக இருக்கும்

  • கட்டுப்பாடு  
    தண்டினுள் குடிகொண்டு வாழும் லாவாவை கொல்வதற்காக பாதிக்கப்பட்ட தண்டினை வெட்டி அழிக்க வேண்டும். 
  • இரசாயன கட்டுப்பாடு
  • 2 வார இடைவெளியில் 10 லீ. தண்ணீரில் 25 மி.லீ. லெபாய்சிட் 40 இசி (Lebaycid 40 EC)  சேர்த்தல்
  • 2 வார இடைவெளியில் 10 லீ. தண்ணீரில் 25 மி.லீ. செவின் (கார்பரில்) (Sevin (Carbaryl) சேர்த்தல்

3.   10 லீ.  தண்ணீரில் 12 மி.லீ. அட்டாப்ரான் 5 இசி Atabron 5 EC சேர்த்தல்

நோய்கள்

கொத்து அழுகல்


இலைகள் மஞ்சலாகுதல் மற்றும் போலித் தண்டுகளில் முதிர்வதற்கு முன்னர் இறத்தல் என்பன இதன் நோய் அறிகுறிகளாகும். வேர் கிழங்குகள் மற்றும் அரும்பு அடித்தளங்கள் மண்ணிறம் பழுப்பு நிறமாக மாறுதல் அத்துடன் அழுகிக் கொண்டு வரும் தோற்றத்தை காட்டும். பாதிக்கப்பட்ட வேர்கள் பிரகாசமாக மாறிவரும். அத்துடன் அரும்பை மெல்லமாக வளைக்கின்ற போதே அது இலகுவில் உடைந்து விடும். நோயினை கட்டுப்படுத்துவதற்காக


•   மேல் தளத்தை எப்போதும் சுத்தமாக வைத்திருத்தல்.

  • பாதிக்கப்பட்ட தாவரத்தையும் கிழங்கினையும் பிடுங்கி எரிக்கவும்.
  • மழைக் காலங்களில் வடிகாலமைப்பை மேம்படுத்தவும்.
  • இரண்டு வாரங்களின் பின்னர் பொசுபரஸ் பிரயோகித்தலினால் ஒரு கொத்துக்கு 80 கிராம் என்ற வீதத்தில் சுண்ணாம்பு பிரயோகித்தல்.


இலை கருகல், இலை புள்ளி மற்றும் இலை துரு என்பன னைய சிறு நோய்களாகும்.

கட்டுப்பாடு

இந்த நோய்கள் தற்போது பரவலாக காணப்படுவதில்லை. ஆகவே இங்கு எத்தகைய இரசாயன கட்டுப்பாட்டு முறைகளும் பரிந்துரைக்கப்பட வில்லை

அறுவடை மற்றும் அறுவடைக்கு பின்னரான செயன்முறை

அறுவடை  
ஏலக்காயை பொருத்த வரையில் நடுகை மேற்கொண்டு 3 வருடங்களில் அறுவடை மேற்கொள்ளப்படலாம். அறுவடை காலம் செப்டம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரையாகும். ஏலம் நன்கு பழுப்பதற்கு முன்னரே அறுவடை செய்து கொள்ள வேண்டும். அத்துடன் கத்தரிக்கோல் ஒன்றினை பயன்படுத்தி சொறுகுதல் வேண்டும். ஏறத்தாள மூன்று மாதங்களுக்கு 3-6 வார இடைவெளியில் அறுவடையை மேற்கொள்ளலாம். 

அழுக்குகளை நீக்குவதற்காகவும் மற்றும் துளை பாதிப்புகளுக்கு உள்ளாக்கப்பட்ட ஏலக்காய் அகற்றுவதற்காகவும் அறுவடை செய்யப்பட்ட ஏலக்காய்கள் நீரினால் நன்கு கழுவப்படுதல் வேண்டும். ஏலக்காய் நன்கு உலர்த்துதல் வேண்டும். அத்துடன் ஏலக்காயின் பச்சை நிறத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக 10-15 நிமிடத்திற்கு 2% சோடியம் காபனேற்று கரைசலில் அமிழ்த்தி வைக்க வேண்டும்.

 
பதப்படுத்தல்

“பசுமை குனப்படுத்தல்” என்று அழைக்கப்படும் வெப்ப காற்று தானியக் களஞ்சியங்களில் உலர்த்தப்படுகின்றது. ஆழமற்ற கம்பி வலையின் கீழ் தட்டில் கப்சியூல்ஸ் பரத்தி வைக்கப்படும். 45-500C வெப்ப நிலையில் அறையில் வைக்கப்படுகின்றன. சிகிச்சையளிப்பு அறையின் சுமார் 35 – 40 மணித்தியாலங்களிள் உலர் செயன்முறை முடிவுற்று விடும்.  இந்த தட்டுகள் இறாக்கைகளில் வைக்கப்படலாம். அத்துடன் அவற்றின் நிலை ஒவ்வொறு 10-12 மணித்தியாலயத்திற்கும் மாற்றம் அடையலாம்.

உலர்த்தியதன் பின்னர் தண்டுகளை அகற்றுவதற்கு கம்பி வலையில் ஏலக்காயை நன்கு சேர்க்க வேண்டும். அத்துடன் அங்கு நன்கு காற்று வீசுதல் வேண்டும். இறுதி உற்பத்தியானது சூரிய ஒளி படாது களஞ்சியப்படுத்தி வைக்கவும். அத்துடன் நிறத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக கருப்பு நிற பொலிதீன் உறைகளை பயன்படுத்தவும்.

• ஒரு ஹெக்டேயரில் உலர்ந்த உற்பத்திகள் சுமார் 60 கி.கி. ஆகும். ஆனால் சிறந்த முகாமைத்துவத்தின் கீழ் ஹெக்டேயருக்கு 250 கி.கிராம் உற்பத்தி செய்யலாம்.

நிலையான தரவிபரக் குறிப்பு

SLS 166:7980 தரத்திற்கு அமைய ஏலம் பின்வரும் 5 வகுதிகளில் தரப்படுத்தப்பட்டுள்ளன.

 தரம் நிறம் பிரிகின்ற வீதம் % கி/லீ.
லங்கா பச்சை பச்சை 2 370
லங்கா இளம் பச்சை -1 சற்று இளம் பச்சை 5 340
லங்கா இளம் பச்சை -2 இளம் பச்சை 6 320
லங்கா வெளிரல் விரிய நிறம் 8 300
லங்கா குறிப்பிடப்படாதவை நிற முடக்கம் குறிப்பிடப்படாத 360
http:https://www.dea.gov.lk/www.exportagridept.gov.lk/web/images/stories/cardamom6.png
http:https://www.dea.gov.lk/www.exportagridept.gov.lk/web/images/stories/cardamom7.png
http:https://www.dea.gov.lk/www.exportagridept.gov.lk/web/images/stories/cardamom8.png
http:https://www.dea.gov.lk/www.exportagridept.gov.lk/web/images/stories/cardamom9.png
http:https://www.dea.gov.lk/www.exportagridept.gov.lk/web/images/stories/cardamom10.png

மருத்துவ மற்றும் இரசாயன பண்புகள்

ஏலக்காய் அதன் பாரம்பரிய மருத்துவ மற்றும் உணவு பயன்பாடுகளுக்கு நன்கு அறியப்பட்டதாகும். நறுமனம் மற்றும் சுவை போன்ற பண்புகளைக் கொண்டு அதன் விதை தோல் காணப்படுவதன் காரணமாகவே இந்த வாசனைப் பொருள் விஷேடமாக பிரபல்யம் ஆனது. நுகர்வின் அளவு மற்றும் சுவையூட்டும் பண்பியல் என்பவற்றுடன் நன்கு ஸ்தாபிப்பதன் காரணமாக ஏலம் சுவையூட்டும் பொருளாக நன்கு பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன் ஏலம் கறி சமைக்கவும் உணவு பொருள் உற்பத்தியிலும் பயன்படுத்தப்படுகின்றது.

ஏலக்காயின் கூட்டு செயற்பாடுகளுடன் உயிரியல் செயற்பாடு மற்றும் விரைவில் ஆவியாதல் உற்கூறுகள் என்பன காணப்படுகின்றன. அதாவது antioxidant, antihypertensive, gastroprotective, மற்றும் antibacterial இந்த வாசனைத் திரவியமானது பெறுமதி சேர்க்கப்பட்ட உணவு உற்பத்திகளின் போது குறிப்பிடத்தக்க அளவில் பயன்படுத்துவதுடன் உணவு மற்றும் போசனை செயற்பாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.

ஏலக்காயின் அத்தியவசிய எண்ணெயில் உள்ள நறுமன சிகிச்சை திறன் சமிபாட்டு செயன்முறைக்கு பெரிதும் பயனுள்ளதாகும். ஏலக்காயில் அத்தியவசிய எண்ணையில் உள்ள முக்கிய கூறுகள் α-terpinyl acetate, 1,8-cineole, மற்றும் linalool இந்த அத்தியாயம் ஊட்டச்சத்து மற்றும் பாரம்பரிய மருத்துவ குனவியல் எதிர்பார்ப்புகள் என்பவற்றை எதிர்வு கூறுவதைப் போலவே அதனது உணவு விஞ்ஞான பிரயோகம் பற்றியும் குறிப்பாக அதன் அத்தியவசிய எண்ணெய் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தி உள்ளது.

மறுமொழி இடவும்