எமது இலக்கு
“வாசனைத் திரவியங்கள் மற்றும் அது சார்ந்த உற்பத்திகளின் ஏற்றுமதியில் திறனாக இருத்தல்”.
எமது செயற்பணி
ஏற்றுமதி விவசாய பயிர் உற்பத்தியின் தரம் மற்றும் அளவை மேம்படுத்துவதன் மூலம் அதிக அந்நிய செலாவணியைப் பெறுவதற்கான பிரதான நோக்கத்துடன் பொருத்தமான ஆய்வு மற்றும் அபிவிருத்தி திட்டத்தைத் திட்டமிடுதல் மற்றும் நடைமுறைப்படுத்துதல் மூலம் சுற்றுச் சூழலுக்கான பாதுகாப்புகளை உறுதி செய்யும் அதே வேலை ஏற்றுமதி விவசாய பயிர் துறையின் சகல பங்குதர்ராகளினதும் நிலையான பொருளாதார அபிவிருத்தி மற்றும் சமூக தர நிலைகள் என்பவற்றினை உறுதி செய்தல் அதன் பிரதான நோக்கமாகும் ”
மீளாய்வு
வாசனைத் திரவியங்கள் மற்றும் பானங்களின் வர்த்தக மேம்பாட்டிற்கு பொது மக்களது தலையீடு 40 வருடங்களுக்கும் மேல் வரலாற்றை கொண்டிருந்த போதிலும். அந்த வாசனைத் திரவியங்களுக்கான பயிரிடுவதற்கும் வர்த்தகத்திற்குமாக உலகளாவிய ரீதியில் நூற்றாண்டு காலமாக நாடு பிரபல்யம் அடைந்து காணப்படுகின்றது. ஏற்றுமதி விவசாய பயிர்களின் மத்தியில் முதலாவது தேசிய முயற்சியில் தேசிய திட்டமிடல் அமைச்சினால் முதலாவது தேசிய அபிவிருத்தி திட்டமிடல் தயாரிப்பதன் ஊடாக 1959 இல் கோப்பி அபிவிருத்தி செய்யப்பட்டு இருந்த்து. சிக்கனமற்ற தேயிலை நிலங்களில் அபிவிருத்தி யானது அந்த காலப்பகுதியில் அதிகம் பேசுபொருளாக காணப்பட்டது. அத்துடன் விவசாய அமைச்சினால் தயாரிக்கப்பட்ட விவசாய திட்டமிடல் முன்மொழிவுகள் சிக்கனமற்ற தேயிலை நிலங்களில் சிறு உரிமையாளர்களின் கோப்பி நடுகைக்கான ஒரு பதிலீட்டு திட்டமாகும்.
இந்த முயற்சி ஒரு வெற்றிகரமான முயற்சியாக கருதப்பட்டது. அத்துடன் 1963 ஆம் ஆண்டின் தேசிய திட்டமிடல் திணைக்களம் வர்த்தக வாசனைத் திரவியங்களின் அபிவிருத்தியின் வெளியீடுகளை மேற்கொண்டது. அத்துடன் கொக்கோவை அவர்கள் சிறு ஏற்றுமதி பயிராக கருதினார் எவ்வாறாயினும் இப்பயிர்களின் அபிவிருத்தியானது வர்த்தக செயற்பாட்டு விதிகளுக்கு அமைய 1971 ஆம் ஆண்டு தேசிய விவசாய திட்டமிடலின் பிரதான வகுதியாகக் கொண்டு வரப்பட்டுள்ளது.
1968 ஆம் ஆண்டு அமர்வு பத்திரகை இலக்கம் XVIII இல் வெளியிடப்பட்டு இருக்கின்றன. அத்துடன் ஆணைக்குழு கொக்கோ, கோப்பி, கறுவா, மிளகு என்பவற்றை அணைக்குழு சிபாரிசு செய்து இருந்தது. அத்துடன் சாதிக்காய் சிக்கனமற்ற தேயிலை நிலங்களில் மாற்றுப் பயிராக பயிரிடுவதற்கான சாத்தியம் காணப்பட்டது. மத்திய மலைநாட்டில் சிக்கனமற்ற தேயிலை நிலங்கள் அதிகளவில் காணக்கூடியதாக இருப்பதை தேயிலை ஆணைக்குழு அதன் ஆழமான ஆய்வின் பின் சுட்டிக் காட்டி இருந்தது. அத்துடன் ஏனைய பொருத்தமான பயிர்களில் தேயிலையின் பல்வகைப்படுத்தலுக்காக அழுத்தங்களும் தேவைப்பட்டு இருந்தது. அந்த அறிக்கையினை பின் தொடர்ந்து FAO/UNDP உணவு பயிர் பல்வகைப்படுத்தல் கருத்திட்டத்தை 1970 ஆம் ஆண்டு ஏப்பரல் மாதம் மத்திய மலைநாட்டில் ஆரம்பித்து வைத்தது. பயிர் பல்கைப்படுத்தல் கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் பின் உடனடியாகவே சிறு ஏற்றுமதிகள் பயிர்கள் திணைக்களம் 1972 ஆம் ஆண்டு அமைச்சரவை விஞ்ஞாபனத்தின் தோட்டக் கைத்தொழில் அமைச்சின் கீழ் உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த திணைக்களத்தின் பிரதான நோக்கங்களாவன சிறு ஏற்றுமதி பயிர்களில் இருந்து ஏற்றுமதி வருவாயை அதிகரித்தல் மற்றும் பயிர் பல்கைப்படுத்தல் மற்றும் உள்ளக நாடுகள் என்பவற்றின் ஊடாக பாரம்பரிய தேயிலை, இறப்பர், மற்றும் தென்னம் நிலங்களில் பொருளாதார நம்பகத்தனமையை அதிகரித்தல். கொக்கோ அபிவிருத்தி மற்றும் புணர் நிர்மான நிகழ்ச்சி திட்டங்கள் தென்னம் மற்றும் கொக்கோ புணர் நிர்மான திணைக்களத்தினால் கையாளப்படுகின்றன. அத்துடன் அது புதிதாக உருவாக்கப்பட்ட திணைக்களத்திற்கு உடனடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. ஆய்வு மற்றும் அபிவிருத்தி கொள்கைகள் அமுலாக்கத்திற்கான செயன்முறைகள் பயிர் பல்வகைப்படுத்தல் செயற்திட்டத்தில் ஆய்வு கற்கைகளிள் இருந்து விருத்தி செய்யப்பட்டு உள்ளன.
தோட்டக் கைத்தொழில் அமைச்ச்ன் கீழ் உருவாக்கப்பட்ட சிறு ஏற்றுமதி பயிர்கள் திணைக்களம் 1975 இல் விவசாய அமைச்சுக்கு மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் சிறு ஏற்றுமதி விவசாய பயிர்களுடன் ஆன சிக்கனமற்ற தேயிலை நிலங்களில் பல்வகைப்படுத்தல் நோக்கங்கள் தோட்டக் கைத்தொழில் அமைச்சுடன் தொடரந்தும் தக்வைக்கப்பட்டு உள்ளன. அதன் பிரதான நோக்கங்கள் ஒன்றினை இருத்தல் திணைக்களம் முகம் கொடுக்க வேண்டியதாக இருந்தது. அத்துடன் நிச்சயமற்ற தன்மை திணைக்களத்தில் இவர்களால் உருப்பெற்று இருக்கின்றன. எவ்வாறாயினும் FAO/UNDP கருத்திட்டத்தின் உதவியுடன் திணைக்களமானது அதன் உறுதியான ஆய்வு அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டங்களை உருவாக்கி இருந்தது. திணைக்களமானது அதன் ஏற்றுமதி இலக்கினது செயற்பாடுகளை அழுத்தமாக மேற்கொள்ள முடியுமாக இருந்தது. காலத்தின் தேவைப்பாட்டிற்கு அமைய இத்துறையின் அபிவிருத்திக்கு உறுதியாக இருக்கின்ற நிறுவனம் ஒன்று தேவைக்ப்பட்டதுடன் பிரதானமாக திணைக்களங்களின் தலையீடு காரணமாகவே 1992 ஆம் ஆண்டில் சிறு ஏற்றுமதி பயிர்கள் ஏற்றுமதி தரம் மற்றும் பெறுமதி பல மடங்குகளில் அதிகரித்து காணப்பட்டது. அதன் பெறுபேறாகவே திணைக்களமானது 1992 ஆம் ஆண்டு ஏற்றுமதி விவசாய திணைக்களமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. அத்துடன் பாராளுமன்ற சட்டத்தினால் (1992 இன் 46 ஆம் இலக்க சட்டம்) சட்டரீதியாக பலமாக ஸ்தாபிக்கப்பட்டது. ஏற்றுமதி விவசாய திணைக்களத்தின் உருவாக்கம் இத்துறையில் வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும். இத்திணைக்களம் உருவாக்கப்பட்டதன் பின்னர் மிகவும் ஒழுங்கமைப்பு முறையில் இப்பயிர்கள் மீதான அபிவிருத்தி ஆய்வு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.
1972 ஆம் ஆண்டு திணைக்கள உருவாக்கத்தின் போது இருந்தே திணைக்களத்தின் ஆராய்ச்சி அபிவிருத்தி அலகு ஆரம்பிக்கப்பட்டு இருந்தன. ஏற்றுமதி விவசாய பயிர்கள் வளர்க்கப்படுகின்ற 14 மாவட்டங்களில் அபிவிருத்தி அலகு அதன் செயற்பாடுகளை ஸ்தாபித்து இருந்தது. பயிர் பாதுகாப்பு உதவி திட்டத்தின் போது 1972 இல் இருந்தும் அதன் பின்னர் தெரிவு செய்யப்பட்ட பயிர்கள் மீதும் செயற்படுத்தப்படுகின்றன. இத்திட்டம் பல முறை புதுப்பிக்கப்பட்டது. ஆனால் அது இற்றைவரை செயற்பட்டுக் கொண்டுள்ளன.
முதலாவது ஆய்வு நிலையம் இரண்டு உத்தியோகத்தர்களுடன் மாத்தளையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அத்துடன் முழுமையான ஆதரவு உத்தியோகத்தர்களிடம் இருந்தும் நல்கப்பட்டது. பல வருடங்களுக்குப் பின்னர் ஆராயச்சி தொடர் மத்திய அராய்ச்சி நிலையமாக சகல வசதிகளுடனும் விரிவாக்கப்பட்டது. அத்துடன் ஏனைய அறு நுகர்வை அடிப்படையாகவும் கொண்ட ஆராய்ச்சி உப நிலையங்கள் குண்டசாலை, தெல்பிடிய, நில்லம்பே, பலொல்பிடிய மற்றும் நாரம்வலை போன்ற பிரதேசங்களில் உருவாக்கப்பட்டன. UNDP/FAO கருத்திட்டங்களினால் அபிவிருத்திக்கு அதரவு அளிக்கப்பட்டது. அத்துடன் 1987-1996 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உலக வங்கியினால் விவசாய ஆய்வு கருத்திட்டங்களுக்கு நிதியிடப்பட்டன. ஒரு கொள்கை என்ற வகையில் ஏற்றுமதி விவசாய திணைக்களம் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கும் சர்வதேச தரம் மற்றும் வர்த்தக ஒழுங்மைப்பு என்பவற்றிற்கு இனையாக உற்பத்தியின் தரத்தை மேம்படுத்துவதற்கும் அதிக கவனம் செலுத்தியது. இது ஏனைய உற்பத்தி நாடுகளுடன் போட்டியிடக் கூடியதாக இருக்கும் சர்வதேச சந்தை தேவைப்பாட்டை கருத்திட் கொண்டு ஏற்றுமதி விவசாய திணைக்களம் “ஒரு சிறந்த தர உற்பத்தி” எனும் தொனிப் பொருளின் கீழ் 2016 ஆம் ஆண்டிலும் அதன் முயற்சியை தொடர்ந்தது. சிறந்த விவசாய செயன்முறை (GAP) மற்றும் சிறந்த உற்பத்தி செயன்முறை (GMP) என்பவற்றை மேம்படுத்துவதன் மூலம் உள்நாட்டு உற்பத்தி முறைமையில் உணவு பாதுகாப்பு தரத்தினை அமுலாக்குவதை உறுதிப்படுத்துவதற்கும் அதற்கும் மேலாக “தனசவிய” என்றழைக்கப்படும் வீட்டுத் தோட்ட மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டம் ஒன்று கிராமிய சமூகத்தின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு அமுலாக்கப்பட்து. ஒரு கொள்கை என்ற வகையில் ஏற்றுமதி விவசாய திணைக்களம் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கும் சர்வதேச தரம் மற்றும் வர்த்தக ஒழுங்மைப்பு என்பவற்றிற்கு இனையாக உற்பத்தியின் தரத்தை மேம்படுத்துவதற்கும் அதிக கவனம் செலுத்தியது. இது ஏனைய உற்பத்தி நாடுகளுடன் போட்டியிடக் கூடியதாக இருக்கும் சர்வதேச சந்தை தேவைப்பாட்டை கருத்திட் கொண்டு ஏற்றுமதி விவசாய திணைக்களம் “ஒரு சிறந்த தர உற்பத்தி” எனும் தொனிப் பொருளின் கீழ் 2018 ஆம் ஆண்டிலும் அதன் முயற்சியை தொடர்ந்தது. சிறந்த விவசாய செயன்முறை (GAP) மற்றும் சிறந்த உற்பத்தி செயன்முறை (GMP) என்பவற்றை மேம்படுத்துவதன் மூலம் உள்நாட்டு உற்பத்தி முறைமையில் உணவு பாதுகாப்பு தரத்தினை அமுலாக்குவதை உறுதிப்படுத்துவதற்கும் அதற்கும் மேலாக “தனசவிய” என்றழைக்கப்படும் வீட்டுத் தோட்ட மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டம் ஒன்று கிராமிய சமூகத்தின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு அமுலாக்கப்பட்து.
பிரதானசெயற்பாடுகள்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தின் 1992 செப்டம்பர் 22 தேதியிட்ட 46 ஆம் இலக்க ஏற்றுமதி விவசாய பயிர் ஊக்குவிப்பு சட்டத்தினால் விதித்துறைக்கப்பட்டுள்ள செயற்பாடுகள் மற்றும் சேவைகள் என்பன கீழே தரப்பட்டுள்ளன.
- ஏற்றுமதி விவசாய பயிர் செய்கை மற்றும் செயலாக்கத்தை ஒழுங்கமைத்தல் மற்றும் மேம்படுத்துதல்.
- பயிர் மேம்பாடு, பயிர் வளர்ப்பு, பயிர் பாதுகாப்பு, அறுவடைக்கு பின்னரான கையாளுதல். மற்றும் சமூக பொருளாதாரம் குறித்து பலதரப்பட்ட ஆய்வுகளை மேற்கொள்ளல்.
- தரமான நடுகைப் பொருட்களின் உற்பத்தி மற்றும் வழங்கல்.
- பயிர் உற்பத்தி, உற்பத்தித் திறன் மேம்பாடு மற்றும் தர மேம்பாடு குறித்து ஏற்றுமதி விவசாய பயிர் உதவித் திட்டங்களை செயல்படுத்துதல்.
- பயிர் பாதுகாப்பு ஆலோசனை சேவைகளை வழங்குதல்.
- ஒருங்கிணைந்த பீடை முகமையை மேம்படுத்துதல்.
- ஒருங்கிணைந்த தாவர போசாக்கை மேம்படுத்துதல்.
- சேதன பண்ணையை மேம்படுத்துதல்.
- சந்தைப்படுத்தல், தரத் தரங்கள் மற்றும் விலைகள் போன்ற தகவல்களைப் பரப்புதல்.
- ஏற்றுமதி விவசாய பயிர் உற்பத்தி மற்றும் நடுகைப் பொருட்கள் போன்றவற்றின் இறக்குமதியை கட்டுப்டுத்தல்.
- ஏற்றுமதி விவசாய பயிர் உற்பத்தி, பதனிடல் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு பயிற்சி அளித்தல்.
- தோட்டத் துறையினருக்கு ஏற்றுமதி விவசாய பயிர்களை மேம்படுத்துவதற்கான ஆலோசனை சேவைகளை வழங்குதல்.
- ஏற்றுமதி விவசாய பயிர்களுடன் தொடர்புடைய பொது மற்றும் தனியார் அமைப்புகளுக்கு இடையேயான இணைப்பை வலுப்படுத்துதல்.
- 1992 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க ஏற்றுமதி விவசாய பயிர் சட்டத்தின் கீழ் நிறைவேற்று அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
- பிற அரசு நிறுவனங்களில் ஏற்றுமதி விவசாய பயிர் தொடர்பான கொள்கை விடயங்களுக்கு பங்களிப்பு நல்குதல்.
- தொழில்நுட்ப மாதிரித் தோட்டங்களை பராமரித்தல்.