இடை பயிர் மற்றும் வெற்றிலை ஆராய்ச்சி நிலையம்
தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள்
எற்றுமதி விவசாய திணைக்களம் , தம்பெலஸ்ஸ, நாரம்வலை, இலங்கை
தொலைபேசி இல : 037-2248879
தலை நகல் இல : 037-2249377
மின்னஞ்ஞல் : ibrs@yahoo.com
கண்ணோட்டம்:
இடைப் பயிர் மற்றும் வெற்றிலை ஆய்வு நிலையம் (IBRS) தென்னம் செய்கையின் கீழ் ஏற்றுமதி விவசாய பயிர்கள் இடைப் பயிர்களுக்காக முன்னுரிமை ஆய்வு நிலையமாக நாரம்வலையில் 1993 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. ஆய்வு நிலையத்தின் நோக்கமானது வெற்றிலை செய்கையின் மேம்பாட்டுக்கான திட்டமிடல், ஆய்வு அபிவிருத்தி நிகழ்ச்சிகள் என்பன அமுல் படுத்துதல் மற்றும் தென்னம் செய்கையின் கீழ் ஏற்றுமதி விவசாய பயிர் கிடைப்பதற்கு இயலுமாகின்ற வகையில் கற்றல் ஆய்வு நிலையத்தின் மொத்த நிலப்பரப்பு விஸ்தீரனம், பணிமனை கட்டடத் தொகுதி ஆய்வுக் களம் மற்றும் பண்ணை ஆகியன உள்ளடங்கலாக 64 ஏக்கர்களாகும். ஆய்வு அபிவிருத்தி செயற்பாடுகளுக்கும் மேலாக இந்த நிலையம் பயிற்சி நிகழ்ச்சிகள் உட்பட விரிவாக்கல் சேவைகளையும் வழங்குகின்றன.
அலகுகள் :
இனவிருத்தி அலகு
தொலைபேசி இல : +94 37 2249269
விவசாயவியல் அலகு
தொலைபேசி இல : 0372249302
மின்னஞ்சல் : agroibrs@gmail.com
மண், அறுவடைக்கு பின்னரான தொழில்நுட்பம் மற்றும் தாவர பாதுகாப்பு அலகு
தொலைபேசி இல : +94 37 2249194
சேதன ஆய்வு
இனவிருத்தி அலகு :
- தென்னம் செய்கையின் கீழ் இஞ்சி (Zingiber officinale) செய்கை மூலவுயிர் முதலுரு மதிப்பீடு செய்தல்.
- தென்னம் செய்கையின் கீழ் மஞ்சளின் சேகரிப்பு, ஸ்தாபகம், மற்றும் மதிப்பீடு.
- இலங்கையின் வெற்றிலை மூலவுயிர் முதலுரு சேகரிப்பு, ஸ்தாபகம், மற்றும் மதிப்பீடு மற்றும் பாதுகாப்பு.
- கீழ் நாட்டு இடைவெப்ப வலயத்திற்கான தெரிவு செய்யப்பட்ட கருப்பு மிளகு (Piper nigrum L) செய்கையின் கலப்பு.
- கீழ் நாட்டு இடை வெப்ப வலயத்தின் தென்னம் செய்கையின் கிழ் தெரிவு செய்யப்பட்ட கோப்பி (Coffia sp.) செய்கையாளர்களின் செயலாற்றுகையை மதிப்பீடு செய்தல்.
- கீழ் நாட்டு இடைவெப்ப் வலயத்தின் தென்ணையுடன் இடைப்பயிராக தெரிவு செய்யப்பட்ட கொக்கோ (Theobroma cacao) இன வரிசையை மதிப்பீடு செய்தல்.
விவசாயவியல் அலகு
- காலநிலை மாற்ற பொருத்தப்பாடு தொழில் நுட்பத்தில் கருப்பு மிளகு (Piper nigrum L.) உற்பத்திகளை மேம்படுத்துவதற்காக மண் ஈரழிப்பு பாதுகாப்பு முறைமைகள் மற்றும் விவசாய முகாமை செயன்முறை தொடர்பான கற்றல்.
- ஏற்றுமதி தரத்தினாலான வெற்றிலை இலைகளை (Piper betleL.) உற்பத்தி செய்வதற்கான உச்ச நிழல் மட்டத்தை ஆய்வு செய்தல்.
- வருடம் முழுதும் கிளை மிளகு பூக்கச் செய்வதற்கும் மற்றும் உற்பத்தியை மேற்கொள்ளவும் நீர்ப்பாசனங்களினதும் உர பிரயோகங்களினதும் தாக்கம்.
- வெற்றிலையின் (Piper betle L.) வளர்ச்சி உற்பத்தி மற்றும் இலைகளின் தரப்பிரமானம் மற்றும் வெவ்வேறு நுண்ணிய வானிலை காரணிகள் மீதன தங்குமிட மண்டலங்களின் தாக்கம்.
- இலங்கையில் குருணாகலை மாவட்டத்தில் தென்னம் செய்கையின் கீழ் கொக்கோவின் உற்பத்திகளை மேம்படுத்துதல் தொடர்பான கற்றல்.
மண், அறுவடைக்கு பின்னரானதொழில்நுட்பம் மற்றும் தாவர பாதுகாப்பு அலகு
- மிளகிற்கான (Piper nigrum) உயிர் அதரவு பொருளான தென்னை மரத்தின் பயன்பாடு தொடர்பிலான கற்கை.
- கழிவு வெற்றிலை (Piper betle) இலைகளை பயன்படுத்தி பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்தியை விருத்தி செய்தல் (NARP).
- வெற்றிலை செய்கையில் மண் உர தன்மையின் பண்புகள்.
- வெற்றிலை (Piper betle L.) செய்கையின் போதான உர கற்கைகள்.
- ஜிஐஎஸ் இடைக்கணிப்பு நுட்பத்தை பயன்படுத்தி குருணாகலை மாவட்டத்தில் வெற்றிலை செய்கையின் மத்தியில் வெற்றிலை இலை வெளிரல் நோயை (BLB) தடுப்பதன் சாத்தியத்தை புலனாய்வு செய்தல்.
- இலை வெளிரல் நோய்க்கு (BLB) காரணமான உயிரினத்தை உறுதிப்படுத்துதல் மற்றும் உயிரினத்தை முன்கூட்டியே கண்டறிவதற்கான ஒரு உள்ளக பி.சி.ஆர் (PCR) முறையை வளர்ச்சி செய்தல்.
- மிளகின் விதான அபிவிருத்தி மற்றும் உற்பத்தி மீதான வெவ்வேறு வெட்டுகை மட்டத்தின் தாக்கம்.
- வெற்றிலை (Piper betle L.) பற்றீரியா இலை வெளிரல் நோயை கட்டுப்படுத்துவதற்கான சுதேச தொழில் நுட்பத்தை பயன்படுத்துதல் தொடர்பாக ஆய்வு செய்தல்.
- வெற்றிலை (Piper betle L.) செய்கையின் பீடைகளை இனங்காணல் மற்றும் ஏற்றுமதி தரத்தில் இலைகளை பராமரிப்பதற்கு பொருத்தமான முகாமை செயன்முறையினை இனங்காணல்.
- வெற்றிலை (Pipper betle L) செய்கையின் தனி அதரவு முறைக்கான திணைக்கள உர கலவையை மதிப்பீடு செய்தல்.
- வெவ்வேறு மண் ஈரப்பதன் உள்ளடக்கத்தில் கீழ் வறட்சி சகிப்புத் தன்மைக்கான இஞ்சி (Zingiber officinale Roscoe) இன வகைகளை மதிப்பீடு செய்தல்.
- வெற்றிலை வெட்டுத் துண்டு உற்பத்திக்கான தென்னம் தும்பு மற்றும் கயிற்றுத் தூள் என்பவற்றுடன் வெவ்வேறு சாடி/ நாற்று மேடை ஊடகத்தை மதிப்பீடு செய்தல்.