வர்த்தக  ஆலோணை அலகு  (BCU)

வர்த்தக ஆலோசணை அலகு தரமான வாசனைத் திரவியங்களின் உற்பத்தி சிறந்த சந்தை வாய்ப்பை வழங்குதல் அத்துடன் ஏற்றுமதி பயிர் துறையின் பங்குதாரர்களுக்கு நியாயமான உயர் விலை என்பவற்றை உறுதி செய்து கொள்ளும் நோக்கத்திற்காக ஏற்றுமதி விவசாய திணைக்களத்தின் தலைமை பணிமனையில் இந்த அலகு ஸ்தாபிக்கப்பட்டது. அது புதுமையான விவசாயவியல் மற்றும் செயன்முறை தர நிலைகளை மேம்படுத்துகின்றது. அதாவது சிறந்த விவசாய செயன்முறை (GAP), சிறந்த உற்பத்தி செயன்முறை (GMP), அதேப் போல் சேதன பயிர் ஸ்தாபகத்திற்கான தரநிலை செயன் முறைகள மற்றும் சான்றிதழ்கள் HACCP மற்றும் சந்தை வர்த்தக சான்றிதழ்களாகும். அதற்கும் மேலாக வர்த்தக ஆலோணை அலகு ஆரம்ப தர வாசனைத் திரவிய உற்பத்திகளின் தரத்தினை சரிபார்ப்பதற்கு உற்பத்தியாளர்களுக்கான தர உறுதிப்படுத்தல் சான்றிதழ்கள் வழங்குவதற்கும், பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளை மேம்படுத்த்துதல், அத்துடன் வாசனைத் திரவிய வர்த்தகத்தில் புதிய முயற்சியான்மையாளர்களுக்கு  ஆலோசணை வழங்குதல் என்பவற்றிற்கு பொறுப்பாக உள்ளது. இந்த வர்த்தக ஆலோசணை அலகு வாசனைத் திரவிய உற்பத்தியாளர்கள் மற்றும் கொள்வனவாளர்களுக்கான இணைப்பதற்கான ஒரு நிலையமாகவும் விளங்குகின்றது. 

1. சூழல் பசுமை கிராம நிகழ்ச்சித் திட்டம் (சேதன நிகழ்ச்சித் திட்டம்)   

இந்த நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் ஏற்றுமதி விவசாய பயிர் செய்கையை மேற்கொள்கின்ற பண்ணையாளர் குழுக்களை சேதன பண்ணையாளர் சமூகமாக பதிவு செய்யப்படுகின்றனர். அத்துடன் அவர்களது பயிர்ச் செய்கை நிலங்களை பாரம்பரிய விவசாய செயற்பாடுகளில் இருந்து சேதன பண்ணை நிலங்களுக்கு மாற்றம் செய்வதற்காக தேவையான வழிகாட்டல்கள் மற்றும் முதலீட்டு உதவிகள் வழங்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுகின்ற ஏற்றுமதி பயிர்ச் செய்கை கிராமங்கள் சேதன பண்ணை கிராமங்களுக்காக வருடத்திற்கு சேதன முதலீட்டு உதவித் திட்டமாக ஒரு ஹெக்டேயருக்கு ரூபா 30,000.00 நிதி உதவியாக கிடைக்கப் பெறுகின்றன. அத்துடன் சேதன மாற்றுக் காலம் முடிடைகின்ற போது சர்வதேச ரிதியில் அங்கீகரிக்கப்பட்டுள்ள சேதன தரநிலைச் சான்றிதழை பெற்றுக் கொள்வதற்காக தொடரான மூன்று வருடங்களுக்கு  முறையே ரூபா 150,000.00, ரூபா 100,000.00, மற்றும் ரூபா 50,000.00 பண்ணை ஒழுங்கமைப்புகளுக்கு நிதி ஊக்குவிப்புத் தொகையாக வழங்கப்படுகின்றன.

2. சிறந்த விவசாயசெயன்முறை  (GAP) மீதான தர நிலை நிகழ்ச்சித்திட்டம்

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற ஏற்றுமதி பயிர்களின் தரத்தினை அடைவதற்கு சூழல் பாதிப்புக்களை குறைத்து ஆரோக்கியமான வாசனைத் திரவியங்களை உற்பத்தி செய்தல் பொருளாதார ரீதியாக சாத்தியமானவை, சுழல் நட்பு சமூகத்தில் ஏற்றுக் கொள்ளல் மற்றும் ஊழியர் நலனோம்பல்களையும் மற்றும் சமூக நீதியினையும் பாதுகாப்பதற்கு நிலையான ஏற்றுமதி பயிர்களை உற்பத்தி செய்வதற்காகவும்  சிறந்த விவசாய செயன்முறை (GAP) நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் ஏற்றுமதி பயிர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இலங்கை தரநிலைச் சான்றிதழ் (SLS) தரத்துடன் ஏற்றுமதி விவசாய திணைக்களத்தில் இருந்து முற்றும் முழுதும் இலவசமாக சிறந்த விவசாய செயன்முறை  (GAP) தரச் சான்றிதழை பெற்றுக் கொள்ள முடியும்.

விண்ணப்பம்

உள் தணிக்கை சரிபார்ப்பு பட்டியல்

பயிர் பதிவு புத்தகம்

தர மேலாண்மை திட்டம்

3. சிறந்த உற்பத்தி செயன்முறை மீதான (GMP) தர நலை நிகழ்ச்சித்திட்டம்.

நுகர்வோருக்கு இறுதி உற்பத்தியை தயார் செய்வதற்கு வாசனைத் திரவிய அறுவடையில் இருந்தான படிநிலை சிறந்த உற்பத்தி செயன்முறையில் தர நிலையுடன் சார்ந்த விடயமாகும். இந்த நிகழ்ச்சித் திட்டம் ஏற்றுமதி விவசாய திணைக்களத்தினால் தரமான வாசனைத் திரவியங்களின் கேள்வியை அதிகரித்தல் மற்றும் உள்நாட்டில் மற்றும் வெளிநாட்டில் அது சாந்ர்ந்த உற்பத்தியின் கேள்வியை அதிகரிக்கும் நோக்கில் அமுல் செய்யப்படுகின்றது. இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஏற்றுமதி பயிர் சேகரிப்பாளர்கள், களஞ்சியப்படுத்துனர்கள், பதப்படுத்துவோர் அவ்வாறே பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்தி பதப்படுத்துவோர்களுக்கு தரமாக மாற்றம் செய்வதற்கு ஆலோசணை மற்றும் வழிகாட்டல்கள் வழங்கப்படுகின்றன. அவ்வாறே இலங்கை தர நிலை நிறுவனத்தில் இருந்து அல்லது ஏனைய அங்கிகரிக்கப்பட்ட சான்றிதழ் நிறுவனங்களில் இருந்து சிறந்த உற்பத்தி செயன்முறை மீதான (GMP) சான்றிதழை பெறுவதற்கும் ஆலோசணைகள் வழங்கப்படுகின்றன. பதனிடும் பொதிகளை முதலீட்டு பெறுமதிகளுக்கு அமைய ஊக்குவிப்பு தொகையாக ரூபா 50,000.00 முதல் ரூபா 125,000.00 வரை வழங்கப்படுகின்றன.

விண்ணப்பம்

4. ஆரம்ப வாசனைத்திரவிய உற்பத்திக்காக தரமான பரிசோனை சான்றிதழ் வழங்குதல்

ஏற்றுமதி விவசய திணைக்களம் சகல மாவட்ட பணிமனைகளிலும் வாசனைத் திரவியங்களின் தர பரிசோதணைக்காக சிறு அளவிலான ஆய்வு கூட வசதிகள் ஸ்தாபிக்கப்பட்டு இருக்கின்றன.  அதேப் போல் கமநல சேவை நிலையங்களிலும், திணைக்களத்தின் விரிவாக்கல் உத்தியோகத்தர்கள் பணிமனைகளிலும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. உலர்ந்த கருப்பு/வெள்ளை மிளகு கறுவா, கிராம்பு, சாதிக்காய் மற்றும் கோப்பி போன்ற ஆரம்ப உற்பத்திகள் மீது இலவசமான அறிக்கைகளை அது வழங்குகின்றது. இதற்கும் மேலாக முறையே ​ பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படுகின்ற மண்ணின் நிலமையை கண்கானிக்கவும் மற்றும் மண் போசனையை மேம்படுத்துவதற்கும் பரிந்துரை செய்யப்படுகின்ற அறிக்கைகளை பெற்றுக் கொள்வதற்கும் இயலுமாகும் வகையில் சிறு ஆய்வுகூட வசதிகளும் இருக்கின்றன.  

5. உற்பத்தியாளர்கள் மற்றும் கொள்வனவாளர்கள் இணைப்பு

ஏற்றுமதி பயிர் உற்பத்தியினை விற்பனைக்காக பார்த்து நிற்கின்ற பயிர் செய்கையாளர்கள் சேகரிப்பாளர்கள் பதனிடுவோர் அல்லது ஆரம்ப தர அல்லது இரண்டாம் தர உற்பத்தியாளர்கள் சந்தை வாய்ப்பினை கண்டறிவதற்கும் அவ்வாறே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்வனவாளர்களுக்கு தரமான வாசனைத் திரவியங்களை கண்டறிவதற்கு வழிகாட்டல் மூலோபாயங்களை வழங்குகின்றது. வர்த்தக இணைப்பு அலகு BCU உற்பத்தியாளர் மற்றும் கொள்வனவாளர் ஆகிய இரு தரப்பினருக்கும் மூலோபாய முறைகளை வழங்குவதற்கு பிரதானமாக செயற்படுகின்றது இந்த வழிகாட்டல் ஆரம்பிப்போருக்கும் மற்றும் கண்டு பிடிப்பாளர்களுக்கும் விரிவானதாகும். அது போலவே வாசனைத் திரவிய கைத்தொழிலுக்கு உட்புகுகின்ற முதிர்வுற்ற முயற்சியானமையாளர்களுக்கும் சிறந்த முறையில் வழிகாட்டக் கூடியது. அத்துடன்  இந்நோக்கத்திற்காகவே பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களையும் வர்த்தக இணைப்பு அலகு BCU ஒழுங்கு செய்கின்றது.