மஞ்சள்

Curcuma domestica
குடும்பம் : Zingiberaceae

வரலாறு

மஞ்சள் இந்தியாவில் 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நிறமக்கள் முகவராக அற்புதமான முறையில் வெவ்வேறு மஞ்சள் நிறமாக செயற்படுவதால் அது சாயப் பொருளாக பயிர் செய்யப்பட்டு வந்து அப்போது அதன் பயன்பாட்டில் தேவை பற்றி நன்கு அறியப்பட்டது. அதனால் அதனை மக்கள் ஒப்னைப் பொருள் மற்றும் அலங்கரிப்புகளுக்காகவும் இறுதியில் மருத்துவ தேவைப்பாட்டிற்காகவும். பயன்படுத்தி வந்தனர். பிற்காலப்பகுதியில் அது ஒரு வாசனைத் திரவியமாகவும் மாற்றம் பெற்றது. இந்தியாவை பிறப்பிடமாகக் கொண்ட இந்த மஞ்சள் கி.பி.700 ஆம் ஆண்டுகளில் சீனாவிற்கும், கி.பி. 800 ஆம் ஆண்டளவில் கிழக்கு ஆபிரிக்காவிற்கும், 1200 களில் மேற்கு ஆபிரிக்காவிற்கும் போய்ச் சென்றடைந்தது. அதன் பின்னர் இந்தப் பயிர் உலகம் முழுதும் பிரபல்யம் அடையத் தொடங்கியது. 13 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய நாடுளுக்கு  அராபிய வர்த்தகர்களினால் மஞ்சள் எடுத்துச் செல்லப்பட்டது என்று தெரிய வருகின்றது.

உற்பத்தி மற்றும் பயன்கள்

மஞ்சள் உலர்ந்த வடிவமைப்பில் அல்லது பொடி செய்த அமைப்பில் சந்தை முழுதும் கிடைக்கப் பெறுகின்றன. கறி கலவைகள் தயாரிப்பின் போது மஞ்சள் ஒரு உள்ளீடாக பயன்படுகின்றன. மஞ்சளில் இருந்து ஒலியோரசின் மற்றும் எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகின்றது. இது முக்கியமாக உணவு கைத்தொழில் சுவையூட்டுவதற்காகவும் நிற மூட்டுவதற்காகவும் பயன்படுத்தப்படுகின்றது. அது மாத்திரமன்றி மஞ்சள் ஆடைக் கைத்தொழிலின் நிறமூட்டுவதற்காகவும் மற்றும் குறிப்பிட்ட நிறப்பூச்சுக்கள் உற்பத்தி செய்வதற்காகவும் பயன்படுத்தப்படுகின்றது. ஆயுர்வேத மருத்துவம் மற்றும் சீன மருத்துவத்திலும் மஞ்சள் ஒரு பொதுவான உள்ளீடாக பயன்படுத்தப்படுகின்றது. இந்தியாவில் மஞ்சள் அன்றாட வழ்வில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அத்துடன் சமய வழிபாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

முக்கியமாக வளரும் பிரதேசங்கள்

மஞ்சள் இலங்கையில் ஒரு தனிப்பயிராகவும் மற்றும் தென்னையுடன் இடைநிலைப் பயிராகவும் ஈரவலயத்திலும் இடைவெப்ப வலயத்திலும் பயிர்ச் செய்யப்படுகின்றது. குருணாகலை, கம்பஹ, களுத்துரை, கண்டி, மாத்ளை, மற்றும் அம்பாறை மாவட்டங்களில் பிரதானமாக வளர்க்கப்படும் மாவட்டங்களாகும்.

இனவகைகள்

உள்நாட்டில் வளர்க்கப்படுகின்ற இனவகையில் பல இருந்த போதிலும் அவை விஷேடமாக இனம் காணப்படவில்லை அங்கு இறக்குமதி செய்யப்படும் இன வகைகள் காணப்படுகின்றன.

மண் மற்றும் காலநிலை தேவைப்பாடுகள்

மண்

பல மண் வகைகளும் இதற்கு பொருத்தமானதாகும். எவ்வாறாயினும் நன்கு சேதனப் பொருட்களுடன் நன்கு வடிகட்டிய சேற்று களிமண் மற்றும் ஈரக்களிமண் போன்ற மண் வகைகள் மிகவும் பொருத்தமாகும். மேசமான முறையில் அல்லது குறைந்தளவு வடிகட்டிய பாறை மண் அல்லது களி வகையான மண் இதற்கு பொருத்தமில்லை.


காலநிலை

உயரம் : 1500 அடி மேல்

மழைவீழ்ச்சி – சிறந்த வளர்ச்சிக்காகவன்றி ஆண்டு மழை வீழ்ச்சி 1500 மி.மி  அல்லது அதற்கும் மேலாக இருத்தல் வேண்டும் எவ்வாறயினும் நீர்ப்பாசன  முறமைகள் கீழ் உலர் வலயங்களிலும் மஞ்சள் உற்பத்தி செய்ய முடியும்.

வெப்பநிலை – 20 ºC – 35º C  

pH – 5.5 – 6.5

நிழல் நடுத்தர நிழல் மிகவும் பொருத்தமானது அதிக நிழல் விளைச்சளை குறைக்கின்றது. தென்னை மற்றும் வாழை என்பவற்றுடன் இடைவெப்ப வலயத்தில் மிகவும் வெற்றிகரமாக வளர்க்கப்படுகின்றன.

பருவ காலம் பிரதான காலம் – மார்ச் ஏப்ரல்

குறுகிய காலம் செப்டம்பர் ஒக்டாபர் (பிரதானமாக வறட்சி காலம்)  

பயிர் ஸ்தாபகம்

நடுகைப் பொருள்

தாய் வேர்த்தண்டு கிழங்குகள் மற்றும் விரல் வேர்த் தண்டு கிழங்குகள் என இரண்டு வகையான வேர்த் தண்டு கிழங்குகள் உள்ளன. முதிர்ந்த விரல் தண்டுக் கிழங்குகள் மிகவும் பொருத்தமான நடுகைப் பொருளாகும். வேர்த் தண்டு கிழங்குகின் ஒரு துண்டின் எடை 30-50 கிராம் மற்றும் 1-2 மொட்டுகளுடன்  இருத்தல் வேண்டும் நடுகைப் பொருட்கள் நோய் தாக்கம் இல்லாததாக இருக்க வேண்டும் அத்துடன் நடுகை பொருளை அதிக விளைச்சல் தரவல்லவற்றில் இருந்து தெரிவு செய்து கொள்ள வேண்டும். நடுகை மேற்கொள்வதற்கு முன்னர் வேர்த்தண்டு கிழங்குகளை நடுகை காலத்தின் போது பங்கசு வளர்ச்சியை தவிர்த்து கொள்ளும் முகமாக சுமார் 5 நிமிடங்களுக்கு 10 லீற்றர் தண்ணீரில் (Mancozeb) 30 கிராமில் பங்கசு கொல்லி நன்கு அமிழ்த்தி வைத்திருத்தல் வேண்டும். ஹெக்டேயருக்கு 1500 – 2000 கி.கி நடுகைப் பொருள் தேவைப்படுகின்றது.

களநடுகை

மஞ்சள் பொதுவாக உயர்த்தப்பட்ட படுக்கைகளில் அல்லது முகடுகளில் நடப்படுகின்றது. களம் 35-40 செ.மீ. ஆழத்திற்கு நன்கு உழுதல் வேண்டும். அத்துடன் மண்ணை பதப்படுத்துதல் வேண்டும். நாற்றுமேடை படுக்கைகள் 4’ அகலமானதாகவும் 10 அடி நீளமானதாகவும் இருப்பதனை பரிந்துறை செய்யப்படுகின்றது. இருப்பினும் கிடைக்கப் பெறுகின்ற  இடைவெளிக்கு அமைய அது வேறுபடலாம். எவ்வாறாயினும் தென்னையுடன் இடைப் பயிராக மேற்கொள்கையில் கிடைக்கப் பெறுகின்ற இடைவெளிக்கு அமைய அகலம் நீளம் என்பன மாற்றமடையலாம். நாற்று மேடையின் படுக்கையின் உயரம் சுமார் 20 செ.மீ. ஆக இருக்க வேண்டும். வடிகால்கள் 30 செ.மீ. ஆழத்துடன் அமையப் பெறுதல் வேண்டும். அது படுக்கைகளுக்கு  இடையே அமைதல் வேண்டும்.

இடைவெளி – வரிசகளுக்கு இடையேயான  இடைவெளி – 30செ.மீ.

நாற்றுக்களுக்கு இடையேயான  இடைவெளி – 30செ.மீ.

ஒரு படுக்கைக்கு 3 அல்லது 4 வரிசைகள்

நடுகையின் ஆழம் 5-7.5செ.மீ.

நடுகை மழைக்கு பின்னர் மேற்கொள்ள வேண்டும். போதிய ஈரப்பதம் படுக்கைகளில் காணப்படாத விடத்து நீர்ப்பாசனம் மேற்கொள்ள வேண்டும்.

பயிர் முகாமை

தழைக்கூளம் இடல்

ஈரப்பதனை பாதுகாப்பதற்காகவும் களைகளின் வளர்ச்சியை தடுப்பதற்காகவும் நடுகை மேற்கொண்ட உடனடியாகவே தளைகூளம் இடல் வேண்டும். பொருத்தமான தழைக்கூளம் பொருட்களாக வைக்கோல், தும்புத்தூள், உலர் இலைகள் அல்லது கிளிரிசீடியா இலைகள் என்பன மிகவும் பொருத்தமாகும்.

சிபாரிசு செய்யப்பட்ட உர வகைகள்

நேரம் சேதனப் பசளை மெ.தொ. ஹெ யூரியா (கி.கி./ஹெ) TSP (கி.கி./ஹெ) MOP (கி.கி./ஹெ)
அடித்தளம் நடுகையின்போது 20 (ஒரு மேடைக்கு 50g) 100
1ஆவது பிரயோகம் 01 மாதத்தின் பின் 65 100
2ஆவது பிரயோகம் 03 மாதத்தின் பின் 65 100

களை அகற்றியதன் பின்னர் உரம் பிரயோகிக்க வேண்டும். அத்துடன் அதனை மண்ணுடன் கலக்க வேண்டும். அதன் பின்னர் படுக்கைக்கு தழைக்கூளம் இடுதல் வேண்டும். மழைமேடு உரம் பிரயோகிக்க வேண்டும். அல்லது உரம் பிரயோகித்ததன் பின்னரே நீர்ப்பாசனம் இடுதல் வேண்டும்.

அதற்கும் மேலாக கிளிரிசீடியா இலைகள் சேதன உரமாக பயன்படுத்த முடியும். அத்துடன் அதற்கு பதிலாக தேவையான அளவு இரசாயன பசளைகளை குறைத்துக் கொள்ள முடியும். அத்துடன் மண்ணின் ஈரப்பதன் பாதுகாத்தல் 

களை அகற்றல்

நடுகை மேற்கொண்டு ஒரு மாதத்திற்குப் பின்னர் களை அகற்றுதல் வேண்டும். நடுகை மேற்கொண்டு 3 மாதத்தின் பின்னர் இரண்டாவது களை அகற்றுதல் வேண்டும். அத்துடன் ஈரப்பதனை பாதுகாப்பதற்காக மீண்டும் தழைக்கூளம் இடுதல் வேண்டும். களை அகற்றுகின்ற போது வடிகால்களை சுத்தம் செய்து நிலத்தை வெட்டிப் புரட்டுதல் வேண்டும்.

பயிர் பாதுகாப்பு

நோய்கள்

இலை கறைபடிதல்

இந்த நோய் பங்கசு காரணமாக ஏற்படுகின்றது. முதலாவதாக மஞ்சள் படிவுகள் காணப்படும். பின்னர் அது இலை முழுதும் பரவும் இந்நோய் கடினமான நிலையில் இலைகள் எரிந்து காணப்படும். இந்நோயை கட்டுப்படுத்துவதற்காக விவசாய செயன்முறை மற்றும் கலாசார முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. பிரச்சினை தீவிர நிலையில் காணப்படுமாயின் மென்கசொப் 2 (Mancozeb-2) 10 லீற்றர் தண்ணீரில் 30 கிராமை கரைத்து தெளிக்கவும். மஞ்சளில் ஏற்படுகின்ற ஏனைய நோய்களாவன இலை சூரிய ஒளியில் கருகல், இலை அழுகல் மற்றும் வேர்த் தண்டு கிழங்கு அழுகல் என்பனவாகும்.


பீடைகள்

தண்டு துளைப்பான்

மஞ்சள் பயிர் செய்கையின் போது தண்டுத் துளைப்பான் பிரதான பீடைத் தாக்கமாகும். வயதுக்கு வந்த அந்துப் பூச்சுகள் இலைகளின் மேல் உறையில் முட்டை இடுகின்றன. அத்துடன் கம்பளிப் பூச்சு போலித் தண்டுகள் மீது நுழைகின்றன. அத்துடன் தாவரத்தின் உள்ளக தசைகளை தாக்குகின்றன. ஆரம்பத்தில் மரங்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும் அதன் பின்னர் அவை கபில நிறத்திற்கு மாற்றம் அடைந்து இறுதியில் இறந்துவிடும். இறந்த இதய அறிகுறி தண்டுத் துளைப்பானில் இருப்பதை இனங்காண்பதற்கான  தெளிவான சான்றாகும். சேதமாகிய தாவர பகுதியில் இவற்றின் பரம்பலை கட்டுப்படுத்துவதற்காக அழித்தல் வேண்டும். அத்துடன் நிலமை மோசமாக இருக்குமாயின் பரிந்துரைக்கப்பட்ட பூச்சி நாசினிகளை தெளிக்கவும்.

இலை சுருட்டும் கம்பளி பூச்சு மற்றும் அளவிலான பூச்சுகள் ஏனைய சிறிய பீடை தாக்கிகளாகும். 

அறுவடை மற்றும் அறுவடைக்கு பின்னரான செயன்முறை

அறுவடை

நடுகை மேற்கொண்டு 8-10 மாதங்களுக்கு பிறகு அறுவடை மேற்கொள்ளப்படுகின்றது. மார்ச், ஏப்ரல் காலப்பகுதியில் நடுகை மேற்கொண்டு இருக்கும் ஆயின் டிசம்பர் ஜனவரி மாதங்களில் அறுவடை செய்யலாம். அக்காலப் பகுதியில் மரங்கள் மஞ்ஞள் நிறத்தை அடையும். அத்துடன் இலைகள் உலரத் தொடங்கும் வேர்த்தண்டு கிழங்குகள் பாதிப்படையாதவாறு அறுவடை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் இணைக்கப்பட்டுள்ள மண் கொத்தை மரக் குச்சிகளினால் அகற்றுதல் வேண்டும்.

பதப்படுத்தல்

தாய்க்கிழங்கு மற்றும் விரல் வேர்த்தண்டுக் கிழங்குகள் என்பவற்றை வேறுபடுத்தவும். நன்றாக அதனை கழுவி சகல தண்டு பகுதிகளையும் அகற்றவும். அவை வாடுவதற்காக அவற்றினை சுமார் 2 நாட்களுக்கு விட்டுவிடவும். தாய் வேர்த் தண்டு கிழங்கினை துண்டுகளாக வெட்டவும். வேர்த்தண்டு கிழங்குகள் நீரினால் ¾ பங்கு நிரம்பிய மூடிய பாணை  ஒன்றில்  30 நிமிடம் கொதிக்க வைக்கவும் நன்றாக கொதிக்கின்ற போது வேர்த்தண்டு கிழங்குகள் மென்மையாகின்றன. நீருக்கு பதிலாக கொதி நீராவியையும் பயன்படுத்தலாம். ஒரு சில கிலோ கிராம் மஞ்சள் துண்டுகளை கொதிக்க வைக்க  பிரஷர் குக்கரையும் பயன்படுத்தலாம். அவித்த வேர்த்தண்டு கிழங்குகளை ஒரு நாளைக்கு வீட்டினுள் வைக்கவும். அத்துடன் பின்னர் வெயிலில் உலர்த்தவும். உலர்த்துகின்ற போது முதல் மூன்று நாளும் 3-4 மணி நேரம் ஆக மட்டுப்படுத்திக் கொள்ளவும். அதன் பின்னர் போதுமான அளவு உலர்த்திக் கொள்ளவும். முமையாக உலர்த்துவதற்கு 10-15 நாட்கள் செல்லும். நன்கு உலர்த்தியதும் அவை உலோக ஒலியை எழுப்பும். உலர்ந்த வேர்த் தண்டுகள் பிரகாசமான மஞ்சள் நிறத்தை அடையும் வரை நன்கு கரடு முரடான மேற்பரப்பில் உறைக்கவும்.

நிலையான தர விபரக் குறிப்பு

 
ஈரப்பதம் 9%
மஞ்சள் 5-6%
விவாரியான விடயங்கள் (பௌதீக நிறை) 0.5%
அத்தியவசிய எண்ணைய் 3-5%

மருத்துவ மற்றும் இரசாயன பண்புகள்

மஞ்சளில் உள்ள பிரதான இரசாயனச் சேர்வை மஞ்சள் (curcumin) அகும். மஞ்சளின் உள்ளடக்கம் இனம், விவசாய காலநிலை நிலமை என்பவற்றை பொருத்து 2-6% மாற்றமடையும் இறுதியாக இற்றைப்டுத்தப்பட்ட திகதி வெள்ளிக்கிழமை 20 ஜூலை 2018

மறுமொழி இடவும்