பாக்கு

Areca catechu L
குடும்பம் – பால்மியா

வரலாறு

பாக்கு மற்றும் வெற்றிலை ஆகிய இரண்டையும் கலந்து மென்று சாப்பிடுவது பல நூற்றாண்டுக்கு முன்னரில் இருந்தே ஆசியா மற்றும் பெருங்கடல் மக்களிடையே காணப்பட்டு வந்த ஒரு பாரம்பரிய மற்றும் வழக்கமும் அகும். பாக்கு மற்றும் வெற்றிலை ஆகிய இரண்டும் உடற்திறன் மற்றும் மருந்தாக ஒன்றினைந்தது எப்போது என்று தெரியவில்லை. தாய்லாந்து இந்தோனேசியா மற்றும் பிலிபைன்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து வரும் புவிச்சரிதவியல் சான்றுகளுக்கு அமைய நான்காயிரம் வருடம் அல்லது அதற்கு மேற்பட்ட காலங்களில் வாழ்ந்து வந்தவர்கள் அவ்வாறு பயன்படுத்தி வருகின்றனர் எனலாம். இந்திய துணைக் கண்டத்தின் வெற்றிலை மற்றும் பாக்கு ஆகியவற்றை மென்று சாப்பிடுவதானது வேத காலத்திற்கு முந்தய ஹரப்பன் பேரரசில் இருந்தே இருந்து வருகின்றது. கி.மு. 140 இற்கு முன்னிருந்தே சீனா வேலை “சன்ஹு – சுன்தன்” எனவும் மலேசியாவில் “பில்லாங்” எனவும் பாக்கினை அழைத்தனர். சோலமன் தீவு வாசிகள் பாக்குடன் வெற்றிலை மற்றும் சுண்ணாம்பு என்பவற்றை சேர்த்து அவர்களது வாய்கள் சிவக்கும் வரையில் எவ்வாறு மென்று சாப்பிடுகின்றனர் என்பதை ஸ்பனிஷ் கடற்படை வீரரான அல்பாரோ டி மன்டேனா அவர்கள் எடுத்துக் கூறுகின்றனர். பாக்கின் தோற்றம் பற்றிய கருத்து நிச்சயமற்றதாக கருதப்படுகின்றது. அத்துடன் அது வெவ்வேறு கருத்துக்களை கொண்டது. வெவ்வேறு ஆராய்ச்சியாளர்கள் மலேசியா பிலிப்பைன்ஸ், இந்தியா, இலங்கை தாய்லாந்து மற்றும் இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவுகளிலும் மரபனுவில் கூட்டு இனத்தை கண்டறிந்துள்ளனர்.

உற்பத்திகள் மற்றும் பயன்கள்.

கமுகு பனையின் பழம் பொதுவாக பாக்கு என அழைக்கப்படும். அது பெறும்பாலும் வெற்றிலையுடன் சேர்த்து மெல்லுவதற்கு உபயோகிக்கப்படுகின்றது. இது பொதுவாக சகல தெற்காசிய நாடுகளிலும் சில தென்கிழக்காசியா நாடுகளிலும் பெருங்கடல் நாடுகளிலும் இவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன. இது ஒரு இலேசான உட்சாகத்தை தருகின்ற அதேவலை உடலுக்கு இலேசான வெப்பத்தையும் தருகின்றது. தூய மற்றும் உலர்ந்த வடிவங்கள் இரண்டிலும் பயன்படுத்தப்படுகின்றது. பாகிஸ்தான் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில்  பாக்கினை வெட்டி வெவ்வேறு உற்பத்திகள் மற்றும் உற்பத்திகளுக்கு சுவையூட்டப்படுகின்றது. சீனா மற்றும் இந்தியா நாடுகளில் ஆயுர்வேத மருத்துவம் மற்றும் சீனாவின் பாரம்பரிய மருத்துவம் என்பவற்றிற்கு பாக்கு பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் தூளாக்கப்பட்ட பாக்கு சில வகையான பற்பசைகள் தயாரிப்பில் ஓர் அங்கமாக பயன்படுத்தப்பகின்றன. இந்தியாவின் சில பகுதிகளில் கால்நடைகளின் நாடாப்புழுக்கள் மற்றும் ஏனைய குடல் ஒட்டுண்ணிகள் என்பவற்றை அகற்றுவதற்கும் கால்நடை மருத்துவத்தில் பெரிதும் பயன்பாட்டில் இருந்து வருவதுடன் அழங்காரத்திற்காகவும் அல்லது அழுக்குகளை பிரித்தெடுப்பதற்குமாக பாக்குத் தூள் பயன்படுத்தப்படுகின்றது. பாக்கு இலைகள் பல வீட்டுப் பொருட்கள் உற்பத்தி செய்வதற்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. அழங்கார நோக்கங்களுக்காகவும் விரைவாகவும் அழுகும் தட்டுகள் உற்பத்தி செய்யவும் பொதி செய்யும் பொருளாகவும் பயன்படுத்துகின்றனர். பாரம்பரியமாக பாக்கு இலை உரையில் சமைத்த உணவை பொதி செய்வதற்காகவும் மற்றும் “மீன்-வால்-பணை” பொக்கிசங்களை பாதுகாப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகின்றது. முதிர்ந்த தண்டுகள் கட்டடப் பொருட்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன. முதிர்ந்த தண்டுகள் கட்டடப் பொருட்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன. அதேப் போல் ஹிந்து மக்களது பிரதேச நிகழ்வுகளின் போது அழங்கார வேலைப்பாட்டிற்காகவும் பயன்படுத்துகின்றனர்.  

பிரதானமாக வளர்க்கப்படும் பிரதேசங்கள்

இலங்கையில் பாக்கு அதிகளவில் ஈரவலயத்தில் மற்றும் இடைவெப்ப வலயத்தில் ஈரமான பகுதிகளிலும் உற்பத்தி செய்யப்படுகின்றன. எவ்வாறாயினும் உலர் வலயத்தில் பெரிய குளங்கள் மற்றும் நீர் நிலைகள் பக்கத்திலும் ஒரு சிறு ஏக்கர் அளவில் உற்பத்தி செய்யப்படுவதை அவதானிக்கலாம். இலங்கையின் பாக்கு செய்கையின் மொத்த விஸ்தீரனம் சுமார் 12533 ஹெக்டேயர்கள்  ஆகும். என மதிப்பிடப்பட்டுள்ளன. பிரதானமாக வளர்க்கப்படும் மாவட்டங்களாக களுத்துரை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, பதுலை மற்றும் மாத்தளை மாவட்டங்களைக் குறிப்பிடலாம். பெறும்பாலும் பாக்கு மரங்கள் வீட்டுத் தோட்டங்களில் அல்லது கலப்பு பயிராக வளர்க்கப்படுகின்றது. அதே வேலை சிறு அளவில் வர்த்தக நோக்கத்திற்காக மேற்கொள்வதனையும் காணக்கூடியதாக உள்ளது.

இன வகைகள்

பாக்கு நூற்றாண்டு காலமாக ஈர மற்றும் இடைவெப்ப வலயங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. ஆகவே, இந்த தீவின் பரந்த மரபனு வேறுபாடு காணப்படுகின்றன. அதிகளவிலான உள்நாட்டு தெரிவுகளின் வெவ்வேறு வகை செய்கைப் பண்ணப்படும் பிரதேசங்களில் கிடைக்கத்தக்கதாக உள்ளன. ஆனால் இங்கு அறிமுகப்படுத்திய வரிசைகள் பல காணப்படுகின்றன.  மாத்தளையில் ஏற்றுமதி விவசாய திணைக்களத்தின் மத்திய ஆய்வு நிலையத்தில் 1206 வரிசைகளின்  மூலவுயிர் முதலுரு (Germplasm) காணப்படுகின்றது. இவ்வாறே பல வரிசைகளில் வருடத்திற்கு ஒரு மரத்தில் இருந்து 1000 பாக்குகள் உற்பத்தி செய்யவல்ல இனத் தொகுதி தெரிவு செய்யப்பட்டு உற்பத்திக்காக விடுவிக்கப்படுகின்றன.

உள்ளூர் பாக்கு

உள்ளூர் பாக்கு இலங்கை முழுதும் பரவலாக காணப்படுகின்றது. மரம் 15 மீ. – 20 மீ வரையில் வளர்கின்றது. பாக்கின் வஇவம் வட்டம் அல்லது நீள்வட்ட வடிவினைக் கொண்டது. ஒவ்வொறு குழையுலுமான பாக்குகளின் எண்ணிக்கை 50 – 400 வரை வேறுபடுகின்றது. புதிய இனவகைகளான மாத்ளை மத்திய ஆய்வு நிலையத்தில் இருந்து 3 உள்நாட்டு தெரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளன. அவையாவன

  1. மாத்தளை சிங்ஹ

ஒரு வருடத்திற்கு ஒரு மரத்தில் இருந்து ஏறத்தாள 4 கிலோ கிராம் உலர் பாக்கு (கருங்கா) உற்பத்தி செய்ய முடியும். ஒரு வருடத்திற்கு ஒரு மரத்தில் இருந்து பொதுவாக 4-5 குழைகள் அறுவடை செய்யலாம். பச்சை பாக்கு ஒன்றின் நிறை பொதுவாக 20 கிராம் ஆகும். அது உலர்ந்ததன் பின்னர் (கருங்கா) ஏறத்தாள 4.8 க்கிராம் நிறையை கொண்டிருக்கும்.

  • மாத்ளை சதுரா

பாக்கின் வடிவம் சற்று நிள் வடிவமாக காணப்படும். ஒரு வருடத்திற்கு ஒரு மரத்தில் இருந்து 4-5 குழைகள் அறுடை செய்யலாம். ஒரு குழையில் சுமார் 250 பாக்குகள் காணப்படும்  உலர்ந்த்தன் பின்னர் (கருங்கா) நிறை 4.7 கிரம் ஆகும். வருடத்திற்கு 4 கி.கிராம் உலர் பாக்கு (கருங்கா) உற்பத்தி செய்யலாம்.

  • மாத்தளை ராஜா

வருடத்திற்கு ஒரு மரத்தில் இருந்து 3-5 குழைகள் அறுவடை செய்யலாம். வருடத்திற்கு ஒரு மரத்தில் இருந்து சுமார் 700 பாக்குகளை உற்பத்தி செய்யலாம். ஒரு வருடத்திற்கு ஒரு மரத்தில் இருந்து சுமார் 3.7 கி.கிராம் உலர் பாக்கினை (கருங்கா) உற்பத்தி செய்யலாம்.

ரட  புவக்

மரங்கள் அதிகம் உயரமாக காணப்பட மாட்டாது.  அதாவது 8-12 மீ. ஆகும்.  மரம் ஒன்றின் ஆயுட் காலம் 12-15 வருடங்களாகும். பாக்குகள் பெரிதாகவும் வட்ட வடிவமாகவும் காணப்படும். தோல் மஞ்சள் அல்லது பச்சை நிறமாக காணப்படும். ஒரு குழையில் இருந்து சுமார் 75 பாக்குகளை உற்பத்தி செய்யலாம்.  ஒரு மரத்தில் இருந்து ஒரு வருடத்திற்கு 4 குழைகள் உற்பத்தி ஆகின்றன. ஏனைய பாக்கு இனங்களின் அறுவடை இடை வெளியின் போது இவற்றில் இருந்து அறுவடையை பெறலாம். ரட புவக்கில் இருந்து உலர் பாக்கு (கருங்கா) உற்பத்தி செய்யப்படுவதில்லை 

ஹம்பன் புவக்

மெல்லுவதற்கு பயன்படும் மிகவும் இனிமையான வகை இதுவாகும். ஒரு குழையில் 75-80 பாக்குகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தோலின் நிறம் மஞ்சள் அல்லது சிவப்பு ஒரேன்ஜ் ஆகும். மேற்சொல்லப்பட்ட இனங்களுக்கும் மேலாக இன்னும் சில இனங்கள் காணப்படுகின்றன. அவை நுகர்விற்காக பெரிதும் பிரபள்யம் அடையவில்லை. அவையாவன “டோதளு” மற்றும் அலங்கார புவக்.

மண் மற்றும் காலநிலை தவைப்பாடுகள்

மண்

பலவிதமான மண் வகைகளில் பாக்கு வளர்க்கப்படுகின்றன. அவை வளமான களி ஈரக்களிமண் அல்லது சிவப்பு மஞ்சள் பொட்சொலிக் வகையிலான சரளை லேட்டரைட் மண்ணிலும் நன்கு வளர்கின்றன. மரம் ஓரளவு குறிப்பிட்ட அளவில் நீர் தேங்குவதை தாங்கிக் கொள்கின்றது. அத்துடன் அதிக ஈரழிப்பான தன்மை விரும்பத்தக்கது. ஒட்டும் களிமன் மணல் வண்டல் மண், அல்லது சுண்ணாம்பு மண் என்பன பாக்கு மரச் செய்கைக்கு பொருத்தமற்றதாக காணப்படுகின்றன. ஏறத்தாள 1 மீ. மண்ணின் ஆழம் போதுமானது. அடிப்படை உப்புகளுடனான சற்று அமிலத்தன்மை கொண்ட மண் குறைந்த மட்டத்தில் பொற்றாசியம், பொசுபரஸ் என்பன பாக்கு செய்கையின் போது பொருத்தமானதாக காணப்படும்.  

காலநிலை

பாக்குச் செய்கையானது பெறும்பாலும் வெப்ப மண்டல காலநிலைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நேரடியாக சூரிய  ஒளி படுதல் கடுமையான காற்று என்பவற்றிற்கு எதிராக பாதுகாக்கப்படும். ஈரப்பதமான பகுதிகளில் பாக்குச் செய்கை நன்கு வளர்கின்றன. இளம் தாவரங்கள் நேரடியாக சூரியனுக்கு வெளிப்படுத்துவதன் காரணமாக சூரிய ஒளி  ஏற்படுத்தும் மிகுந்த வெப்பமாகும்.  

உயர்நிலை – 1000M AMSL வரையில் நன்கு வளர்கின்றது.

வெப்பநிலை – 24º – 36ºC  வரையில் நன்கு வளர்கின்றது. வெப்பநிலை 10ºC இனை விட குறைவாகவும் 40ºC இனை விட அதிகமாகவும் காணப்படுமாயின் பெரிதும் பாதிக்கப்படுகின்றது.

மழை வீழ்ச்சி – வருடாந்த சராசரி மழைவீழ்ச்சி 1750mm-4500mm வரையில் காணப்படுகையில் நன்கு வளரும். பரந்த மழைவீழ்ச்சியுடன் ஈரமான காலநிலை இதன் வளர்ச்சிக்கு சாலவும் சிறந்தது. பாக்கு மரங்கள் நீடித்த வறட்ச்சிக்கு அதிகம் ஆளாகின்றன. அத்துடன் அத்தனை பிரதேசங்களில் பாக்கு மரங்கள் நிரந்தர அல்லது அரை நிரந்தர நீர் நிலைகளுக்கு அருகே செய்கைப்பண்ணப்படுதல் வேண்டும்.

காற்று – குறைந்த காற்றின் நிலை

நிழல் – 20-30% உயர் கீழ் மட்டம் பொருத்தமானது. நேரடியாக சூரிய ஒளி படுகையில் இலைகள் மஞ்சள் நிறத்திற்கு மாற்றமடையும்.

பயிர் ஸ்தாபகம்

பருவ மழை பெய்யும் காலத்தில் மரங்களை நடுவது சிறப்பாகும். களத்தை தயார் செய்ததன் பின்னர் மேல் மண், மாட்டுச் சாணம் அல்லது சேதனப் பசளைகளைக் கொண்டு நிரப்பப்பட்ட  45cmx45cmx45cm அளவில் ஆன குழிகளில் இளம் கன்றுகளை ஸ்தாபகம் செய்யலாம். மேலதிக நீரை அகற்றுவதற்காக வடிகால் வசதிகள் அமைத்தல் வேண்டும். சரிவான நிலங்களில் நடுகின்ற போது விளிம்புகளில் நடுவது சிறந்தது என பரிந்துரைக்கப்படுகின்றது. சிறந்த வளர்ச்சிக்கு  சேதன பசளை பிரயோகம் முக்கியமாகும்.

இடைவெளி  – கலப்புச் செயகையின் நிமித்தம் 3.0m x 3.0m (1100 தாவரம்/ஹெ.) – 5.4mx5.4m இடைவெளியில் வாழைச் செய்கை மேற்கொள்ளப்படலாம்.

நிழல்  – விதையிடலானது நேரடி சூரிய ஒளி படுவதில் நின்றும் தளர்த்தப்படுதல் வேண்டும். கமுகு ஓலை, தென்னோலை அல்லது பொலிதீன் என்பவற்றை பயன்படுத்தி தற்காலிக நிழல் வழங்க முடியும். வாழை, பப்பாசி, அல்லது மரமுந்திரிகை போன்றவற்றை இடைப் பயிராக மேற்கொள்ளப்படுவதால் நிரந்தரமான நிழலை வழங்கலாம். வடிகால் மற்றும் மொட்டை மாடி என்பவற்றில் மண் பாதுகாப்பு முறையில் பிரயோகிக்க்ப்ப்டுதல் வேண்டும். நீர்த் தேங்கும் நிலங்களில் பெலிட்ஸ், வடிகாலமைப்புக்கள் தயார் செய்யப்பட்டு நீர்தேங்கும் நிலமையை தவிர்த்துக் கொள்ள வேண்டும். 

பயிர் முகாமை

உரப் பிரயோகம் :

இலங்கையில் உள்ள பண்ணையாளர்கள் பாக்கிற்கு உரமிடுவது இல்லை. ஆனால் இந்தியாவில் வர்த்தக ரீதியில் பாக்குச் செய்கை மேற்கொள்கையில் உரம் பிரயோகிப்பதால் அதிகளவில் உற்பத்தியை பெற்றுக் கொள்ளலாம் என சிபாரிசு செய்யப்படுகின்றது.

பரிந்துரை செய்யப்பட்ட உரம் :

வருடத்திற்கு ஒரு மரத்திற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ள இரசாயண உரப்பிரயோம் வருமாறு

100 கிராம் நைதரசன் (220 கிராம் யூரியா)

40 கிராம் P2O5 (200 கிராம் பாறை பொசுபேற்று)

40g கிராம் K2O (225 கிராம் மியிரியேற் பொசுபேற்றூ (MOP)

இரண்டு அளவுகள் வேறுபடுத்தி பிரயோகிக்க வேண்டும்.

யூரியா : பாறை பொசுபேற்று : (MOP) –      3    :      2           :     3  

களச் செய்கை மேற்கொண்டு 6 மாதத்தின் பின்னர் முதல் தடவையாக உர பிரயோகம் மேற்கொள்ள வேண்டும். அதன் பின்னர் ஒவ்வொறு வருடமும் சிறுபோகம் மற்றும் பெறும் போகங்களில் உர பிரயோகம் மேற்கொள்ளலாம்.

சேதனப் பசளை

வருடத்திற்கு மரம் ஒன்றிற்கு ஒவ்வொறு 12 கி.கி பச்சை இலை மற்றும் கொமபோஸட் உரம் இடுதல் வேண்டும். இந்த உரப்பியோகம் ஆனது மரத்தை சுற்றி 15-20cm ஆழத்திற்கு மண் தோண்டப்பட்டு மற்றும் மண்ணை மரத்தின் அடித்தளத்தில் இருந்து 20cm ஆரம் விட்டு 15-20cm பிரயோகித்தல். பிரயோகித்ததன் பின்னர் மண்ணை நன்கு புரட்டுதல் வேண்டும். அத்துடன் அதனை சேதன பொருட்களைக் கொண்டு மண்ணை நன்கு மூடி விடுதல் வேண்டும். எவ்வாறாயினும் இலங்கை நிலமையின் கீழ் சேதன மீதிகள் பிரயோகம் பச்சை உரம் அல்லது கொம்போஸ்ட் பசளை என்பன மரத்தின் அடித்தளத்திற்கு ஒரு மரத்திற்கு 20 கி.கிராம் என்ற வீதத்தில் இரண்டு தடவைகள் பிரயோகிப்பதனை பரிந்துரை செய்யப்படுகின்றது.

களை கட்டுப்பாடு

களைகள் அற்ற பயிர்ச் செய்கை சிறந்த விளைச்சளை தருவதாக இந்தியாவின் ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.

வேர் பாதுகாப்பு Mulching

இந்தியாவில் பாக்கு செய்கை மேற்கொள்ளப்படுகின்ற தோட்டங்களில் ஒழுங்கான வேர்  பாதுகாப்பு செயன்முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இச்செயன்றையின் போது மர அடிகளில் ஈரழிப்பு பேணப்படுகின்றது, மண்ணரிப்பு குறைகின்றது, களைகள் கட்டுப்படுத்தப்படுகின்றது, இதற்காக வெட்டப்பட்ட பாக்கு ஒலைகள், தோல், புல் அல்லது உலர் இலைகள் என்பவற்றை வேர் பாதுகாப்பிற்காக பயன்படுத்த முடியும்.

பயிர் பாதுகாப்பு

பொருளாதார முக்கியத்துவம் கொண்ட பீடை மற்றும் நோய்கள் எதுவும் அறிக்கை செய்யப்படவில்லை ஆனால் சில வேலைகளில் மஞ்சள் இலை நோய், குள்ளமாதல், இலை உருகுதல் நோய் முதிராத பாக்குகள் விழுதல் போன்றன அறிக்கை செய்யப்பட்டுள்ளன.

அறுவடை மற்றும் அறுவடைக்கு பின்னரான செயன்முறை

பாக்கு மரங்கள் பூப்பதற்கு 6-7 வருடங்கள் எடுக்கின்றது. ஆனால் உற்பத்தி இடைவெளி 10-12 வருடங்களாகும். குழைகளது முதிர்ச்சியில் வெவ்வேறு கட்டங்களில் எதிர்பார்க்கப்படும் பயன்பாட்டின் அடிப்டையில் அறுவடை செய்யப்படுகின்றன. அதனை தூய வடிவில் அல்லது உலர் வடிவில் பயன்படுத்தப்படுகின்றன. புளிக்கச் செய்யப்படுமாயின் தூய பாக்குகள் அதன் தரம் கெடாது தூய வடிவிலேயே ஒரு வருடத்திற்கும் மேல் பாதுகாத்து வைக்கலாம். சராசரி உற்பத்தி வருடத்திற்கு ஒரு மரத்தில் இருந்தி 3-4 குழைகளாகும்.

நிலையான தர விபரக்குறிப்பு

மருத்துவ மற்றும் இரசாயன பண்புகள்

டார்னின், பூண்டு அமிலம், மற்றும் நிலையான  எண்ணெய் பசை,  சிறு அளவில் டெரிபினோல், லிக்னின், பல்வேறு உப்புப் பொருட்கள், எரிக்லைன், எரிகெய்ன் மற்றும் கிவாசின் போன்ற மூன்று பிரதான அற்க்ககோல்களும், vasoconstriction பண்புகள் என்பன பாக்குகளின் இரசாயன உள்ளடக்கமாக காணக்கூடியதாக உள்ளன.

மறுமொழி இடவும்