ஏற்றுமதி விவசாய திணைக்க்ளம் ஒரு தொழில்நுட்ப திணைக்களமாகும். இது ஏற்றுமதி விவசாய பயிர்களின் பாரம்பரிய பயிர்ச்செய்கை, அறுவடை, பதப்படுத்தல் செயன்முறை என்பவற்றை மேம்படுத்துவதற்கான புதிய தொழில்நுட்பங்களை இது வழங்குகின்றது. துறை பயிற்சி செயற்பாடுகளில் பங்குதார்ர்கள் புதிய தொழில்நுட்பத்தை மாற்றம் செய்வதற்கு பரந்த நிறமாலையில் ஒழுங்கமைப்பு செய்யப்பட்டுள்ளன. திணைக்களத்தின் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் உள்ளக பயிற்சி சேவை, பண்ணையாளர் பயிற்சி, கறுவா சீவுகையிலான பயிற்சி, என்பனவாகும்
திணைக்களத்தினால் உள்ளக பயிற்சி நிலையம் மாத்தளை எல்லாவெலையில் அமையப் பெற்றுள்ளது. இந்த நிலையத்தின் வதிவிட வசதிகளுடன் கற்றல் வசதிகள் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.
யாருக்காக :
உள்ளக பயிற்சி நிகழ்ச்சி திட்டங்கள் பண்ணையாளர் குழுவுக்கு, சமூக அடிப்டையிலான ஒழுங்கமைப்புக்களுக்கு, அரச சார்ந்த நிறுவனங்கள், முயற்சியான்மை குழுக்கள், ஏனைய அரசாங்க / அறை அரசாங்க நிறுவனங்கள் அல்லது திணைக்களங்கள் உள்ளன. கறுவா, மிளகு, கோப்பி கொக்கோ, போன்ற எற்றுமதி விவசாய பயிர்களின் பயிர்ச் செய்கையை பதப்படுத்துதல், மற்றும் சந்தைப்படுத்துதல் என்பவற்றின் மீது அறிவினை பெற்றுக் கொள்ள ஆர்வமுள்ள யாபேருக்கும் ஆகும்.
சேவையின் தன்மை :
பயிற்சி நிகழ்ச்சிகள் மாத்தளை எல்லாவெலயில் அமையப் பெற்றுள்ள உள்ளக சேவை பயிற்சி நிலையத்தில் நடாத்தப்படுகின்றன. நிகழ்ச்சித் திட்டங்கள் யாவும் வதிவிடத்தில் முக்கியம் பெறுகின்றன. இந்நிகழ்ச்சி திட்டங்களின் கால எல்லை 2-5 நாட்களாக மாறுபடுகின்றது ISTC யில் பயிற்றுவிக்கப்படுகின்ற உத்தியோகத்தர்களினால் ஆய்வு உத்தியோகத்தர்களினால், உதவிப் பணிப்பாளர்கள் மற்றும் வெளியக வளவாளர்கள் ஆகியோரினால் விரிவுரைகள் நடாத்தப்படுகின்றன.
விரிவுரைகள் ISTC யிற்கு அரு காமையில் அமையப் பெற்றுள்ள பயிர்ச் செய்கை நிலங்களில் செயன்முறை அமர்வுகள் தொடரப்படவுள்ளன. நிகழ்ச்சி திட்டங்கள் தேவைப்பாடுகளுக்கு அமைய கள விஜயங்கள் ஒழுங்கு செய்யப்படுகின்றன. பயிற்சி பெறுவோர்க்கு உணவு மற்றும் தங்குமிட வசதிகள் வழங்கப்படுகின்றன.
சேவையை பெற்றுக் கொள்வதற்கு எவ்வாறு விண்ணப்பம் செய்வது :
பணிப்பாளர் நாயகத்திற்கு அல்லது உதவிப் பணிப்பாளர் (பயிற்சி) இற்கு எழுத்து மூலம் வேண்டுகோல் விடுத்தல் வேண்டும். மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஊடாக பணிப்பாளர் நாயகம், அல்லது உதவிப் பணிப்பாளர் (ISTC) இற்கு வேண்டுகோல்களை சமர்ப்பிக்கலாம். சேவைகள் இலவசமாக வழங்கப்டுகின்றன. விண்ணப்பங்கள் வேண்டுகோல் விடுக்கப்பட்டதன் பின்னர் ஆகக் குறைந்தது மூன்று மாதத்திற்குள் அனுப்பி வைத்தல் வேண்டும்.
பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர்கள் மற்றும் தொடர்பு கொள்ளும் தகவல்கள் :
திரு. எல். எச். டிலான் எஸ். லக்ஷ்மன், உதவி பணிப்பாளர் (பயிற்சி)
உழவர் பயிற்சி திட்டங்கள்
யாருக்காக :
பண்ணையாளர் பயிற்சி நிகழ்ச்சி திட்டங்கள் பண்ணையாளர்களுக்கு, பண்ணையாளர் குழுக்கள் மற்றும் சமூக அடிப்டையிலான நிறுவனங்களில் உள்ளவர்களுக்கு நடாத்தப்படுகின்ற. அதாவது கறுவா, மிளகு, கோப்பி, கொக்கோ போன்ற ஏற்றுமதி விவசாய பயிர்ச் செய்கையின் போது கள பிரச்சினைகளை தீர்த்தல் பதப்படுத்துதல் சந்தைப்படுத்துதல் போன்றவற்றில் அர்வம் காட்டுபவர்கள்.
சேவையின் தன்மை :
விரிவாக்கல் உத்தியோகத்தர்கள், அல்லது ஆய்வு அபிவிருத்தி உதவியாளர்கள் பணயைணயாளர்களுக்கான பயிற்சி வகுப்புக்கள் நடாத்துகின்றனர். தெரிவு செய்யப்படும் இடத்தில் பண்ணையாளர்கள் அல்லது குழு வகுப்புக்களின் பயிற்சி வழங்கப்படுகின்றன. பயிற்சி வகையில் பயிற்சியாளர்கள் மற்றும் பய்ணையாளர்களை புரிந்துணர்வு கலந்துரையாடலினால் தீர்மானிக்கப்படுகின்றன. மண் பாதுகாப்பு பயிர் ஸ்தாபகம், நிழல் கட்டுப்பாடு, பீடை நோய்க் கட்டுப்பாடு, உரப்பிரயோகம் என்பவற்றில் ஏற்றுமதி விவசாய பயிர்கள் மீது பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
சேவையை பெற்றுக் கொள்வதற்கு எவ்வாறு விண்ணப்பம் செய்வது :
அருகில் அமையப் பெற்றுள்ள கமநல சேவை நிலையத்தில் (புதன் கிழமை மாத்திரம் மு.ப.8.30 – .ப.4.15 வரை) விரிவாக்கல் உத்தியோகத்தரிடம் வேண்டுகொல் விடுக்க முடியும். அல்லது மாவட்டத்தில் உள்ள மாவட்ட உதவிப் பணிப்பாளருக்கு விண்ணப்பிக்கலாம். இந்த சேவை இலவசமாக வழங்கப்படுகின்றது. வேண்டுகோல் விடுக்கப்பட்ட திகதியல் இருந்து ஆகக் குறைந்தது மூன்று மாத்த்திற்கு முன்னராவது விண்ணப்பிக்க வேண்டும்.
பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர்கள் மற்றும் தொடர்பு கொள்ளும் தகவல்கள் :
மாவட்ட உதவிப் பணிப்பாளர்
அருகில் அமையப் பெற்றுள்ள சேவை நிலையத்தின் விரிவாக்கல் உத்தியோகத்தர் அடிப்படையில்
கறுவா சீவுகை பயிற்சி
யாருக்காக :
கறுவா சீவுகையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள உயிர் முறைமை சுகாதாரம் கற்பதற்கு ஆர்வம் கொண்டுள்ள கறுவா பண்ணையாளர்கள் குழுக்கள் அல்லது சமூக அடிப்டையிலான நிறுவனங்கள் ஆகும்.
சேவையின் தன்மை :
கறுவா சீவுகையின் கள பயிற்சிகள் தெரிவு செய்யப்பட்ட கறுவா தோட்டங்களில் திறனுக்காக கறுவா சீவுகை குழுக்களின் வழங்கப்படுகின்றன.
சேவையை பெற்றுக் கொள்வதற்கு எவ்வாறு விண்ணப்பம் செய்வது :
கடிதம், தொலைநகல், தொலைபேசி மூலம் வேண்டுகோல் விடுத்தல் அல்லது அருகில் அமையப் பெற்றுள்ள கமநல சேவை நிலையத்திற்கு (புதன் கிழமையில் மாத்திரம் மு.ப 8.30 – பி.ப 4.15) தனிப்பட்ட முறையில் விஜயம் செய்து வேண்டுகோல் விடுக்கலாம். அல்லது திஹாகொடை பலோல்பிடியவில் அமையப் பெற்றுள்ள கறுவா ஆராய்ச்சி நிலையத்தில் பொறுப்பாக உள்ள ஆய்வு உத்தியோகத்தருக்கு அல்லது மாவட்ட உதவிப் பணிப்பாளருக்கு வேண்டுகோல் விடுத்தல் வேண்டும்.
தென் மாகாண, மேல்மாகாண மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இருந்து விடுக்கப்படும் வேண்டு கோல்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். இந்த சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றது. வேண்டுகோல் விடுத்த திகதியில் இருந்து குறைந்தது மூன்று மாதத்திற்கு முன்னர் வேண்டுகோல் விடுக்க வேண்டும்.
பொறுப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் தொடர்புக் கொள்ள வேண்டிய தகவல்கள் :
பிரதேசத்தின் விரிவாக்கல் உத்தியோகத்தர்கள்
மாவட்ட உதவிப் பணிப்பாளர்கள்
பொறுப்பான ஆய்வு உத்தியோகத்தர் கறுவா ஆராய்ச்சி நிலையம், பலோபிடிய திஹாகொடை