கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை அபிவிருத்தி மற்றும் அதுசார்ந்த கைத்தொழில்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் கீழ் வருகின்ற ஒரு பிரதான அரச நிறுவனமாக எற்றுமதி விவசாய திணைக்களம் விளங்குகின்றது. கறுவா, மிளகு, ஏலம், கிராம்பு, சாதிக்காய், கோப்பி, கொக்கோ, வெனிலா, வெற்றிலை, சிற்றனெல்லா லெமன்கிராஸ், இஞ்சி, மஞ்சள், குரக்காய், பாக்கு போன்ற ஏற்றுமதி விவசாய பயிர்கள் மற்றும் இலங்கையில் பாரம்பரியமாக வளர்க்கப்படும் பயிர்கள் போன்ற முயற்சியான்மை குழுக்களில் உற்பத்தித் திறன், உற்பத்தி மற்றும் தர மேம்பாடு தொடர்பில் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கு பொறுப்பாக உள்ளது.