கிராம்பு

Syzygium aromaticum L.
குடும்பம்: மெர்டேசி (Mertaceae)

வரலாறு

கிராம்பு மரமானது கூம்பு வடிவத்தில் அமையப் பெற்றுள்ள மென்மையான சாம்பல் பட்டை விதானத்தைக் கொண்டு அமையப் பெற்றுள்ள ஒரு நடுத்தர அளவிலான சமச்சீர் வடிவத்தைக் கொண்டு உள்ள ஒரு மரமாகும். முழுமையாக முதிர்ச்சி  அடைந்த மரங்கள் 15-20 மீற்றர் வரை வளரும். அதன் பிறப்பிடம் இந்தோனேசியாவின் மாலுக தீவில் அமையப் பெற்றதாக நம்பப்படுகின்றது. ரோமானிய பெர்ரசக் காலப்பகுதியில் சாதிக்காய் மற்றும் மிளகு என்பவற்றுடன் கிராம்பு அதிகம் விலைக் கொண்ட பயிராக காணப்பட்டது. மத்திய காலப்பகுதியில் அராபியர்கள் கிராம்பு வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் 15 ஆம் ஆண்டு நூற்றாண்டு காலப் பகுதியில் போர்த்துக்கேசர் தன் வசப்படுத்திக் கொண்டனர். போர்த்துக்கேசர் பிரதானமாக மால்கு தீவுகளில் இருந்து ஐரோப்பாவிற்கு கிராம்பை அதிக அளவில் கொண்டு வந்தனர். அத்துடன் அதனை 1 கிலோ கிராமுக்கு 7 கிராம் தங்கம் என மதிப்பிடப்பட்டன. பின்னர் 17 ஆம் நூற்றாண்டு வரை இந்த வர்த்தகத்தை ஸ்பெயின் மற்றும் அதனைத் தொடர்ந்து டச்சுக்கார்ர்களும் இதில் ஆதிக்கம் செலுத்தினர். 1770 ஆம் ஆண்டுகளில் பிரான்ஞ் கிராம்பை மொறிசியாவுக்கு அறிமுகம் செய்து வைத்தது. அதனைத் தொடர்ந்து கானக, சான்சிவார், மேற்கிந்திய தீவுகள், மற்றும் பிறேசில் போன்ற நாடுகள் மத்தியில் இப்பயிர்ச் செய்கையை  அறிமுகம் செய்து வைத்தனர். என்பது தெரியவில்லை ஆனால் அரபு வர்த்தகர்கள் அல்லது காலனித்துவ ஆட்சியாளர்கள் இந்தப் பயிரை நாட்டிற்கு கொண்டு வந்திருக்கலாம் என நம்பப்படுகின்றன. ஏனெனில் அக்காலப்பகுதியில் இலங்கை ஆனது வாசனைத் திரவிய வர்த்தகத்தின் மையமாக விளங்குகின்றது.

உற்பத்தி மற்றும் பயன்கள்

கிராம்பு உலர்ந்து முழு மொட்டுக்களாகவே அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. தரம் குறைந்த கிராம்பு கறி சமையல் கலவைக்க்கு பயன்படுத்தப்படுகின்றது. கிராம்பு எண்ணெய் உணவுக்கு சுவையூட்டவும் மற்றும் மருத்துவ வாசனைத் திரவிய கைத்தொழிலிலும் பயன்படுத்தப்படுகின்றது. கிராம்பு எண்ணெய் நிறமற்றதாகவோ அல்லது மஞ்ஞல் நிறமாகவோ இருக்கலாம். அதனை சூரிய ஒளி படுமாறு வைக்கப்பட்டால் அது கடுமையான நிறத்தை அடையும். இனிப்பு மற்றும் புளிப்பு உணவு ஊறுகாய் மற்றும் சோர்ஸ் மற்றும் கெட்ச்சப்பஸ் என்பவற்றை சுவையூட்டுவதற்காகவும். கிராம்பு ஓரளவு அல்லது ழுமையாக பயன்படுத்தப்படுகின்றது. கிராம்பு மருத்துவ துறையில் இரைப்பைக் குடல் வலி நீக்கி நறுமன மற்றும் புத்துனர்வினை தருவதற்காக பயன்படுத்தப்படுகின்றது. அது சுவையூட்டும் முகவராக சிகரட் கைத்தொழிலில் பயன்படுத்தப்படுகின்றது. கிராம்பு எண்ணைய் வாசனைப் பொருட்களிலும் பல் மருத்துவத்திலும் நுணுக்குக்காட்டிளை சுத்திகரிக்கவும் முகவராகவும் பயன்படுத்தப்படுகின்றன.

பிரதானமாக வளரும் பிரதேசங்கள்

கிராம்பு இலங்கையின் மத்திய நாட்டில் ஈரவலயத்தில் பிரதானமாக வளர்க்கப்படுகின்றது. கிராம்பு செய்கை மேற்கொள்ளப்படுகின்ற மொத்த நிலப்பரப்பின் அளவு 7618 ஹெக்டேயர் ஆகும். பிரதானமாக வளர்க்கப்படும் பிரதேசங்கள் கண்டி, கெக்காலை, மற்றும் மாத்ளை மாவட்டங்களை குறிப்பிலாம்.

இன வகைகள்

விஷேடமான வகைள் ஏதும் இனங் காணப்படவில்லை . எவ்வாறாயினும் பருமனில் குடிய நிராம்பு மொட்டுக்கள் உற்பத்தி செய்யும் மரங்கள் காணப்படுகின்றன. அவை (பொத்தல் கிராம்பு) அழைக்கப்படும்.

மண் மற்றும் கால நிலைதவைப்பாடு

மண்

கிராம்பு பல்வேறு விதமான மண்களிலும் வளர்ச்சி அடைகின்றன. அதிக மட்கிய உள்ளடக்கம் கொண்ட ஆழமான மற்றும் அதிக களிமண் கொண்ட மண் இந்தப் பயிருக்கு மிகவும் பொருத்தமானதாகும். கபுக் மண்ணில் நன்கு வளரக்கூடியதாகும் இந்த பயிருக்கு தூய மணல் மண் பொருத்தமற்றது. நீர்தேங்குவது கிராம்பிற்கு பொருந்தாது. ஆகவே இப்பயிர்ச் செய்கைக்கு நிலத்தை தேர்ந்தெடுக்கின்ற போது நிர் வடிந்தோடக்கூடிய நிலத்தை தெரிவு செய்வது சிறப்பாகும்.

8/2/2018 கிராம்பு

http:https://www.dea.gov.lk/www.exportagridept.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=130&Itemid=159&lang=en 2/3

காலநிலை

கிராம்பு கடல் மட்டத்தில் இருந்து 10000 மீற்றர் உயரம் வரை ஈரப்பதமான வெப்ப மண்டல காலநிலையில் நன்றாக வளரும். இப்பயிருக்கு வருடத்திற்கு சராசரி மழை வீழ்ச்சி 1750- 2500 மி.மீ. போதுமானதாகும். எவ்வாறாயினும் நன்கு பூக்கும் காலப்பகுதியில் மாரி காலங்களுடன் கோடை காலமும் மாறி மாறி வருவது அவசியமாகும்.

வருடாந்த சராசரி வெப்பநிலை அதிக பருவ கால மற்றும் தினசரி வேறுபாடு இல்லாமல் 200C – 280C ஆக இருக்க வேண்டும். தொடர்ந்தும் வலுவாக காற்று வீசுவது பெரிதும் பாதிப்பை செலுத்தலாம்.

 வளர்ச்சியில் முதல் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு நிழல் அவசியம் அதன் பின்னர் முழுமையாக சூரிய  ஒளி படுவது பயன்மிக்கதாகும்.

பயிர் ஸ்தாபகம்

நடுகைப் பொருள்

கிராம்பு விதைகளில் ஊடாக இனப்பெறுக்கம் செய்யப்படுகின்றது. சேகரிக்கப்பட்ட 48 மணி நேரத்திற்கு விதைகளின் நம்பகத் தன்மை விரைவாக இழக்கப்படுவதால் மரத்தில் பழுத்த பழங்கள் உடனடியாக நடுதல் வேண்டும். விதைகள் நீரில் நன்கு ஊர வைத்து அதன் வெளிப்புர  உறையை அகற்றி பெற்றுக் கொள்ள வேண்டும். அவை விரைவாகவும் சீரான முறையிலும் முளைப்பதை காட்ட வேண்டும். நன்கு சிதைவடைந்த பண்ணை நிலத்தின் எரு, மேல் மண் மற்றும் கரடு முரடான மண் ஆகியன சம பங்குகளாக உள்ளடக்கம் செய்யப்பட்ட துளையிடப்பட்ட பொலிதீன் உறைகளில் நிழலில் நன்கு உலர்ந்த விதைகளை நடுதல் வேண்டும். கள நடுகைக்கு முன்னர் நாற்று மேடைகள் வைக்கப்படும் போது பொலிதீன் உறையின் அளவு 10 Χ 20cm இருந்து 25 Χ 40cm வரைவேறுபடலாம். பெரிய மரங்கள் (15-20 மாதங்கள்) களத்தில் ஸ்தாபிப்பதுவே சிறந்தது களத்தில் நடுதல் : 20’Χ20’(250 கன்று /ஹெ) இடைவெளி  2 – 3 வருடங்களுக்கு தற்காலிக நிழல் அவசியம். புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட மரங்களுக்கு வெயில் காலங்களில் செயற்கை முறை நிழல் அவசியமாகும். கிராம்புடன் போட்டி யிட்டு வளராத அவரையினங்கள் போன்ற மூடு பயிர்கள் தேவைப்படும் போதெல்லாம் ஸ்தாபிப்பதால் மண்ணரிப்பை தடுத்துக் கொள்ள முடியும்.

பயிர் முகாமை

உர பிரயோகம்

பரிந்துரை செய்யப்பட்ட கலவை  – 10 வருடத்திற்கு ஹெக்டேயருக்கு 625 கி.கி அத்துடன் அதனைத் தொடர்ந்து பின்னர் ஹெ/ 250 கன்று அடர்த்தி உள்ள

கலவையின் கூறுகள் எடை பாகங்கள் கலவையில் ஊட்டச் சத்துக்கள்
யூ ரியா (46% N) 2 13% N
பாறை பொசுபேற்றுRP (28% P2O5) 2 8% P2O5
MOP (60% K2O) 3 25% K2O
கேசரைற்று 24 % MgO 1/3 1% MgO

உர பிரயோக விகிதம்

வருடம் பெறும்போகம் (கலவை கி/கன்று) யாலபோகம்  (கலவை கி/கன்று)
1 120 120
2 250 250
3 375 375
4 500 500
5 625 625
6 750 750
7 875 875
8 1000 1000
9 1125 1125
10 வருடத்திற்கு மேல் 1250 1250

பயிர் பாதுகாப்பு

நோய்கள்

இலங்கையை பொருத்த வரையில் கடுமையான நோய்கள் மற்றும் பீடை தாக்கங்கள் ஏதும் அறிவிக்கப்பட வில்லை.

பீடைகள் 

பெரிய அளவில் காணப்படுகின்ற நாற்று மேடைகளில் உள்ள செடிகளில் தளர்வுறுகயை தவிர வேறு ஏதும் கடுமையான நோய் மற்றும் பீடை தாக்கங்கள் ஏதும் இலங்கையில் பதியப்பட வில்லை. நிழல் மற்றும் நீர் பிரயோகம் மேற்கொள்ளப்படுவதால் தளர்வுறுகின்ற நிலயை கட்டுப்படுத்த முடியுமாக உள்ளது. Pestalots sp. மற்றும் Collectotrichum sp என்பன காரணமாக இலைப் புள்ளிகள் ஈரமான கால நிலையில் நாற்று மேடைகளில் பொதுவாக காணப்படுகின்றது. ஆனால் எந்தவிதமான கடுமையான விளைவுகளையும் எற்படுத்தவில்லை.

அறுவடை மற்றும் அறுவடைக்கு பின்னரான செயற்பாடுகள்

மலர் இதழ்கள் அதன் நிறமான ஒலிவ் பச்சை நிறத்தில் இருந்து மஞ்ஞள் இளம் சிவப்பு நிறமாக மாறுகின்ற போது கிராம்பு மொட்டுக்கள் அறுவடை செய்வதற்கு உரிய சிறந்த பருவமாகும். மலர்களின் கொத்துக்கள் தண்டுகளுடன் சேர்த்து அறுவடை செய்யப்படுகின்றன. பொதுவாக அறுவடை காலம் வழமையாக டிசம்பர் மாதம் ஆரம்பித்து ஏப்ரல் மாதம் முடியும் வரை நீடிக்கின்றது. இலங்கையில் உலர் கராம்பின் சராசரி விளைச்சல் ஹெக்டேயருக்கு 250 கி.கிராம் ஆகும்.  அதே வேலை சிறந்த முகாமையின் கீழ் ஹெக்டேயருக்கு சுமார் 850 கி.கிராம் விளைச்சளை பெறலாம்.

பதப்படுத்தல் பூமொட்டுக்கள் தண்டுகளில் இருந்து பிரிக்கப்பட வேண்டும். அத்துடன் மொட்டுகளும் தண்டுகளும் நன்கு சூரிய ஔயில் அல்லது செயற்கை முறையில் உலர்த்துதல் வேண்டும். அவை கடும் மண்ணிறமாகவும் மற்றும் கடினமாகும் வரையுல் உலர்த்துதல் வேண்டும். சிறந்த தரமான நன்கு உலர்ந்த கிராம்பில் தங்கப் பழுப்பு நிறத்திலும் மற்றும் நன்கு உலராத கிராம்பு மென்மையாகவும் வெளிர் பழுப்பு நிறமாகவும் காணப்படும். அது வெண்மையான மாவு தேற்றத்துடன் காணப்படுவதுடன் அக்கிராம்பு “குஹக்கர்” என்று அழைக்கப்படும். சரியான படி நிலையில் பச்சை கிராம்பு மொட்டுக்கல் 30% உலர் கிராம்பை தரும். நன்கு உலர்த்தப்பட்ட கிராம்பு (ஈரப்பதன் 8-10%) 1-2 வருடங்களுக்கு பங்கசு மற்றும் பூச்சிகளின் தாக்கப்படாது சாக்குகளில் களஞ்சியப்படுத்தலாம்.

நிலையான தர விபரக் குறிப்புக்கள்

இலங்கை கட்டளைத் திணைக்களத்தினால் தரப்பட்ட விபரக்குறிப்பு பின்வருமாறு

  தரம் 01 தரம் 02 தரம் 03
அதிகபட்ச்ச குஹக்கர் கிராம்பு எண்ணிக்கை% 3 5 10
அதிகபட்ச்ச  நீளம் 10mm குறைவான கிராம்பு எண்ணிக்கை% 15 25 NA
அதிகபட்ச்ச புறம்பான விடயங்கள்  எண்ணிக்கை% 1 2 3
அதிகபட்ச்ச ஈரப்பதன்  எண்ணிக்கை% 12 12 14

மருத்துவ மற்றும் இரசாயன பண்புகள்

கிராம்புகளில் இருந்து பிரித்தெடுக்கப்படுகின்ற அத்தியவசிய எண்ணையில் இயுஜினோல் 72-90% காணப்படுகின்றன. கிராம்புகளின் நறுமனத்திற்கு உட்கூறுகள் மிகவும் பொறுப்பானதாகும். கிராம்பு எண்ணெயில் ஏனைய முக்கிய அத்தியவசிய எண்ணெய்களின் உள்ளடக்கம்  அசிடைல் யூஜெனோல், பீட்டா-காரியோபிலீன் மற்றும் வெண்ணிலின், கிராடெகோலிக் அமிலம், கல்லோட்டானிக் அமிலம், மெத்தில் சாலிசிலேட், யூஜெனின், கெம்ப்ஃபெரோல், ரம்மென்டின், யூஜெனிடின், ஓலியானோலிக் அமிலம், சிக்மாஸ்டெரால் மற்றும் கேம்பஸ்டெரால் ஆகியன அடங்கும்.   இந்தியா ஆயுர்வேத மருத்துவம், சீனா மருத்துவம், மலேத்தேய மருத்துவம், மற்றும் பல் மருத்துவம் என்பவற்றில் பயன்படுத்தப்படுகின்றது. பற்சிகிச்சையில் அவசர நிலமைகளில் வழிக்கான நிவாரணியாகவும் கிராம்பு அத்தியவசிய எண்ணெய் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. வயிற்றில் ஹைரோலிக் அமிலத்தை அதிகரிக்கச் செய்வதற்கும் குடல்தசை இயக்கத்தினை மேம்படுத்துவதற்கும் கிராம்பில் இரைப்பைக் குடல் வலி நீக்கி விளைவு காணப்படுகின்றன. கிராம்பு எண்ணை தோலில் ஏற்படுகின்ற பலவேறுநோய்களுக்கும் அதாவது முகப்பரு, பருக்கள் போன்ற தோல் கோளாறுகள் மற்றும் தோல் தீக்காயங்கள், தோல் எரிச்சல் மற்றும் சருமத்தின் உணர்திறன் போன்றவற்றிற்காகவும் இது பயன்படுத்தப்படுகிறது.

நடுகைப்பொருள்

உலர்ந்த நிழல் விதைகளை மணல் மேடைகளில் (அகலம் 90, ஆழம் 15) நடப்பட்டுள்ளன. 10 நாட்களின் பின்னர் அவ்விதைகளை அகற்றி பொலிதீன் உறைகளினுள் நடவும்.

கள நடுகை

தனிப்பயிராக : நடுகைக் குழியின் அளவு  75X75X75cm. இடை வெளி 6X6 m.

தென்னையுடன் இடைப் பயிராக :

தனி வரிசை  :  இரண்டு மரங்களுக்கு இடையிலான இடை வெளி 6m.

தேயிலையுடன் இடைப்பயிராக :

தனி வரிசை  :  இரண்டு மரங்களுக்கு இடையிலான இடை வெளி 12m.

பயிர் பாதுகாப்பு

பீடை

  •  தண்டு துளைப்பான்
  • சஹ்யத்ரஸஸ் மலபரிகஸ் (Sahyadrassus malabaricus)

இளம் மரங்களின் அடித்தள பகுதிகளில் உள்ள பிரதான தண்டுகள் தொற்றுக்கு உள்ளாகின்றன. பீடைகளின் லாவாக்கல் தண்டுகளை அறைக்கின்றன. அத்துடன் அவை கீழ் நோக்கி துளைக்கின்றன. அரைக்கப்பட்ட பகுதி மற்றும் துளைக்கப்பட்ட துளை பித்தளை பொருள் போன்ற பாயினால் மூடப்பட்டு இருக்கும். பாதிக்கப்பட்ட மரங்கள் அடுத்தடுத்து பீடை தாக்கத்திற்கு உள்ளாகின்றது.

  • சைலேபோரஸ் டெடிவிக்ரானுலட்டஸ் (Xyleborus dedevigranulatus)

20 வருடத்திற்கும் மேலான மரங்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன. தண்டின் மேற்பரப்பில் ஆணியின் தலையை போன்ற சிறிய அளவிலான வளையின் காணப்படுகின்ற லாவாக்களுக்கு ஊட்டலின் காரணமாக அந்த சிறிய துளைகளில் இருந்து ஒரு விதமான பாயம் வெளியேறும் இடமாற்றத்தை தடுப்பதன் காரணமாக தாவரங்கள் அல்லது கிளையின மஞ்சள் நிறமாகுதல் மற்றும் இறத்தல்.

முகாமை

  • பாதிக்கப்பட்ட மரங்ளையும் கிளைகளையும் அகற்றி அவற்றினை எரிக்கவும்.
  • பரிந்துரைக்கப்பட்ட படைக்கொல்லிகளை பிரயோகிக்கவும்.  

நீருடன் இரசாயணக் கலவை  1:1 உதாரணம் : பிப்ரோனில் (Fipronil) கோண வடிவில் தண்டினை துளைத்து அடித்தளத்தில் இருந்து 30 செ.மீ. இருந்து 60செ.மீ. வரையில் சுமார் 1 செ.மீ. அளவிலான துளைகளை அமைக்க அத்துடன் துளையினுள் இரசாயண திரவத்தை பிரயோகிக்கவும்.

இரண்டு வாரங்களுக்கு பின்னர் மீண்டும் அவ்வாறு செய்யவும்.

  •  வளை கம்பிப் புழு (White grub)

அனோமலா மற்றும் ஹோலோட்ரிச்சியா எஸ்.பி. தாவரங்களை பெரிதும் பாதிப்பு அடையச் செய்கின்றன. லாவா வேர்களுக்கு (மண்மேற்பரப்புக்கு  அருகாமையில்) ஊட்டுகின்றது. அத்துடன் தாவரங்களின் அடித்தள தண்டுகளில் பட்டைக்கு உணவளிக்கின்றன. தாவரங்களில் இலைகள் மஞ்ஞள் நிறம் அடைகின்றது. அத்துடன் அவை பின்னர் இறக்கின்றன.

முகாமை

  • செடியை சுற்றி மண்ணை தோண்டி அத்துடன் லாவாக்கலை அகற்றவும்.
  • உலர்ந்த கொம்போஸ்ட் உரத்தை பிரயோகிக்கவும்.
  • மரத்தை சூழ உள்ள மண்ணில் பரிந்துரைக்கப்பட்ட பூச்சி கொல்லிகளை பிரயோகிக்கவும்.
  • 10 லீ. தண்ணீரில்  தியோமெடாக்சாம் 20 + சோலோராம்ட்ரானிலிப்ரோம் 20 கலவை (விர்டாகோ 40 டபிள்யூஜி) 5 கிராம் சேர்க்கவும்.
  •  அளவிலான பூச்சி (பிளானோகோகஸ் எஸ்பி)

மென்மையான  இலைகள் தளிர்கள் என்பவற்றில் இருந்து கலச்சாறு உறிஞ்சும். பூச்சுக்களில் தேன் பாணி சுரப்பதன் காரணமாக இலைகள் மீது சூட்டி பங்கஸ் அச்சுகளை அவதாணிக்கலாம்.

முகமை

  • நன்கு பாதிக்கப்பட்ட கிளைகளை அகற்றி எரிக்கவும்.
  • பரிந்துரைக்கப்பட்ட இரசாயணங்ளை பிரயோகிக்கவும்.

ஃபைப்ரோனில் 50 கிராம் / லீ எஸ்சி – 10 லீ தண்ணீரில் 5 மில்லி.

தியாமெதோக்ஸாம் 25 ஜி – 10 லீ தண்ணீரில் 5 கிராம்

நோய்கள்

கிராம்பு இலை விழும் ​நோய்

நோய் அறிகுறி முதிர்ந்த மற்றும் முதிர்ச்சியற்ற இலைகள், மொட்டுகள் மற்றும் தண்டுகள் சிவப்பு பழுப்பு நிற புள்ளிகளைக் கொண்டு காணப்படும். புள்ளிகள் ஒன்றிணைவதன் மூலம் சிவப்பு பழுப்பு நிற கறைப் படிவுகள் உருவாகின்றன.  டிஃபோலியேஷன் (முதிர்ந்த மற்றும் முதிர்ச்சியற்ற இலைகள்) மொட்டு விழும் மற்றும் கடுமையான சந்தர்ப்பங்களில் இறந்து போகும்.

தாவரங்கள், நாற்று மேடையில் உள்ள கன்றுகள் அதேப் போல் மரங்களின் வயது வித்தியாசமின்றி அனைத்து மரங்களிலும்  நோய் ஏற்படுவது பொதுவானது.

காரண உயிரினம்: சிலிண்ட்ரோக்ளாடியம் எஸ்பி (Cylindrocladium sp)

கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்

1. பாதிக்கப்பட்ட அனைத்து இலைகள் மற்றும் மொட்டுகளை சேகரித்து எரிக்கவும் அல்லது கூட்டெறு தயாரிக்கவும்.

2. பாதிக்கப்பட்ட அனைத்து கிளைகளையும் அகற்றி எரிக்கவும்

3. இரசாயன கட்டுப்பாடு

பின்வரும் இரசாயண பொருட்களில் ஒன்றைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.

இரசாயணம் பிரயோக விகிதம் பிரயோக காலம்
கார்பென்டாசிம் 50% (w / w) wp 350ppm 7g/10L நீர் 2 வார இடைவெளியில் 3 முறை
தியோபனேட் மெத்தில் 70% 420ppm 6g/10L நீர் 2 வார இடைவெளியில் 3 முறை

மறுமொழி இடவும்